ஹெலிகாப்டர் பைலட் உரிமம் வாங்குவதற்காக குறிப்பிட்ட மணி நேரங்கள் பறந்திருக்க வேண்டும். எனவே இந்த வாரத்தை அதிக நேரம் பறப்பதில் செலவு செய்தேன். எனக்கிருக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தால் என்னால் இந்த தடவையே உரிமம் பெற முடியுமா என சந்தேகம் வருகிறது. முதல் நீண்ட தூரப் பயணமாக, அட்லாண்டாவிற்கு சென்று திரும்பி வந்தேன். பலத்த மேகங்கள், இலேசான மழை, நெடுந்தூரம் பார்க்க முடியாமல் இருந்தது ஆகியவை காரணமாக பயணத்தின் சில பகுதிகளில் மரங்களின் உயரத்திற்கு ஹெலிகாப்டரை கீழிறக்க வேண்டியிருந்தது. பயணம் மிகவும் சவாலாக இருந்தது.

அட்லாண்டாவில் ஷாம்பவி மஹாமுத்ரா தியான தீட்சை மிகவும் நன்றாக நடைபெற்றது. நேரம் ஒன்றே குறையாய் இருந்தாலும் ஆர்வத்துடன் அவர்கள் பங்கு பெற்ற விதம் நெகிழ்ச்சியாய் இருந்தது. அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையோர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர். ஒரு சிலர் வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்தனர். ஷாம்பவியின் வசியமும் ஆசீர்வாதமும் மேன்மேலும் பலரை அடைந்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சொட்டு ஆன்மீகமாவது கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமும் ஆசையும். இந்த ஒன்று மட்டுமே மக்கள் தங்களுடைய தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் எதிராக செயல் செய்ய மாட்டார்கள் என்பதற்கான ஓர் வாக்குறுதி

இன்று புத்த பூர்ணிமா. கௌதமர் புத்தராக மலர்ந்த அந்த பௌர்ணமி இரவு...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரம்... நிலவு... மனிதன்...

அரச சுகங்களிலும் அரசாற்றாலாலும் சூழப்பட்டுள்ள ஓர் இளவரசன்

அறியாமையின் வலியால் உலுக்கப்பட்டு, பாமரன் தேடும் அனைத்தும் விடுத்து

அந்த அரியணையின் சக்தி, மாளிகையின் ஆடம்பரம், அன்பான மனைவியின் அருகாமை, தன் மழலையின் இனிமை

அறியாமையின் வலி மனதை எரித்திட தேர்ந்தெடுத்தான் பிச்சை பாத்திரத்தை

அறியாமையின் வெறுமை சூழ, நிலைமாற்றம் பெற்று அசாத்திய மனிதராய் ஆக துடிக்க

அறிதலின் மலர்ச்சி தன்னுள் கனலாய் தேடுபவனுக்கு மறுக்கப்பட மாட்டாது

நிலவின் குளுமை மலர்வதற்கோர் நல்ல சூழ்நிலையாய் அமைய

அது தணித்தது தாகத்தை... ஓ! அறிதலின் மலர்ச்சி

அன்பும் அருளும்,