கொடுமை கொடுமைன்னு சாமிகிட்ட போனா…

Kodumai kodumainu saamikitta pona

கதை கேட்கும் ஆர்வலர்களுக்கு, சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் குட்டிக் கதைகளில் இன்று உங்களுக்காக சத்குரு சொல்லும் இரு கதைகள். படியுங்கள், சிரியுங்கள், சிந்தியுங்கள்…தொடர்ந்து பகிருங்கள்.

இன்னும் எவ்வளவு தூரம்?

ஒரு சர்வாதிகாரியின் நாட்டில் மரண தண்டனை பெற்ற ஒரு மனிதரை இரு காவலர்கள் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஒரு காட்டுக்குள் நடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். காட்டில் வெகுதூரம் சென்று அவரை சுட்டுக் கொன்றுவிட்டு திரும்பிவிட வேண்டும் என்பது வீரர்களுக்கான கட்டளை. மூவரும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தபோது குளிரும், மழையும் இவர்களை வாட்டியது. பாதையும் சேறும், சகதியுமாக இருந்தது. இதைப் பார்த்த அந்த கைதி, ‘மரண தண்டனைதான் கொடுப்பது என்று முடிவாகிவிட்டதே, எதற்காக கஷ்டப்பட்டு என்னை இத்தனை தூரம் காட்டுக்குள்ளே அலைக்கழிக்கிறீர்கள்?’ என்று குறைபட்டுக் கொண்டான். இதைக் கேட்ட ஒரு வீரன் சொன்னான், ‘உனக்காவது பரவாயில்லை. நீ திரும்பி வரப்போவதில்லை. எங்களைச் சொல், மீண்டும் இவ்வளவு தூரம் திரும்பி நடக்கவேண்டும்.’

நான் ஏன் சாதுவானேன்?

கொடுமை கொடுமைன்னு சாமிகிட்ட போனா… , Kodumai kodumainu saamikitta pona ....

ஒரு மனிதருக்கு தன் மனைவியுடன் தீராத சண்டை இருந்து வந்தது. அப்போது அந்த ஊரில் ஒரு சாது, நகரின் ஒதுக்குப்புறமாகத் திரிந்து கொண்டிருந்தார். எனவே அந்த மனிதர் அந்த சாதுவிடம் சென்று வணங்கி, ‘சாமி, என் மனைவி என் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறாள். தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன். இதிலிருந்து தப்பிக்க, நீங்கள் என் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்களேன்!’ என்று கேட்டார். அதற்கு அந்த சாது சொன்னார், ‘ஏய் முட்டாளே! இதற்கு தீர்வு சொல்ல முடிந்தால், நான் எதற்கு இங்கே சாதுவாகி உட்கார்ந்திருக்கிறேன்? ஹரி ஓம்!’ என்றார்.

Photo Courtesy: canopic , Arian Zwegers .@flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert