ஈஷாவும் நானும் – பத்மபூஷன் அக்பர் பதம்ஸீ

ஈஷாவும் நானும் – பத்மபூஷன் அக்பர் பதம்ஸீ

ஓவியர்

கலையும் ஆன்மீகமும் எப்போதும் ஒத்திசைந்தே இருப்பதைப் பார்க்கிறோம். அந்த வகையில், தன் வாழ்வையே ஓவியக் கலைக்காக அற்பணித்த திரு. அக்பர் பதம்ஸீ அவர்களின் இந்த பகிர்வு, ஈஷாவுடனும் சத்குருவுடனும் தனக்கு கிடைத்த அறிமுகம் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.

திரு. அக்பர் பதம்ஸீ:

நான் ஈஷாவுக்கு ஒரு புத்தகத்தின் மூலமாகத்தான் அறிமுகமானேன். நான் எப்போதும் புத்தகங்களை விரும்பிப் படிப்பவன். மும்பையில் ஒரு புத்தகக் கடைக்குப் போனபோது அட்டையில் தியானலிங்கக் கோவிலின் புகைப்படத்துடன் ஒரு ஆங்கிலப் புத்தகம் இருந்தது. கோவிலின் புகைப்படம் என்னை ஈர்த்ததால், அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அப்போது எனக்கு சத்குருவைப் பற்றி எதுவுமே தெரியாது. ஏதோ ஒரு ஆர்வத்தால் உந்தப்பட்டு அந்தப் புத்தகத்திலிருந்த கோவிலின் படங்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

நான் தினசரி அதிகாலை 45 நிமிடமாவது தியானம் செய்கிறேன். பிறகு கிரியாவும் செய்கிறேன். ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றால் கூட எதையோ இழந்ததுபோல் உணர்கிறேன்.
அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தியானலிங்கக் கோவில் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக எனக்குத் தோன்றியது. எனக்கு இப்போது 83 வயதாகிறது. என் நான்கு வயதில் ஓவியம் வரையத் துவங்கினேன். என் 21 வயதில் கலைகளின் தாயகமான பிரான்ஸிலுள்ள ஓவியப் பள்ளிக்குச் சென்றுள்ளேன். நான் சமஸ்கிருதமும் முறையாகப் பயின்றுள்ளேன். ஆனால் என் வாழ்நாளில் முதல் முறையாக இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலை அப்போதுதான் பார்க்கிறேன் என்பதை என்னால் உணர முடிந்தது.

நான் மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன். அங்கே சமண மதத்தினரின் கோவில்கள் நிறைய இருக்கின்றன. புதிய கோவில்கள்கூட பழைய கோவில்கள் போல கட்டப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை. எப்போது காலத்துக்கேற்ப கலை வடிவங்கள் உருவாகவில்லையோ, அப்போது கலை நசித்துப் போகும் வாய்ப்பு உள்ளது. ஏறத்தாழ 5,000 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய எகிப்தியக் கலை, திரும்பத் திரும்ப பழைய பாணியிலேயே தொடர்ந்ததால்தான் இன்று முழுதும் அழிந்துவிட்டது என்பது என் கருத்து!

akbar padamsee, sharing, ishavum naanum, artist, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, drawing

அந்தப் புத்தகத்தை என் மனைவி பானுவிடம் காட்டி, “நாம் அவசியம் இந்தக் கோவிலுக்குப் போக வேண்டும்’’ என்று கூறினேன். நாங்கள் அடிக்கடி பெங்களூரு செல்வோம். அப்படி ஒருமுறை சென்றபோது, அங்கிருந்து கார் எடுத்து கோயமுத்தூர் சென்று தியான லிங்கக் கோவிலுக்குச் சென்றோம். அப்போது நான் ஏதும் ஈஷா வகுப்பு செய்யவில்லை. எனவே ஆசிரமத்திற்குள் போக முடியவில்லை. கோவிலை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பும்போது கோவிலைப் பற்றியும், சத்குருவைப் பற்றியும் சில பிரசுரங்களை என்னிடம் தந்தனர். பின்னர் நான் மும்பை திரும்பிவிட்டேன்.

