ஈஷாவும் நானும் – பிரகலாத் கக்கர்

ஈஷாவும் நானும் – பிரகலாத் கக்கர்

விளம்பரப் படத் தயாரிப்பாளர்

பிரகலாத் கக்கர் – இந்தியாவின் முன்னோடி விளம்பரப் படத் தயாரிப்பு நிறுவனமான “Genesis Film Productions” ன் நிறுவனர். “பெப்சி” விளம்பரத்தில் பிரசித்தி பெற்றவர். 1971லிருந்து விளம்பரத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஈஷா யோகா வகுப்புகள் எப்படி திருப்பு முனையாக அமைந்தது என்பதை அவருடைய இந்தப் பகிர்தலிலிருந்து அறிந்து கொள்வோம்.

திரு.பிரகலாத் கக்கர்:

ஈஷா வகுப்பில் நான் சேர்ந்தபோது அது என் வாழ்க்கையை இவ்வளவு தூரம் மாற்றும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ‘இது என்ன?’ என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் இங்கு வந்தேன். நிறைய விஷயங்கள் படித்திருக்கிறேன். உலகில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால், ஈஷா வகுப்பும் சத்குருவின் தொடர்பும் என் வாழ்க்கையை வெகுவாக மாற்றிவிட்டது.

ஈஷா வகுப்பு செய்த பிறகு, என்னுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், என்னை நீண்ட நாட்களாக அறிந்தவர்கள், என்னிடம் தீடீரென்று இரண்டு பெரிய மாற்றங்களை உணர்ந்தார்கள்.
ஈஷாவில் குறிப்பிடத்தக்க விஷயம், நம்மை உள்நோக்கிப் பார்க்கவைப்பதுதான். இவ்வளவு நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையில் நான் உள்ளே பார்க்கவே இல்லை. உள்ளே எத்தகைய சக்தி இருக்கிறது என்று உணரவே இல்லை. ஈஷா யோகா வகுப்புகள் நம்மை உள்ளே பார்க்கவைப்பதுடன், நமக்குள் இருக்கும் இறைத்தன்மையுடன் தொடர்புகொள்ளவும் உதவுகிறது.

ஈஷாவில் ஈடுபட்டதன் பின் எனக்கு மிகவும் சக்தி கூடிவிட்டதாக உணர்கிறேன். களைப்பின்றி இன்னும் அதிக நேரம் என் அலுவலகத்தில் செலவிட முடிகிறது. என்னுள் இத்தனை மாற்றங்களா! என்று இப்போது வியக்கிறேன்.

என் கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க நிறையச் சத்தம் போட்டிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன். ஆனால், ஈஷாவில் யாருமே எதையும் ஒரு வேலை போல் செய்வதில்லை. இங்கு அனைவருமே எந்த வேலையையும் சுய விருப்பத்துடனும், அன்புடனும், தீவிரத்துடனும் செய்கிறார்கள். எனவே, எந்த செயலையும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று பெரிய குறிப்புகள் கொடுக்கத் தேவையே இல்லை. இது எனக்குள் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒரு விஷயம்.

ஈஷா வகுப்பு செய்த பிறகு, என்னுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், என்னை நீண்ட நாட்களாக அறிந்தவர்கள், என்னிடம் தீடீரென்று இரண்டு பெரிய மாற்றங்களை உணர்ந்தார்கள். ஒன்று என் சக்தி, கவனம், மனம் குவிப்புத்திறன் அதிகமாகிவிட்டது. மற்றொன்று, நான் முன்பு போல் பொறுமை இழப்பதில்லை என்பது. இப்போதெல்லாம் மற்றவர்களை என்னால் அன்புடன் அணுக முடிகிறது. அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு வேலையை அவர்களாகவே முடிக்க நேரம் கொடுக்கிறேன். அவர்கள் தவறுகள் செய்தாலும், அதன் மூலம் கற்றுக்கொண்டு பின் பணிகளை முடித்துத் தரும் வரை பொறுமையுடன் இருக்கிறேன். விரட்டி வேலை வாங்கும் முறை முற்றிலும் காணாமல் போய்விட்டது.

