'யக்ஷா' கொண்டாட்டத்தில் மூன்றாம் நாள் நிகழ்ச்சி எப்படி அமைந்தது... இங்கே சில வார்த்தைகள்!

இன்றைய விழாவில் திரு.டி.வி. சங்கர நாராயணன் அவர்களின் கர்நாடக குரலிசை நிகழ்ச்சி காண வந்த அனைவரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது.

கர்நாடக இசையின் நுணுக்கமான வடிவங்களை சரளமாக கையாளும் கலைத்திறத்தை தனது இயல்பிலேயே பெற்றுள்ள திரு.டி.வி.சங்கர நாராயணன் அவர்கள், இசையின் மீது பேரார்வம் மிக்கவராவார். இயற்கையாக தனக்குள் அமைந்த இசை ஞானத்தாலும் இவரது இசை அனுபவத்தாலும் இசையின் புதிய பரிமாணங்களில் தனது புதிய முயற்சிகளை பரிட்சித்து வெற்றிகண்டுள்ளார் என்பது இவரது சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

அந்த ஒப்பற்ற கலைஞரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நான்காம் நாள் யக்ஷா திருவிழாவில் (13, பிப்ரவரி) பண்டிட் ராஜன் மிஸ்ரா - பண்டிட் சாஜன் மிஸ்ரா அவர்களின் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியை http://mahashivarathri.org/yaksha-2015-live-webstream/ என்ற இணைய முகவரியில் இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.