வருகிற ஜூன் 5ம் தேதி சென்னையில் உலக யோகா தின கொண்டாட்டங்களை துவங்கி வைக்கிறார் சத்குரு. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெரும் முயற்சியின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் நாளை, உலக யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 21ஆம் நாள் உலக யோகா தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில் தன்னார்வத் தொண்டர்கள் அரசுடன் இணைந்து இந்தியா முழுவதும் இலவச யோகப் பயிற்சிகளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளிகள் என பல்வேறு இடங்களில் வழங்கினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஜூன் 5, காலை 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக உப-யோகா பயிற்சியை கற்றுச்செல்லலாம். காலை 10.45 மணிக்கு முன்னதாக மைதானத்தில் இருக்கையில் அமரவும்.

இந்த ஆண்டும் உலக யோகா தினத்தை ஜூன் மாதம் முழுக்க கொண்டாடும் வகையில், ஈஷா அறக்கட்டளை பலவித ஏற்பாடுகளை செய்துள்ளது. ஜூன் 5ம் தேதியன்று உலக யோகா தினக் கொண்டாட்டங்களின் துவக்கமாக, சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நிகழவுள்ள மாபெரும் யோகப் பயிற்சி வகுப்பில் சத்குரு நேரடியாக கலந்துகொள்கிறார். சத்குருவின் முன்னிலையில் யோகப் பயிற்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கற்றுத்தரப்படவுள்ளன.

ஜூன் 5, காலை 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக உப-யோகா பயிற்சியை கற்றுச்செல்லலாம். காலை 10.45 மணிக்கு முன்னதாக மைதானத்தில் இருக்கையில் அமரவும். இவ்வகுப்பு கற்றுக்கொள்பவர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருக்கு தாங்களே கற்றுத்தருவதற்கான பயிற்சியும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. எனவே, தாங்களும் கற்றுக்கொண்டு பிறருக்கும் யோகாவின் பலன் கிடைக்கச் செய்யும் வகையில் இந்நிகழ்ச்சி அமையவுள்ளது.

கடந்த ஆண்டு உலக யோகா தினத்தையொட்டி சுமார் 650 இலவச யோகா வகுப்புகளை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் வழங்கினர். இதன் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை யோகா சென்றடைந்தது. தமிழகம் முழுவதும் பல லட்சம் மக்களை இலவச யோக வகுப்புகள் மூலமாக நமது தன்னார்வலர்கள் சென்றடைந்தனர். உலகம் முழுக்க சுமார் 1.2 கோடி மக்களை நம்மால் எட்ட முடிந்தது.

இந்த ஆண்டு இன்னும் கூடுதலான வகுப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முழுவதும் பள்ளி-கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலும், இந்த இலவச உப-யோகா வகுப்புகளை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் வழங்க உள்ளனர்.

இதற்கென பிரத்யேகமாக பயிற்சிபெற்ற ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சந்தித்து, வகுப்புகளை வழங்குவார்கள். மேலும், AnandaAlai.com/YogaDay என்ற இணைதளத்தின் மூலமும் குறிப்புகளுடன் கூடிய வீடியோ காட்சிகள் மூலமாக யோகப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள சுமார் 10,000 பள்ளிகளில் உபயோகா வகுப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உபயோகா பயிற்சியின் பலன்கள்

இயந்திர மயமாகிப்போன இந்த அவசர உலகில் சிக்குண்டு, அமைதியையும் ஆரோக்கியத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள 5 நிமிடம் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகள், அவர்களின் வாழ்வில் அற்புத மாற்றத்தை கொண்டு வருகின்றன. மக்கள் தங்களின் முழுத்திறனை உணர்ந்து, அமைதி, ஆனந்தம், அன்பு, வெற்றி என அனைத்து நல்வாழ்வையும் அடைவதற்கான அற்புதக் கருவிகளாக இப்பயிற்சிகள் அமைகின்றன.

சென்னையில் நிகழும் மாபெரும் உப-யோகா வகுப்பு பற்றிய விவரங்களுககு: 83000 11000