இந்தப் பிறவியில் ஏதேனும் பாவம் செய்தால் அதை அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டும் என்ற கூற்றுக்கள்தான் அதிகம் கேட்டிருப்போம். ஆனால் அனைத்தையும் இந்தப் பிறவியிலேயே முடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள் சத்குருவிடம் கேட்ட ஒரு கேள்வி... அதற்கு அவர் அளித்த பதில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, உங்களின் புத்தகம் ஒன்றில், அமெரிக்காவில் நடந்த 'அனாதி' யோக வகுப்பில் கலந்துகொண்டவர்களின் 'சஞ்சித கர்மா'வை கரைக்க நீங்கள் உதவியதாகவும், இனி அவர்கள் இப்பிறவியின் 'ப்ராரப்த கர்மா'வை கரைத்துவிட்டால், இதுவே அவர்களின் கடைசிப் பிறவியாக இருக்கும் என்றும் சொல்லி இருந்தீர்கள். அப்படியெனில், இதுவே கடைசிப் பிறவியாக இருக்கவேண்டும் என்று ஏங்கித்தவிக்கும் பிற ஈஷா தியான அன்பர்களுக்கும் நீங்கள் உதவுவீர்களா?

சத்குரு:

இதைக் கூடவா புத்தகத்தில் வெளியிட்டு விட்டார்கள்..? (சிரிப்பலை)

ஒருமுறை சங்கரன் பிள்ளை தன் குடும்பத்துடன் 'பிக்னிக்' சென்றார். உங்களுக்குத் தான் தெரியுமே, 'பிக்னிக்' என்று கிளம்பினால், போகும் இடத்தில் நல்ல இடம் தேடுவதிலேயே பல மணிநேரம் வீணாகும் என்று. அதேபோல் இவர்கள் அங்குமிங்கும் தேடி அலைந்ததில், ஓர் இடத்தில் கார் நின்றுபோனது. கார் டிரைவரும், "காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டது. இனி வேறு எங்கும் போக முடியாது" என்றார். உடனே சங்கரன் பிள்ளை, "பரவாயில்லை விடு. காரைத் திருப்பு. வீட்டிற்கே திரும்பிவிடலாம்" என்றாராம். (சிரிப்பலை) இது இப்படி வேலை செய்யாது. பெட்ரோல் தீர்ந்துவிட்டால், அவ்வளவு தான். அதற்கு மேல் முன்னோ, பின்னோ, வேறெங்கோ செல்ல முடியாது.

இதுவே உங்கள் கடைசிப் பிறவி என்பதால், இந்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்ததிலேயே அற்புதமானதாக இருக்கவேண்டும்.

சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசுவதில்லை. அப்படிச் சொல்லி, நாளையே நீங்கள் சோம்பேறிகளாக மாறிவிட்டால், என்ன செய்வது? இருப்பினும்... உண்மையிலேயே ஒரேயொரு நொடியேனும் நீங்கள் என்னுடன் முழுமையாக இருந்தால், இதுவே உங்களது கடைசிப் பிறவியாக இருக்கும்.

இதை நான் சொல்லிவிட்டேன் என்பதால், நாளையே நீங்கள் சோம்பேறிகளாக மாறிவிடக் கூடாது. இதுவே உங்கள் கடைசிப் பிறவி என்பதால், இந்த வாழ்க்கை நீங்கள் வாழ்ந்ததிலேயே அற்புதமானதாக இருக்கவேண்டும். அதற்கு தினமும் காலையில் எழுந்து, உங்கள் ஆன்மீக சாதனைகளை (கற்றுக் கொண்ட யோகப் பயிற்சிகள்) நீங்கள் தவறாது செய்ய வேண்டும். இதையே உங்களின் கடைசிப் பிறவியாக நாங்கள் மாற்றினாலும், அதை அற்புதமானதாக மாற்றுவது எங்கள் கையில் இல்லை... அதை நீங்கள் தான் செய்து கொள்ள முடியும். அது நடக்கவேண்டுமெனில், உங்கள் யோகப் பயிற்சிகள் தவறாது நடக்கவேண்டும்.

இதை நான் உங்களுக்கு சொல்லிவிட்டேன் என்பதால், நீங்கள் இறக்கும் வரை உங்கள் பயிற்சிகளை விடாது செய்து வரவேண்டும். நீங்கள் இறக்கும் தினத்தன்றும் கூட, காலையில் உங்கள் பயிற்சிகளை நீங்கள் செய்திட வேண்டும்.