சத்குரு, ஈஷா யோக மையத்தில் ஹோல்னெஸ் பயிற்சியைத் தர இருக்கிறார் என்று அறிந்து குறிப்பிட்ட நாளில் ஆசிரமம் சென்று நேரடியாக நானும் என் மனைவியும் வகுப்பிற்குப் (2006-ம் ஆண்டு) பதிவு செய்து கொண்டோம். என் மனைவி ஏற்கெனவே ஈஷா யோகா வகுப்பு செய்திருந்தார்.

பிறகு ஹாலில் நுழைந்தபோது, சத்குரு புன்னகையுடன் கைகூப்பி நின்றிருந்தார். நான் அருகில் சென்ற பொழுது என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார். நான் “அக்பர் பதம்ஸீ” என என் பெயரைக் கூறி அறிமுகப்படுத்தியபோது, அவர், “நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்” எனக் கூறினார்.

பிறகு, “எது உங்களை இந்தப் பயிற்சிக்கு வரவழைத்தது?” என்று கேட்டார். பிறகு நான் அனைத்தையும் அவரிடம் சொன்னபோது மென்மையாகச் சிரித்தார். பின்னர் சத்குரு, “என் பெண்ணும் ஓவியம் வரைவதில் ஆர்வம் உடையவர். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” எனச் சொல்லி அவர் மகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் மகளிடம், அடுத்த முறை மும்பை வரும்போது, என் வீட்டிற்கு வந்து அந்த ஓவியங்களைப் பார்க்க வருமாறு அழைத்தேன். இப்படித்தான் தியானலிங்கக் கோவிலும் சத்குருவும் எனக்கு அறிமுகமானார்கள்.

ஹோல்னெஸ் பயிற்சியின் போது கிடைத்த சிறு இடைவேளையில் சத்குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சத்குரு, அவ்வப்போது ஆசிரமத்திற்கு வருமாறு கூறினார். அப்படி ஒரு முறை ஈஷா வந்தபோது, சத்குரு என்னை சந்திக்க விரும்புவதாக ஒருவர் வந்து கூறியபோது மிகவும் வியப்படைந்தேன். பிறகு அவர் என்னை சத்குருவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது சத்குரு தான் ஈஷா பள்ளியில் கலைப் பிரிவு ஆரம்பிக்கப் போவதாகவும், நான் ஒரு ஓவியர் என்பதால் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டார். அதைக்குறித்து 15 நிமிடம் பேசினோம்.

பின்னர் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஆசிரமத்திற்குப் போனபோது சத்குரு ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து வணங்கினேன். உடன் அவர் எழுந்து என்னை அருகில் அழைத்து பள்ளியில் கலைப்பிரிவு துவக்கி விட்டதைப் பற்றிக் கூறினார். அந்தக் கலைப்பிரிவில் யாரையும் ஒதுக்காமல் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினேன்.

நான் தினசரி அதிகாலை 45 நிமிடமாவது தியானம் செய்கிறேன். பிறகு கிரியாவும் செய்கிறேன். ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றால் கூட எதையோ இழந்ததுபோல் உணர்கிறேன். ஈஷாவில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் ஏற்றுக்கொள்ளும் தன்மை! இதை ஈஷாவில் அனைவரிடமும் பல விதங்களில் பார்க்க முடிகிறது.

நான் ஈஷா ஆசிரமத்துக்குப் புறப்படத் தயாரான ஒரு நாளின் இரவில்தான் பத்மபூஷன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ந்தேன். எனக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடக்கிறது என்றால், நான் இங்குத் தங்கிச் செல்வது முக்கியமான ஒன்று.
சமீபத்தில் ஒரு முறை ஈஷாவிற்குச் சென்றிருந்தபோது, கோவை ஈஷா வித்யா பள்ளியின் ஆண்டு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். நானும் ஆர்வத்துடன் சென்றிருந்தேன். கிராமப்புறப் பள்ளி என்பதால், சிறிய கிராமம் ஒன்றில் குடிசை, கூரைகள் வேய்ந்த சிறு பள்ளி ஒன்றைத்தான் என் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் சென்று பார்த்தபோது, உயரமான 2 கட்டிடங்கள். ஆனால் மிகவும் எளிமையாக இருந்தது. 20 கணிப்பொறிகள் கொண்ட லேப், நிறைய புத்தகங்கள் கொண்ட நூல் நிலையம் என்று மிகவும் கச்சிதமான ஒரு கிராமப்புறப் பள்ளியாக இருந்தது.

