கதை என்ற உடனே சிலருக்கு ஆர்வம் வரும், சிலருக்கு தூக்கம் வரும். இங்கே சத்குரு சொல்லும் இந்த இரண்டு குட்டிக் கதைகளைப் படித்தால் சிரிப்புடன் நல்ல சிந்தனையும் எழும் என்பதில் சந்தேகமில்லை.


சத்குரு:

எனக்கு 40 வேண்டும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு சமயத்தில் சவுதி அரேபியாவில் ஒரு இந்தியன், ஒரு நேபாளி, ஒரு பாகிஸ்தானி இரகசியமாக மது அருந்திக் கொண்டிருந்தார்கள். சவுதியில் மது அருந்துவது சட்டப்படி குற்றம். சிறிது நேரத்திற்குள் காவலர்கள் வந்து அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். நீதிபதி அவர்களுக்குத் தலா 20 கசை அடிகள் முதுகில் கொடுக்குமாறு உத்தரவளித்தார். அன்றைக்கு ஒரு விசேஷமான நாள். சவுதி இளவரசரின் நான்காவது மனைவியின் பிறந்த நாள். எனவே இளவரசர் அவர்களுக்கு கசைஅடி வழங்கும் முன்னர், ஏதாவது ஒரு சலுகை கேட்டுப் பெறலாம் எனக் கூறினார்.

முதலில் பாகிஸ்தானி. "என் முதுகில் தலையணை கட்டிக் கொள்ள அனுமதி வேண்டும்" என்றான். பின்னர் முதுகில் தலையணை கட்டி அதன் மேல் சாட்டையடி கொடுக்கப்பட்டது. ஏழாவது, எட்டாவது அடியிலேயே தலையணை பிய்ந்து மிச்ச அடிகள் அவன் முதுகில் விழுந்தன. அடுத்து நேபாளி. “எனக்கு முதுகில் இரண்டு தலையணைகள் வேண்டும்” என்றான். முதுகில் இரு தலையணைகள் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டது. 12, 13ஆவது அடியில் தலையணை பிய்ந்து மிச்ச அடிகள் அவன் முதுகில் விழுந்தன.

கடைசியாக இந்தியனிடம் இளவரசர் சொன்னார், “உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா என்பதால் உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்”. இந்தியன் சொன்னான்.“ எனக்கு 40 கசையடிகள் வேண்டும்.”. இளவரசர் வியப்படைந்தார். “40 அடிகளா?”. “ஆம் இளவரசே! 40 அடிகள் வேண்டும்” என்றான். சரி இரண்டாவது விருப்பமென்ன? “அந்த பாகிஸ்தானியை என் முதுகோடு சேர்த்துக் கட்டுங்கள்!”

முடிவு வந்துவிட்டது!

இதுதான் இந்திய மூளை...!
ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில் ‘கவனம், முடிவு வந்து விட்டது, திரும்பிச் செல்லவும்‘ என்று எழுதியிருந்தது. அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில் ‘கிறீச்‘சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டிவந்த இளைஞன் வெளியே எட்டிப்பார்த்து, ‘உங்கள மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே, எப்பப் பார்த்தாலும் கவனமா இரு, இப்படி செய், அப்படி நடன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பீங்களே, தலைவலி’ என்று சொல்லிக்கொண்டே வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது. அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாக சொன்னார், “ம், பாலம் பழுதடைந்துவிட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்”.

plusgood @ flickr