கர்மா மற்றும் செயல் ஆகியவற்றை வெவ்வேறென்று புரிந்துகொண்டு, குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு சத்குருவின் இந்த விளக்கம் நிச்சயம் தெளிவைத் தரும்! கூடவே கர்மாவை சரிசெய்ய சத்குருவின் ஆசியும் உரித்தாகிறது!

சத்குரு:

உங்கள் முன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சூழ்நிலையும் வாய்ப்பாய் விரிந்து நிற்கிறது. அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் மேலே உயரலாம் அல்லது கீழும் விழலாம். எப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்தாலும் சரி, எப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் சரி, வாய்ப்பு உங்கள் கையில்தான் உள்ளது.

அந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. அதுதான் உங்கள் கர்மா அல்லது உங்கள் செயல்.

அதாவது உங்கள் கர்மா என்பதே உங்கள் செயல்தான் என்பதை எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ அப்போதே அதை நீங்கள் சரிசெய்து கொள்வீர்கள். அப்படியும் நீங்கள் சரிசெய்யவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம்தான், உங்கள் செயலுக்கு நீங்கள்தான் காரணம் என்பதை மறந்து வேறு எதுவோ அல்லது யாரோ காரணம் என்று நினைக்கிறீர்கள். எப்போது உங்கள் செயலில் நீங்கள் முழு விழிப்புணர்வை கொண்டுவருகிறீர்களோ அப்போதே உங்கள் உயர்ந்தபட்ச சாத்தியத்தை நீங்கள் நெருங்குகிறீர்கள். உங்கள் செயலில் நீங்கள் முழு விழிப்புணர்வை கொண்டுவர நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.