கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகைத் தந்தார் மத்திய அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் அவர்கள். அதைப் பற்றி ஒரு பார்வை...

மாண்புமிகு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் அமைச்சர் திரு. ஹர்ஷவர்தன் அவர்கள் செப்டம்பர் 6ம் தேதியன்று ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தார். ஈஷா யோக மையத்தில், அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, லிங்கபைரவியை தரிசித்த அமைச்சர், தியானலிங்கத்தில் அமர்ந்து தியானமும் செய்தார்.

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள சூரியகுண்டம் மற்றும் ஆதியோகி ஆலயம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அமைச்சர் அவர்கள், அதனைத் தொடர்ந்து சத்குருவுடன் கலந்துரையாடினார்.

மாலை 3 மணி அளவில் "ஈஷா ஹோம் ஸ்கூல்" பள்ளிக்கு சென்ற அமைச்சர், அதன் கட்டிட அமைப்புகளை பார்வையிட்டதுடன், பள்ளி மாணவர்களிடம் சற்று நேரம் கலந்துரையாடினார்.

நம் நாட்டின் பெருநகரங்களில் பெருகி வரும் மாசுபாடு, இந்தியாவில் உயர் ரக விஞ்ஞான ஆராய்ச்சியின் சாத்தியங்கள் போன்றவற்றைப் பற்றி அமைச்சரிடம் மாணவர்கள் கேள்விகளைக் கேட்டனர். கடலியல். நிலநடுக்கவியல், சுனாமி கணிப்புகள் போன்றவற்றைப் பற்றி சுருக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்த அவர், புதிய தலைமுறையினர் புத்திசாலித்தனமாக வாழ்ந்து, மாசுபடுதலுக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.

மாணவர்களும் தங்கள் ஆய்வுக்கூடத்தில் செய்த பிரத்யேக அறிவியல் உபகரணங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளையும் அமைச்சருக்கு காண்பித்து விளக்கினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.