சுற்றுச்சூழலுடன் அன்றாடம் ஒன்றியிருந்த நமது வாழ்க்கை மாறிப்போய், சுற்றுச்சூழலை நினைவுபடுத்த இன்று நமக்கு ஒரு தினம் தேவைப்படுகிறது. எத்தனையோ தினம், அதில் இதுவும் ஒன்று என்று அசட்டையாக இருக்கிறீர்களா?

சுற்றுச்சூழலுடன் அன்றாடம் ஒன்றியிருந்த நமது வாழ்க்கை மாறிப்போய், சுற்றுச்சூழலை நினைவுபடுத்த இன்று நமக்கு ஒரு தினம் தேவைப்படுகிறது.

எத்தனையோ தினம், அதில் இதுவும் ஒன்று என்று அசட்டையாக இருக்கிறீர்களா? அது தவறில்லை. ஆனால் சுற்றுச்சூழலை இதுவரை பொருட்படுத்தாததினால் நாம் பெற்றுள்ள நன்மைகளில் சில:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • பூகம்பங்கள்
  • தண்ணீர் பற்றாக்குறை
  • கேன்ஸர்
  • விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வருடத்திற்கு 34,000 என உயர்வு
  • 160 நாட்களில் இடைவெளிவிட்டு பெய்ய வேண்டிய மழை 30 நாட்களில் கொட்டித் தீர்த்து மண்ணரிப்பால் விவசாய நிலம் சீரழிவு.

இதை நாம் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருந்தோமேயானால், நமக்கு கிடைக்கக் கூடிய சில விசேஷ நன்மைகள்:

  • அனல் காற்று வீசுவதால் ஆயிரக்கணக்கில் உயிர் இழப்பு.
  • விளை நிலங்கள் அனலில் வெந்து போகும்
  • காசு இருந்தும் உணவு இல்லாத படியால் பஞ்சம், பட்டினி
  • வெப்ப பூமி இன்னும் அதிக வெப்பமாகும்
  • பாலைவனங்கள், தன் பாலையை விஸ்தரிக்கும்

வரும் 5, 10 வருடங்களில் மரம் வளர்ப்பை நோக்கி நாம் செயல்படாவிட்டால் கோடி கோடியாய் கொட்டினாலும் நம்மால் மரங்களை மீட்டு இந்த பூமியைப் பிழைக்கச் செய்ய இயலாது என்கிறார் சத்குரு.

நாம் வெளியிடும் கார்பன் அசுத்தங்களுக்கு பிராயசித்தமாய் நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரங்களாவது நடுவோம்.

நான் தயாராகத்தான் இருக்கிறேன், ஆனால் இடமில்லை, நேரம் இல்லை என்பவர்கள், உண்மையிலேயே ஏதும் செய்ய நினைத்தால் உங்களுக்கு கை கொடுக்க தயாராய் இருக்கிறது ஈஷா பசுமைகரங்கள். உங்களுக்காக பசுமைக் கரங்கள் திட்டம் இடம் தேடி, மரம் நட்டு அதை 2 வருடங்கள் வரை பராமரிக்கும்.

நாம் ஒவ்வொருவரும் களம் இறங்கிச் செய்ய வேண்டிய சமூகப் பணியை பசுமைக் கரங்கள் முனைந்து செய்து கொண்டிருக்கிறது. நேரமின்மையால் சங்கடப்படுபவர்கள், இடமில்லாமல் அல்லாடுபவர்கள் மரக்கன்று நட்டு 2 வருடத்திற்கு பராமரிப்பதற்கு தேவையான நூறு ரூபாயை நன்கொடையாக வழங்கலாம். உங்கள் மரம் எங்கு வளர்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

"எனக்காக மரம் நடுங்கள்" என்று வேண்டுவோர்...

“ISHA OUTREACH” என்று வரைவோலை/காசோலை எடுத்து

பசுமைக் கரங்கள் திட்டம்,
ஈஷா யோகா மையம்,
வெள்ளியங்கிரி மலைச்சாரல்,
கோவை 641 114

என்கிற விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் மின்னஞ்சலையும் குறிப்பிட்டால் உங்கள் மரம் எங்கு வளர்கிறது என்கிற விவரம் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பி வைக்கப்படும்.

தொ. எண்: 94425 90081
மின்னஞ்சல்: projectgreenhands@ishafoundation.org

ஆன்லைன் மூலமாக மரம் நட விரும்புவோர்...
www.giveisha.org/pgh என்கிற இணையதளம் மூலம் நன்கொடை வழங்கலாம்.