ஆன்மீகம் மற்றும் நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் வகையிலான இருவேறு நிகழ்ச்சிகள் ஈஷாவில் கடந்த வாரம் நிகழ்ந்தேறியுள்ளன. அந்த நிகழ்ச்சிகள் குறித்து ஒரு பார்வை...

டிசம்பர் 10ஆம் தேதியன்று ஈஷாவில் யந்திரா வைபவம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. குடும்பத்திலுள்ள அனைவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்விற்காகவும் பிரதிஷ்டை செய்யப்பட்ட தேவி யந்திரங்களை சத்குருவிடமிருந்து நேரடியாக பெறும் அரிய வாய்ப்பினை 201 பங்கேற்பாளர்கள் பெற்றனர். தேவி யந்திரங்கள் மூலம் பைரவியின் அருளை தங்கள் வீட்டிற்கும் தொழிற்கூடங்களுக்கும் எடுத்துச்செல்லும் பேற்றினைப் பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இலவச கண் பயிற்சி மற்றும் உப-யோகா

கோவைக்கு அருகிலுள்ள கவுண்டம்பாளையத்தில் G.N.மில்ஸ் அருகிலுள்ள ஈஷா மையத்தில், டிசம்பர் 11ஆம் தேதி மற்றும் டிசம்பர் 12ஆம் தேதி ஆகிய இரு தினங்களில், கண்களுக்கான இலவச சிறப்புப் பயிற்சியோடு உபயோகா பயிற்சியும் இலவசமாகக் கற்றுத்தரப்பட்டன. மூன்று வகுப்பு நேரங்களைக் கொண்ட இந்நிகழ்ச்சியில் கிட்டப்பார்வை/தூரப்பார்வை போன்ற கண் பிரச்சனைகளுக்கு, 6 எளிய மற்றும் திறம்மிக்க கண் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 250 பேர் மூன்று வகுப்பு நேரங்களிலும் முழுமையாகக் கலந்துகொண்டு பயிற்சிகளைக் கற்றுச் சென்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.