'குரு என்பவர் தேடிக்கிடைப்பவரல்லர்; குருவே நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்' என்று சத்குரு சொல்வார். ஆம்! இந்த இத்தாலி அன்பரின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் அது கண்கூடாக தெரிகிறது. இங்கே அவரது அனுபவங்கள்...

திரு. பாலோ அவர்களின் பகிர்விலிருந்து...

நான் சிறு வயது முதற்கொண்டே வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவனாக இருந்திருக்கிறேன். இருளுக்கு பின்னால் இருப்பது என்னவென அறிந்துகொள்ள விழைந்திருக்கிறேன். பயம் இருந்தது இல்லை, மரணம் பற்றி நிறையவே நினைத்து பார்த்திருக்கிறேன். வாழ்க்கையின் அர்த்தத்தை நான் சிறுவனாக இருக்கும் போதே தேட முயன்றிருக்கிறேன்.

இத்தாலிக்காரருக்கு கிடைத்த இந்திய குரு!, Italykararukku kidaitha india guru

என்னுடைய 25 வயதில் ஏற்பட்ட ஒரு பெரிய விபத்து என் மனதை கிறுஸ்துவத்தின்பால் ஈர்த்தது. இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராய் ஆனேன். என் காலம் முழுவதையும் அங்கேயே கழிக்கவேண்டும் என விரும்பினேன். மனதில் எத்தனையோ பதில் கிட்டாத கேள்விகள், அங்கும் பதில் கிடைக்கவில்லை, அங்கிருந்து வெளியேறினேன். ஆன்மீகப் புத்தகங்களை தேடிப் படித்தேன், இந்திய குருமார்களைப் பற்றி நிறைய படித்தேன். ஒருநாள் உடைந்துப் போய் அழுதேன். ஒரு நல்ல வழிகாட்டலை வேண்டி புலம்பினேன். “நல்ல ஒரு குருவை எனக்கு தரவில்லை என்றால் என்னை கொன்றுவிடு” என ஆண்டவனை வேண்டிக் கொண்டு வாழ்வின் அர்த்தம் தேடி இந்தியாவிற்கு கிளம்பினேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மும்பைக்கு வந்திறங்கிய நான், ஒரு நாள் முழுவதும் மும்பையைச் சுற்றித் திரிந்து ஏமாற்றம் அடைந்தேன். வடக்கில் ரிஷிகேஷ் சென்றால் எனக்கு குரு கிடைப்பார் என்று ஓர் எண்ணம். அடுத்ததாக பயணத்தை வடக்கு நோக்கி தொடங்க முடிவு செய்தேன். ஆனால் நான் டிக்கெட் எடுத்து வந்து சேர்ந்ததோ தென்னகத்திற்கு. நான் இறங்கிய இடம், கோயம்புத்தூர்.

அவர் கூறினார்... “நான் இத்தனை நாளாய் உனக்காக காத்திருந்தேன்...” நான் இளகிப் போனேன், என் உடல் கூறுகள் அத்தனையும் கரைந்தது.

விமானத்தில் ஏறியபோது சில பத்திரிக்கைகளை வாங்கி இருந்தேன். அவற்றை புரட்டி கொண்டிருந்தபோது, ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தில் சத்குரு அவர்களின் புகைப்படம்...” என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை, அவசரமாக அந்தப் புத்தகத்தில், அந்தச் செய்தியை முழுவதுமாய் படித்தேன். அதில் ஈஷா யோகாவைப் பற்றி எழுதி இருந்தது. அதுவும் அந்த மையம் இருப்பது நான் தங்கவிருந்த ஹோட்டலில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. மறுநாளே ஈஷா யோகா மையத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்த ஸ்வாமி ஒருவர் என்னை தியானலிங்க அருள்நிழலில் இருக்கப் பணித்தார். அந்த அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது.

டிசம்பர் 17, இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு. இடம் திருவனந்தபுரம், ஹோட்டல் அம்பாசிடர், 3 நாள் வகுப்பு. ஒரு பெரிய ஆச்சரியம். நான் மும்பையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக இங்கேதான் வருவதாக ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்து இருக்கிறேன். அங்கு சத்குரு பிரம்மச்சாரிகள் புடைசூழ வந்தார். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எல்லாரையும் இழுத்து, தள்ளி முண்டியடித்துக் கொண்டு சத்குருவின் முன் நின்றேன். ஒரு சூறாவளி போல், அவரை கட்டி அணைத்தேன். கரை புரண்ட அன்பால் அழுதேன், அவர் கூறினார்... “நான் இத்தனை நாளாய் உனக்காக காத்திருந்தேன்...” நான் இளகிப் போனேன், என் உடல் கூறுகள் அத்தனையும் கரைந்தது. அந்த 3 நாளில் எத்தனையோ நடந்தது.

சத்குரு ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை கொடுத்தார். “நான்” என்னும் தன்மை இறப்பதுபோல் இருந்தது, ஏதேதோ நடந்தது, ஒரு கையெறி குண்டை விழுங்கியதுபோல் இருந்தது. என்ன மனிதர் இவர் எனக்கு எப்பேற்பட்ட விஷயத்தை வழங்கியிருக்கிறார் என்றது என் உள்ளம். பிறகு என்னைச் சுற்றி அனைவரும் பரவசத்தில் திளைத்திருந்ததை பார்க்க முடிந்தது. 3 நாள் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.

மௌனம் என்பது எனக்கு காதல் வயப்படுத்தல் போலவே அமைந்துவிட்டது.

நான் மேலும் ஈஷா வகுப்பு ஏதாவது இருந்தால் கலந்து கொள்ள விருப்பப்பட்டேன், திருவனந்தபுரத்தில் மற்றொரு வகுப்பில் கலந்து கொண்டேன். நாங்கள் எப்பொழுதும் நாற்காலியில் உட்கார்ந்தே பழக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சி நடந்த 2 நாளும் உட்கார்ந்தே இருக்க வேண்டும் என்றால் என் நிலையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மூன்று தலையணை வைத்தாலும் கால்வலி தாங்க முடியவில்லை. வகுப்பு முடிவதற்கு ஒரு நாள் முன் என்னுடைய ஆசிரியர் என்னிடம் வந்து சத்குரு என்னை பார்க்க வரும்படி சொன்னதாக சொன்னார். நான் அவரைப் பார்க்க விரும்புகிறேன் என்றால் அவர் என் குரு அதனால் பார்க்க விரும்புகிறேன் அது சாதாரண விஷயம். ஆனால் அவர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்றால் சாதாரணமான விஷயமா?

நான் அவரை மும்பை ஏர்போர்டில் சந்தித்தேன், அவரைப் பார்க்கச் சென்றபோது அப்படியொரு பயம் என்னைக் கவ்விக் கொண்டது. நான் அவரிடம் சென்று, “சத்குரு நீங்கள் என்னை மிகவும் பயமுறுத்துகிறீர்கள்” என்றேன். அவர் சிரித்தார், பிறகு என்னிடம், “இன்னும் மூன்று நாட்களில் பாவஸ்பந்தனா வகுப்பு நடைபெற இருக்கிறது, கலந்து கொள்” என்றார். “சத்குரு நான் மூன்று நாளில் இத்தாலி செல்வதாக இருக்கிறேன்” என்றேன். அவர் என் அருகில் வந்து, அந்தப் பெரியவிழிகளால் “ஆமாவா? இல்லையா?” என்றார். ஆம், நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன்.

இத்தாலிக்கு சென்றேன். கிரியா, ஆசனா அத்தனைப் பயிற்சிகளும் செய்தேன். இதற்கு முன்னால் எதுவும் தெரியாது இருந்த நான், ஒரு வாஷிங் மெஷினில் போட்டு அடித்து துவைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். உள்ளுக்குள் அத்தனைப் புத்துணர்ச்சி. பல நேரங்களில் கண்ணை மூடினாலே சத்குருவின் முகம் கண்முன் விரிந்தது. நான் அடுத்த வருடமும் ஈஷா யோகா மையத்திற்கு வந்தேன். உயர்நிலை வகுப்பான சம்யமாவில் கலந்து கொண்டேன். சம்யமா எனக்கு மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. எனக்கு மிக எளிதாக தியானம் நிகழ்ந்தது.

நான் இங்கு ஒரு மாதம் தங்கிவிட்டு, தாய்லாந்து பயணிப்பதாய் உத்தேசித்து இருந்தேன். தாய்லாந்தில் டைவிங் விளையட்டு எனக்கு பிடித்தமான ஒன்று. இதற்கிடையில் சத்குருவின் தரிசன நேரம் காணக்கூடிய வாய்ப்பு. முதல்முதலாக சிவாங்கா விரதத்திற்காக சத்குரு தீட்சை கொடுப்பதாக சொல்லி இருந்தார்கள். அந்த தரிசன நேரத்தின்போது, சத்குரு என்னை ஒரு நிமிடம் பார்த்ததாக எனக்கு தோன்றியது. என்னவோ தெரியவில்லை, என் இருப்பிடம் சென்றதும், தாய்லாந்திற்காக எடுத்து வைத்திருந்த டிக்கெட்டை கிழித்து எறிந்துவிட்டு, சிவாங்கா தீட்சை பெற்றுக்கொண்டேன்.

சிவாங்கா விரதம் எனக்குள் மிக ஆழமான, வலுவான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு முறை சத்குரு ஏதேனும் வழிமுறை எனக்கு கொடுத்தால், அதைப் பின்பற்றினால், அது எனக்கு பெரிய சாகசமாகவே இருக்கும்.

நான் அமைதியின் மேல் தீராத காதல் கொண்டுவிட்டேன். எனக்கு தேவையான உணவினை ஏற்பாடு செய்துகொண்டு, நீண்ட மௌனத்தில் அமர்ந்து விடுவது என் வாடிக்கையாகிவிட்டது. மௌனம் என்பது எனக்கு காதல் வயப்படுத்தல் போலவே அமைந்துவிட்டது. அதை விவரிக்க சரியான வார்த்தையைத் தேடினால் கிடைக்காது என்பதே உண்மை.

இங்கு பிரம்மச்சாரிகள், சந்நியாசிகள் மௌனத்தில் அமர்ந்திருக்கும்போது அந்த அழகு அற்புதமானது, அவர்களுக்குள் நிகழும் உள்நிலை பரிமாணம் அபரிமிதமானது, அதை நிகழ்த்தும் சத்குருவின் அருள் அசாத்தியமானது. ஈஷாவில் நான் தங்கியது அத்தனை சுகமாய் இருந்தது. என் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நிகழ்காலத்தில் சுகித்திருப்பது மட்டும் எனக்கு போதுமானதாக இருந்தது. என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொடுக்க நிறைய குருமார்கள் உள்ளார்கள். ஆயினும் நம்மை ஆழ்ந்த அனுபவத்தில் திளைக்கச் செய்யும் குருமார்கள் வெகு சொர்ப்பமே.

நான் எதைக் கொடுக்க முடியும், ஒரு குருவிற்கு எதைத்தான் கொடுப்பது? நான் எதுவும் கொடுக்க முடியாது, என்னால் பெறத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.