‘நண்பனின் கல்யாணத்திற்கு அவன் வியக்கும் அளவிற்கு ஒரு பரிசைக் கொடுத்திடணும்!’ - இது நண்பனின் எண்ணம். ‘கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமா இருக்கணும்!’ - இது மணமக்கள், அவர்களின் பெற்றோர்களின் எண்ணம்! இவ்விரண்டும் ஈடேறும் வகையில், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்யாணங்களில் இனி காட்டுப்பூ இதழுக்கான சந்தாவைக் கல்யாணப் பரிசாக்கலாம்!

கல்யாணத்திற்கு என்ன பரிசளிக்கலாம் என நண்பர்களுடன் ஆலோசனை செய்து, கிடைத்த ஆலோசனையை எல்லாம் ஏதோ ஒரு குறை சொல்லித் தவிர்த்துவிட்டு, கல்யாணம் நெருங்கி வந்துவிட்ட நிலையில், கல்யாணத்துக்கு முந்தைய நாள் அவசர அவசரமாக அருகிலிருக்கும் ஒரு கடையில் ஒரு சுவர்க் கடிகாரத்தை வாங்கிப் பரிசளிக்கும் நண்பர்கள் ஏராளம்.

ஈஷா மையத்தில் நிகழ்ச்சி நடக்கும்போது என்ன உணர்வு இருக்குமோ, அதே உணர்வு திருமண மண்டபத்தில் அனைவருக்கும் ஏற்பட்டது.

அதேபோல்... சாப்பாடு, தோரணம், அலங்காரம், டிஜிட்டல் பேனர், பேண்டு வாத்தியம், பட்டாசு என பலவற்றையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்துவிட்டாலும், இதெல்லாம் இரண்டு நாட்களில் மறந்துவிடுமே என ஒரு மனக்குறையுடன் வலம் வரும் திருமண வீட்டார்களும் ஏராளம். இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஈஷா காட்டுப்பூ மாத இதழுக்கான சந்தாவைக் கல்யாணப் பரிசாக வழங்கும் வாய்ப்பு தற்போது காத்திருக்கிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு கேள்வி-பதில்கள், கட்டுரைகள், ஈஷா செய்திகள், ஈஷா நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களையும் தாங்கியபடி, மாத இதழாக வெளிவரும் ஈஷா காட்டுப்பூ புத்தகங்களை திருமண விருந்தாளிகள் மாதந்தோறும் பெறும் வகையில், அதற்கான சந்தாவை அவர்களுக்குப் பரிசாக வழங்கலாம். இதனால் அந்த மாதம் மட்டுமில்லாமல், அந்த வருடம் முழுவதும் அவர்கள் நினைவில் இந்த நிகழ்வு நிற்கும் விதமாக செய்திடலாம்.

காட்டுப்பூ சந்தா எப்படி வித்தியாசமான பரிசாக இருக்கும்..?

பரிசு என்றால் விலை உயர்ந்ததாக, மறக்க முடியாததாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எந்த ஒரு விலை உயர்ந்த பொருளை நீங்கள் அன்பளிப்பாக வழங்கினாலும் அது ஒன்று... வீட்டில் காட்சிப் பொருளாகி ‘ஷோகேஸை’ அலங்கரிக்கும் அல்லது பீரோக்களில் முடங்கிக் கிடக்கும்.

ஆனால் காட்டுப்பூ இதழுக்கான சந்தா, அவர்களுக்கு ஒரு ஆன்மிக வாய்ப்பாகிறது! காட்டுப்பூ புத்தகங்கள் மூலமாக தங்கள் வாழ்வு மாறியது என்று பகிர்ந்துகொள்ளும் பலரையும் இன்று நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு மாத இதழையும் சேர்த்து வைத்து, அவ்வப்போது வாசிப்பதன் மூலம் புதியதொரு தெளிவு பிறக்கிறது என பலரும் நெகிழ்ந்து கூறுகிறார்கள். அத்தகைய ஒரு வாய்ப்பை உங்கள் திருமணமோ அல்லது உங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளோ மற்றவர்களுக்கு வழங்கட்டுமே!

இதுபோன்று சுபநிகழ்ச்சிகளுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் காட்டுப்பூ சந்தாவை நீங்கள் பரிசாக வழங்க முன்வரும்போது, அதற்காக சந்தா தொகையில் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு... 96770 16700 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

வாசகரின் பகிர்தல்

எனது மகனின் திருமணம், 20.08.2015 அன்று ஈரோடு பெருந்துறை ரோடு ஸ்ரீகௌரி அரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் குறித்து நானும் என் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது, திருமணத்திற்கு வருபவர்களுக்கு சுமார் 1000 ‘ஈஷா காட்டுப்பூ’ புத்தகங்களும், ஓராண்டிற்கான சந்தாவையும் வழங்கலாம் எனவும், சுமார் 3000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கலாம் எனவும் முடிவு செய்தோம். சுவாமி பிரபோதா அவர்களிடம் இது பற்றிக் கூறியபோது, காட்டுப்பூ சந்தா வழங்கும் யோசனை மிகவும் அருமையான, புதுமையான முயற்சி என்று சொல்லி, அத்துடன் சுமார் 2000 ஈஷா கிரியா குறுந்தகடுகள் கொடுத்து அனுப்பினார்.

ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் திருமணத்திற்கு வந்ததோடு, திருமண விருந்தினர்களுக்கு ஈஷா காட்டுப்பூ புத்தகத்தைக் கொடுத்து, சந்தா படிவத்தைப் பூர்த்தி செய்யவும் உதவினர்.

ஈஷா மையத்தில் நிகழ்ச்சி நடக்கும்போது என்ன உணர்வு இருக்குமோ, அதே உணர்வு திருமண மண்டபத்தில் அனைவருக்கும் ஏற்பட்டது. நான் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும், குறிப்பாக - ஈஷா அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
சி.மோகனசுந்தரம்