சத்குரு பற்றி எவ்வளவு சொன்னாலும், அவரை பற்றி எல்லாமும் சொல்லிவிட்ட நிறைவு கிடைக்காது. அவரிடம் என்னைக் கவர்ந்திழுத்த விஷயம், அவருடைய அறிவுத்திறன். நான் சந்தித்ததிலேயே அனைத்துத் துறைகளையும் பற்றி துல்லியமாக அறிந்து வைத்திருப்பவர் சத்குரு. அரசியல், நாட்டுநடப்பு, பொருளாதாரம், ஆட்சிமுறை, நாட்டுப்பற்று, வறுமை நிலை, வெளி உறவுத் துறை போன்ற அனைத்தையும் அறிந்துவைத்திருக்கிறார். என்ன கேள்வி கேட்டாலும் உடனடியாக அவரிடம் விடை இருக்கிறது. எது சரி, எது சரியல்ல என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். நம் நாடு மேல்நிலைக்கு வர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யவில்லை என்பதையெல்லாம் மிகவும் தெளிவாகக் கூறுகிறார். ஆன்மீகத்தில் உச்ச நிலையில் இருப்பதோடு, நமது கலாச்சாரத்தையும் பாதுகாக்க எண்ணுகிறார்.
2

அவர் பேசுவதைக் கேட்கும்போது, தான் வாழ்ந்ததை, தன் அனுபவத்தைத்தான் பேசுகிறார், புத்தகம் படித்து பேசவில்லை என்பது மிகவும் தெளிவாக உணர முடியும். மேலும் இயல்பான சமூக வாழ்க்கையைத்தான் அவர் வாழ்கிறார். இமய மலைக்குள் போய் உட்கார்ந்துகொள்ள வில்லை. இந்த உலகில் இவரைப் போல் இன்னொருவரைப் பார்ப்பது மிக மிக அரிது என்றே சொல்வேன்.

அவரைப் பார்க்க வரும் மனிதர்கள், எவ்வளவு சாமானிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் கூறும் பிரச்சனைகள் எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும் பொறுமையுடன் கேட்டு அதற்கேற்பப் பதில் கூறுகிறார். பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்று பதில் சொல்கிறார். அவர் அனைவருக்கும், தன் ஞானத்தை, தன் வாழ்வையே முழுமையாக அளிக்கிறார். பிறர் வாழ்க்கையை இந்த அளவுக்குத் தொடும் ஒரு நபரை என் வாழ்வில் இதுவரை சந்தித்ததே இல்லை. இந்த விஷயம்தான் என்னை மிகவும் உலுக்கிவிட்டது.

ஈஷா யோக மைய வளாகத்தில், சத்குருவின் வழிகாட்டுதலோடு, மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டு வரும் ஹோம் ஸ்கூல் (Home School) க்கு ஒருமுறை உரை நிகழ்த்தச் சென்றிருந்தேன். அங்கு பயிலும் குழந்தைகளுடைய அறிவுத்திறனையும், ஆர்வத்தையும் கண்டு வியந்துபோனேன். அந்தப் பள்ளியில் பயில வேண்டும் என்ற ஆசை எனக்கே வந்துவிட்டது.

ஈஷாவில் இருக்கும்போது ஒவ்வோர் அம்சத்தையும் கூர்ந்து கவனிப்பேன். அது என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி இருக்கிறது. அவர்களுடைய அணுகுமுறை, அங்கே இருக்கும் வாய்ப்புகள், மும்பை போன்ற நகரங்களில் நாங்கள் செய்யத் திணறும் விஷயங்களை இவர்கள் மிகச் சுலபமாக நேர்த்தியாகச் செய்வது எல்லாம் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தருகிறது. இத்தனை செயல்கள் இங்கு செய்ய முடிகிறது என்றால், நம்மாலும் நாம் வசிக்கும் இடத்தில் இவற்றை எல்லாம் செய்ய முடியும் என்ற ஆர்வம் மேலிடுகிறது.

ஈஷாவில், குறிப்பாக சத்குருவுடன் நான் செலவிடும் நாட்களை எப்போதும் மறக்கவே முடியாது. மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்ற விதத்தில் மிகவும் ஆழ்ந்த அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு முறை சந்தித்துவிட்டு போகும்போதும் எனக்குள் ஒரு வளர்ச்சி நடந்திருப்பதை உணர முடியும். அவரை அணுகவும், அவரது அருளைப் பெறவும், அவர் நம் வாழ்வைத் தொட அனுமதிப்பதும், நம்மால் இயலாது என்று நினைத்தவற்றை எல்லாம் அவர் ஆசியால் செய்து முடிப்பதும், தவறு செய்யும் போதெல்லாம் வழிநடத்தி நம்மைச் சரியான செயல்களைச் செய்யவைப்பதும்… இப்படி எத்தனையோ அனுபவங்களைச் சொல்லலாம்.

உண்மையில் அவரை அணுக முடிவதே ஒரு பெரிய வாய்ப்பு. எப்படியோ அந்த வாய்ப்பு எனக்கு அவ்வப்போது கிடைத்து விடுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இருகரம் நீட்டிப் பெற்றுக்கொள்கிறேன்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert