ஈஷாவும் நானும் – ரவி வெங்கடேசன்

ஈஷாவும் நானும் – ரவி வெங்கடேசன்

முன்னாள் தலைவர், மைக்ரோசாஃப்ட் இந்தியா

ரவி என்னும் அந்த வார்த்தைக்கு பரிபூரண மரியாதை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில். கணினி என்றாலே மைக்ரோசாஃப்ட் என்று பெயர் வாங்கிய நிறுவனத்தின் முன்னாள் தலைவர். ஏதோ வேலை பளுவினால் யோகம் கற்க போய் அவர் வாழ்வையே மாற்றியமைத்த அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் திரு. ரவி வெங்கடேசன்…

திரு ரவி வெங்கடேசன்:

2002… என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அலுவலகரீதியிலும் நிறைய சவால்களைச் சந்தித்துக்கொண்டு இருந்த நேரம்!

என் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சத்குரு வந்திருந்தார். முதன்முதலாக சத்குருவை அப்போதுதான் சந்தித்தேன். அதுதான் ஆரம்பம்!

என் நண்பரின் அறிவுரைப்படி என் வாழ்க்கையில் எட்டு நாட்களை சத்குருவுடன் ஒரு வகுப்பில் கழிக்க முடிவெடுத்தேன்.

மனதைத் தொட்டுச் சொன்னால், அது என் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை. சத்குரு ஒருமுறை என் கண்களை நேரே பார்த்துச் சொன்னார். ‘‘உங்களால் உங்களையே நிர்வகிக்க முடியவில்லை என்றால், 5000 பேர் இருக்கும் நிர்வாகத்தை எப்படி நிர்வகிக்க முடியும்?’’

மிகச் சரியான கூற்று.

சத்குரு ஒருமுறை என் கண்களை நேரே பார்த்துச் சொன்னார். ‘‘உங்களால் உங்களையே நிர்வகிக்க முடியவில்லை என்றால், 5000 பேர் இருக்கும் நிர்வாகத்தை எப்படி நிர்வகிக்க முடியும்?’’
என்னை, என் உடலை, என் மனத்தை, நேரத்தை, வெளிப்பாடுகளை என்னால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்றால், இவ்வளவு பெரிய நிறுவனத்தை எப்படி நிர்வகிக்க முடியும்? அந்தக் கூற்று எனக்குள் தங்கிவிட, நான் மாறினேன். முற்றிலுமாக என்னை மாற்றியது ஈஷா யோகா!

அன்று முதல் இன்று வரை, யோகப் பயிற்சிகளை தினமும் செய்கிறேன். மிக மிக உதவியாக உணர்கிறேன். பல காலம் எனக்கு இருந்த முதுகு வலியில் பெரும்பகுதி இப்போது இல்லை என்பது முதல் உண்மை.

மனஅழுத்தம் எப்போது நம் குடும்பத்தில், அலுவலகத்தில் என ஒரு பொறுப்பு எடுக்கிறோமோ, அப்போதே வந்துவிடுகிறது. குறிப்பாக, பணிச் சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் என்பது போக்கவே முடியாததென்று நினைத்திருந்தேன். ஆனால் ஆச்சர்யம், ஈஷா யோகப் பயிற்சிகள் செய்யச் செய்ய, குறிப்பாக சூன்ய தியானம் செய்யச் செய்ய, மன அழுத்தமின்றி எல்லாவற்றையும் என்னால் தெளிவாக, தீர்க்கமாகக் கையாள முடிகிறது. இது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என் பயிற்சிகள் ஆழமாக, ஆழமாக, என்னுள் ஒருவித நிச்சலனம் ஊடுருவுவதைக் கவனிக்க முடிகிறது. இதைத்தான் விலை மதிப்பில்லாததாக அறிகிறேன்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமானதாகத் தெரிவது சத்குருவும் ஈஷாவின் அங்கத்தினர்களும் என்னுடன் கொண்டுள்ள தொடர்பின் நெருக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஈஷாவில் திரிந்துகொண்டு இருப்பதே, இப்போது என் விருப்பம். அங்கிருக்கும் புத்துணர்வு மையமும், பிரத்யேக அமைதியும், சக்தியும் எப்போதும் என்னைக் கவர்கின்றன.

என் தாய் தந்தையரின் இழப்பு நேர்ந்த தருணங்களில் மையத்தினரும் சத்குருவும் என்னுடன் இருந்தது என் வரம், பலம். ஈஷாவின் சமூகநலத் திட்டங்கள் சிலவற்றில் தற்போது பங்கெடுத்திருக்கிறேன். என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன அந்தச் சின்னச் சின்னப் பங்களிப்புகள்.

சத்குரு கூறிய ஒன்றிரண்டு வாக்கியங்கள்கூட எவ்வளவு அருமையாக வேலை செய்கின்றன தெரியுமா!

ஆம்! என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ரவி, இப்போது இனிமையானவன்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert