10வது வருடமாக கைலாயம் சென்று திரும்பும் கையோடு தரிசனம் தந்த சத்குரு, கைலாயத்தை தரிசித்த உணர்வை அவர் இருப்பால் உணர்த்திச்சென்றார்.

6:22

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அழகிய மாலைப்பொழுதில் பறவைகள் பல பேசிக்கொண்டே ஆலமரத்தில் அடைந்திட, சூரியினின் வெப்பம் மெதுவாக மறைந்திட, சத்குரு வந்தமர்ந்தார். ஆசிரமவாசிகளுக்கும் கூடியிருக்கும் பிறருக்கும், தென்கைலாய அடிவாரத்தில் இருந்து கைலாயம் சென்றுவந்த சத்குருவை தரிசித்த பாக்கியம்.

6:34

ஈஷாவில் நாம் செய்துவரும் பணியில் முக்கிய பங்கு வகிப்பது ஈஷா யோகா வகுப்பாகவே இருந்துள்ளது. தெய்வீகத்தை உணர மிகப்பெரிய தடையாக இருப்பது நம் மனம்தான். மனதை பண்படுத்துவதில் ஈஷா யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் ஈஷா யோகா வகுப்பைத் தவிர, தியானலிங்கம், லிங்கபைரவி, இமயமலை யாத்திரை என்று வேறு பல கருவிகளையும் வழங்கியுள்ளோம். நம் பணியே, மலைமேல் இருந்த ஆன்மீகத்தை கீழே கொண்டுவருவது தான். அதை நாம் இதுவரை சிறப்பாகவே செய்துள்ளோம்.

6:53

நான் கைலாயத்தில் இருந்தபோது, அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தபோது, மனதிலும் இதயத்திலும் தீயாய் எரிபவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது பெரும்பாலான மக்களுக்கு வயிற்றிலும் பிறப்புறுப்புகளில் மட்டுமே இந்தத்தீ எரிகிறது. சிந்தையிலும் நெஞ்சிலும் நெருப்பு இருப்பவர்களை நாம் வரும் காலங்களில் உருவாக்கிடுவோம்.

7:33

சில கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு, புதிதாக பயிற்சி பெற்று முடித்திருக்கும் ஈஷா யோகா ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் அணியும் காவி சால்வையை ஆசிர்வதித்து வழங்கினார்.