முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

திரு. கே.பி.கே குமரன்-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். தான் கலந்துகொண்ட ஈஷா வகுப்புகள் மூலம் தான் பெற்ற மாற்றங்கள், சத்குருவுடன் தான் மேற்கொண்ட பயணங்கள் போன்ற தனது சுவாரஸ்யமான அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

திரு. கே.பி.கே.குமரன்:

ஈஷா எனக்கு அறிமுகமானது மிகத் தற்செயலாகத்தான். என் நிறுவன நண்பர் ஒருவர் அவ்வப்போது ஈஷா பற்றியும் சத்குரு குறித்தும் பேசுவார். நான் அதிகமாக ஆர்வம் காட்டியதில்லை. ஒருமுறை சத்குருவின் உரை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பேச்சின் ஆழமும் தெளிவும் என்னை ஈர்த்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஈஷாவில் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவேன். அச்செயல்களில் ஈடுபடும் நேரங்களில் எனக்கு ஏற்படும் சக்திவாய்ந்த 'தன்னை உணரும்' அனுபவங்கள் போல், என் வாழ்வில் வேறெதுவும் இல்லை.

நவம்பர் 2004-ல் சத்குரு நிகழ்த்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன். மிகக் கடுமையான என் வேலைப் பளுவுக்கு நடுவில் அது ஓர் அருமையான விடுப்பாக அமைந்ததோடு அல்லாமல், என்னை வியப்பிலும் ஆழ்த்தியது. யோகாவும் தியானமும் கற்றுக்கொண்டாலும், அதையும் மீறி சத்குருவின் சொற்பொழிவுகள் எனக்குள் இருந்த, எனக்கே தெரியாத, ஒரு சொர்க்க வாசலைத் திறந்தது.

நம்ப முடியாத அளவு ஆனந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது என்ற உண்மையை பாவஸ்பந்தனா என்ற பயிற்சி மூலம் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். வாழ்க்கை குறித்த என் அணுகுமுறையே அன்று முதல் மாறியது.

அதன் பிறகு, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஈஷாவில் தன்னார்வத் தொண்டில் ஈடுபடுவேன். அச்செயல்களில் ஈடுபடும் நேரங்களில் எனக்கு ஏற்படும் சக்திவாய்ந்த 'தன்னை உணரும்' அனுபவங்கள் போல், என் வாழ்வில் வேறெதுவும் இல்லை.

ஆசிரமம் என்று யோசிக்கும்போது, எனக்கு அந்தச் சூழலைவிட, அங்கே இருப்பவர்கள் அழகாகத் தெரிவார்கள். சாதாரண வேலைகளையும் அவர்கள் செய்யும் விதம், நோக்கம், அன்பு ஆகியவை அவ்விடத்திற்கு மெருகூட்டுகிறது.

பொதுவாக நான் கோயிலுக்குச் செல்பவன் அல்ல. அது பற்றிய எந்த நம்பிக்கையும் எனக்கு இருந்ததில்லை. ஈஷா மையத்துக்குச் செல்லும்போதுகூட, பலமுறை தியான லிங்க வளாகத்திற்குள் நுழைந்ததில்லை. ஒரே ஒருமுறை சில நிமிடங்கள் அங்கு திறந்த மனத்துடன் அமர்ந்த போது, எந்த முயற்சியும் இல்லாமல் அங்கே நான் தியானநிலைக்குச் சென்ற அதிசயத்தை என்னால் மறக்க முடியாது. இப்போது ஆசிரமம் செல்லும் போதெல்லாம், அந்த அனுபவத்தில் திளைக்கிறேன்.

140 கி.மீ வேகத்தில் மிக அமைதியாக காரைச் செலுத்துவார் சத்குரு. அது போல் ஒரு முறை காரில் செல்லும்போது, ஒரு தொலைக்காட்சிச் செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு, காரின் வேகம் சிறிதும் குறையாமல், அதே வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டே, ஆழமான பதில்களை அளித்தபடி அவர் வந்ததை, அருகில் இருந்து பார்த்தபோது... உடல்-மன ஒருங்கிணைப்பின் உச்சம் இதுதானோ என்று வியக்கவைத்தது.

என்னுடன் தான் முதன் முதலாக ஸ்நூக்கர்ஸ் விளையாட்டைக் கற்றுக்கொண்டார் சத்குரு. முதல் நாளே மீண்டும் மீண்டும் விளையாடி என்னை ஜெயித்துவிட்டார்.

எங்குமே கிடைக்காத ஒரு மின்சார அனுபவம் சத்குருவின் அருகில் இருக்கையில் கிடைக்கும். அவருடைய சக்திநிலையும் சின்ன சின்ன செயல்களைக்கூட அவர் முழு ஈடுபாட்டுடன் செய்யும் பாங்கும் என்னை ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துபவை. சூரியனுக்குக் கீழே இருக்கும் எல்லாவற்றையும் பற்றி அவருக்கு மிக ஆழமான ஞானமும் கருத்தும் இருக்கும். சமயங்களில், அவர் பாடக் கேட்கும் அனுபவம், விலை மதிப்பில்லாதது, கண்ணீரை வரவழைக்கக் கூடியது.

ஈஷா மட்டும் இல்லாதிருந்தால், நான் என் வாழ்வில் எத்தனை இழந்திருப்பேன் என்று நினைக்கும் போதெல்லாம், என் உள்ளம் உச்சரிப்பது ஒன்றே ஒன்றுதான்... நன்றி சத்குரு!