காசியில் அந்நியர்களால் ஏற்பட்ட சிதைவுகளையும் காசியின் இன்றைய அவலங்களையும் கூறும் இந்தப் பகுதி, காசியின் வரலாற்றுப் பின்புலத்தைக் கூறும் சத்குருவின் சத்சங்கத்தையும் கொண்டு சுவாரஸ்யமாகிறது...

காசி - உண்மையைத் தேடி... பகுதி 3

மஹேஷ்வரி:

எவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தக் கோயில், பராமரிக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இத்தனை புராதணம் வாய்ந்த இத்தனை சக்தி மிகுந்த இந்தத் தலம் தூய்மையின்றி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியது. கோயிலுக்குள்ளேயே பல வருடங்களாக பணி புரிபவர்களுக்குக் கூட அந்த கோயிலின் மகத்துவம் தெரியவில்லை.

காசி விஷ்வநாதரை பணம் பண்ணும் இயந்திரமாக பயன்படுத்துவது, எதற்கெடுத்தாலும் பணம் கேட்பது என்று காசியின் பெருமையை குலைக்கும் விதமாக நடந்து கொள்பவர்களைப் பார்த்தால் காசி இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் அனைவரையும் தொற்றிக் கொண்டது!
கிணற்றுக்குள் வீசப்பட்ட காசி-விஷ்வநாதர்

கிணற்றுக்குள் வீசப்பட்ட காசி-விஷ்வநாதர் -1
காசி சிவனின் திரிசூலத்திலிருந்து உதித்தது என்று புராணங்கள் கூறுகின்றன. காசி 4 யுகங்களுக்கு முன்னே தோன்றிவிட்டதாக கதைகள் இருக்கின்றன. 5000 வருடங்களுக்கு பழமையான மகாபாரதத்திலும் காசியைப் பற்றி விவரங்கள் இருக்கின்றன.

ஆனால், இப்போது காசியின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் முழுவதுமாக அழிக்கப்பட்டு, வெறும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் செய்யப்படும் வழிபாடுகள் நம்மை கலங்க வைக்கிறது.

காசியில் சத்குரு சத்சங்கம்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாங்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சத்குருவின் சத்சங்கம் துவங்கியது. சத்குருவை பார்ப்பதே ஆனந்தம். அதுவும் காசியில் சத்குருவை பார்ப்பதென்றால்... சத்குரு எங்களுடன் சுமார் 3 மணி நேரம் இருந்தார். காசியின் மகத்துவத்தை பற்றி அவரும் சொல்ல நாங்கள் இன்னும் கலங்கிப் போனோம்.

சிவன் “நான் இந்த இடத்தை விட்டு செல்லவே மாட்டேன்” என்று வாக்களித்த இடம் காசி. சத்குரு காசி நகரத்தின் வடிவமைப்பை (geometry of kasi city) விளக்கினார். "நம் உடல் என்பது பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உலகமும் பஞ்சபூதங்களால் ஆனது. அப்படிப் பார்த்தால் நம் உடலே குட்டி பிரபஞ்சம்தான்! (micro cosmos) அதை இந்த பிரபஞ்சத்துடன் இணைக்க ஒரு தொடர்பு ஏற்படுத்த வேண்டும் இந்த தொடர்பே காசி நகரம்.

நம் உடலில் 72,000 நாடிகள் இருக்கின்றன. அது போல் 72,000 தெய்வங்கள் இருப்பது போல் காசி நகரத்தில் 26,000 கோயில்கள் கட்டப்பட்டன. அது போல நம் உடலில் இருக்கும் 108 சக்கரங்களுக்கு ஏற்றார்போல் 54 சிவன் கோயிலும் 54 சக்தி கோயிலும் இருக்கிறது. காசி நகரத்தின் வடிவமைப்பே நம்மை இந்தப் பிரபஞ்ச சக்தியுடன் இணைத்துக் கொள்ளும் விதமாக இருக்கிறது," என்றார்.

திரையில் (power point) காசியின் வடிவமைப்பு காண்பிக்கப்பட்டது. அதன் மையத்தில் இருப்பது காசி விஷ்வநாதர் கோயில், அந்த வடிவமைப்பு பிரகாரம் காசி விசாலாக்ஷி கோயில் அன்னப்பூரணி கோவில் என்று காசி நகரத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கும் விஞ்ஞான முறைப்படி அமைக்கப் பட்டிருந்தது.

மேலும், "காசியில் மொத்தம் 26,000 கோயில்கள், ஆனால் அதில் இப்போது 3000 கோயில்கள் மட்டுமே உள்ளன. மற்றவை முகலாயர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுவிட்டது. இந்த சக்தி வட்டத்தின் மையத்தில் காசி விஷ்வநாதர்.

காசி விஷ்வநாதர் தான் இந்த அமைப்பின் உச்சபட்ச சக்திநிலையை கொண்டுள்ளார். (Kashi Viswanathar temple is the core of this geometry). இதை எடுத்துவிட்டால் காசி அழிந்துவிடும் என்று எண்ணி முகலாய படையெடுப்பின்போது காசி விஷ்வநாதரை அங்கிருக்கும் இடத்திலிருந்து அகற்றி கிணற்றிற்குள் தூக்கி எறிந்து விட்டனர். பின்பு பல வருடங்களுக்கு பிறகு அந்த கிணற்றிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டு விட்டது.

காசி விஷ்வநாதர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காசியின் சக்திநிலை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை. நீங்கள் காண்பது அதன் மிச்சம்தான்.
அந்த மிச்சமே இது போன்ற பிரமாதமான அனுபவத்தை நமக்கு அளிக்கும்போது உண்மையில் காசி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அது அழிந்து விடும்,” என்று சத்குரு சொன்னதும் அனைவரது கண்களிலும் கண்ணீர்!

'காசி' நம் கலாச்சாரத்தின் உச்சபட்ச சாதனை! ஆனால் அது இப்போது இருக்கும் விதம் இந்த வரலாற்றுப் பிழையால் வந்த தீராத வேதனை!

நமது இந்த பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட இந்த அழிவு இனி நம் கலாச்சாரத்திற்கு ஏற்படக் கூடாது. நம் கலாச்சாரம், நம் கோயில்கள், அதன் பின் இருக்கும் விஞ்ஞானம் இவற்றை நாம் தான் பாதுகாக்க வேண்டும். காசி போன்ற ஒரு நகரத்தை இனி நம்மால் உருவாக்க முடியாது! இனி மிச்சமிருக்கும் கோயில்களையும், நம் தேசத்தின் பெருமையையும் நாம் தான் காக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் எண்ணமாகவே இருந்தது.

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

புத்தர் தன் சீடர்களுக்கு ஞானம் வழங்கிய இடமான சாரநாத்திற்கு தாங்கள் மேற்கொண்ட பயணத்தையும், சத்குருவின் கைகளுக்கு வந்த கங்கா ஆரத்தியை பற்றியும் அடுத்த வாரம் எடுத்துரைக்கிறார் மஹேஷ்வரி...!

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் 21-25 தேதிகள் வரை நடக்கவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333
இ -மெயில்: tn@sacredwalks.org