அந்த விழாவில் பேசியபோது சொன்னேன்: “நான் இந்த விழாவில் பரிசுகளைக் கொடுக்கத்தான் வந்தேன். ஆனால் இப்போது இந்தப் பள்ளியைப் பார்த்தவுடன் இதில் சேர்ந்து படிக்க ஆசை வந்துவிட்டது” என்று! தமிழ்நாட்டில் ஈஷா எடுத்துக் கொள்ளும் இதேபோன்ற முயற்சிகளை வெவ்வேறு நிறுவனங்கள் இந்தியா முழுக்க செயல்படுத்த முடிந்தால் இந்தியாவின் எதிர்காலத்தையே நம்மால் மாற்றி எழுத முடியும். கிராமப் புறத்தில் கல்வியைப் பரப்பும் சத்குருவின் பணி மிகப் புனிதமானது. நமது ஜனத் தொகையில் 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தில் உள்ளவர்கள். அவர்கள் மிகவும் சமயப் பற்றுள்ளவர்கள். இவர்கள் நல்ல கல்வி பெற்றால் நல்ல அரசாங்கம் அமையும். சத்குரு தொலைநோக்குடன் செயல்படுவதை உணரமுடிகிறது.

ஈஷாவின் ஆங்கில மாத இதழான ‘ஃபாரஸ்ட் ஃ ப்ளவர்’ தொடர்ந்து படிக்கிறேன். அதில் வரும் சத்குருவின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். சத்குருவைச் சந்திப்பதற்கு முன்னால் எனக்கு குரு என்று யாரும் கிடையாது. புத்தகங்கள்தான் எனது குரு. சத்குருவின் புத்தகமான ‘மிஸ்டிக்ஸ் ம்யூசிங்ஸ்’ மிக மிக அனுபவித்துப் படித்தேன். ஞானத்தைத் தரக்கூடிய அற்புத விஷயங்கள் அதில் இருக்கின்றன.

மேலும், ஆசிரமத்தில் உள்ள கோவிலின் அரைக் கோள வடிவிலான கூரை, கட்டடங்கள் மற்றும் பல இடங்களில் சத்குருவின் ரசனையையும் கலை நுணுக்கத்தையும் பார்க்க முடிகிறது.

நான் யோகா மையத்தில் தங்கியிருக்கும்போது தவறாமல் தினமும் தியான லிங்கக் கோவிலுக்குச் சென்று தியானம் செய்கிறேன். தியான லிங்கக் கோவில் பலதரப்பட்ட மக்களையும் ஈர்த்து வருகிறது.

கடந்த 3-4 வருடங்களாக நான் ஈஷா யோக மையத்திற்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். ஈஷாவின் ஆசிரமச் சூழலும், அமைதியான தன்மையும் அற்புதமாக இருக்கின்றன.

எனது ஓவியங்களை விற்பதற்கு நான் மும்பையில் இருப்பதுதான் முறையானது. மேலும், எனது ஓவியங்கள் விற்பனைக்காக இந்தியா தவிர லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றன. எனவே இப்போதைக்கு நிரந்தரமாக யோகா மையத்தில் தங்க முடியவில்லை என்றாலும் தற்போது யோக மையத்தில் ஒரு தனி காட்டேஜ் பெற்றுக் கொண்டு விட்டேன். அவ்வப்போது வந்து ஒரு மாதமாவது தொடர்ந்து தங்கிச் செல்கிறேன்.

நான் ஈஷா ஆசிரமத்துக்குப் புறப்படத் தயாரான ஒரு நாளின் இரவில்தான் பத்மபூஷன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி செய்தி மூலம் அறிந்து மகிழ்ந்தேன். எனக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடக்கிறது என்றால், நான் இங்குத் தங்கிச் செல்வது முக்கியமான ஒன்று.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert