காசியின் ரகசியங்களை ஒரு ஞானியின் வாயிலாக அறிந்திடுங்கள். அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒரு மதிப்பில்லா பொக்கிஷம் இந்த டிவிடி.

பாகம் ஒன்றில், காசிநகரின் அமைப்பு, சுற்றியுள்ள கோவில்கள் சிறப்பு, இவற்றால் சிவனே காசி மேல் கொண்டிருந்த தீராக் காதல் இவற்றைப் பற்றி பேசிய சத்குரு, பாகம் இரண்டில், காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சந்தேகங்களுக்கு தொடர்ந்து விளக்கமளிக்கிறார்.

கங்கை, நதிகள் சங்கமம், நீரின் புரிந்து கொள்ளும் தன்மை, கங்கா ஸ்நானம், காசியில் உயிர் விடுவது, புதைப்பது-எரிப்பது, காசி ஒரு மகா மயானம், காலபைரவர், முக்தி, பிசாசுகளுக்கும் முக்தியளிக்கும் பிசாசு மோட்சன கோயில், அகோரி போன்ற பல விஷயங்கள் குறித்து அவரது விளக்கங்கள், இதில் தொடர்கின்றன.

Kashi, new relases, Sadhguru, isha, yoga, meditation, kriya, q&a

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உதாரணத்திற்கு சில கேள்விகள்:

  1. எப்படி கங்கை நீருக்கு சக்தி வந்தது? சாதாரண நீரை தீர்த்தமாக்குவது சாத்தியமா?
  2. நதிகள் சங்கமத்தின் முக்கியத்துவம் என்ன?
  3. காசியில் ஒருவர் மரணமடைகிறபோது என்ன நடக்கிறது?
  4. ஏன் அனைவரும் காசியில் உடல்விட விரும்புகிறார்கள்?
  5. காசியில் ஏன் மரண சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம்?
  6. காலபைரவர் வழிபாட்டின் அடிப்படை என்ன? காலபைரவர் சிவனின் அம்சமா?
  7. பைரவியாத்னா முக்கியத்துவம் என்ன?
  8. அகோரிகள் பற்றி சொல்லுங்களேன்...

சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களைக் கேட்பவர்கள், ஏற்கனவே காசிக்கு சென்றிருந்தாலும், இன்னொரு முறை காசிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும்.

காசி யாத்ரா

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கன மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. அக்டோபர் 15ம் தேதி முன்பதிவுக்கான கடைசி நாள்.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333