கவிதை: கைதாளங்களும், மத்தளங்களும்

Darshan at iii

 

Darshan at iii

 

 

[translate lang=english]

Of Cymbals and Drums

 

A gleeful meeting of

Sound and silence

Becomes the ‘Sundar Sangeet’  (beautiful music)

Of Shiva’s Thunderous dance.

 

Cymbals and drums

Poor cousins of my silence.

Have to beat them to get

Something out of them.

 

Shiva’s silence can

Drip galaxies for free.

Oh yes there is space for

You, You and You too.

 

The power and beauty

Of this endless space.

 

Touch it with your song

Touch it with your dance

Touch it with your stillness

Even a scream will do.

 

Touch it and you

Will drip ecstasy.

[/translate] [translate lang=tamil]

முரசுகளும் மத்தளங்களும்

 

ஓசைக்கும் மௌனத்துக்கும் நிகழும்

உற்சாக சந்திப்பில் உருவாகிறது

சிவதாண்டவத்துக்கான

சுந்தர சங்கீதம்.

 

முரசுகளும் மத்தளங்களும்

என் மௌனத்துக்கு பொருந்தாத சகாக்கள்.

அவர்களிடமிருந்து எதையாவது பெற

அடிகள் போட வேண்டியுள்ளது.

 

சிவனின் மௌனமோ

பிரபஞ்சத்தையே மூழ்கடிக்கும் பிரவாகம்.

உள்ளது அதில் இடம்..

உங்களுக்கும், உங்களுக்கும், உங்களுக்கும் கூட…

 

சக்தியும் அழகும் மிக்கது

எல்லையற்ற இந்த வெற்றிடம்.

 

இதனை உங்கள் பாடலால் தொடுங்கள்

இதனை உங்கள் ஆடலால் தொடுங்கள்

இதனை உங்கள் அசைவின்மையால் தொடுங்கள்

ஓர் அலறல் கூடப் போதும்.

 

அதனைத் தொடுங்கள்

பரவசத்தில் ஆழ்வீர்கள்.

[/translate]

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert