ஈஷாவில், மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 'கலையின் கைவண்ணம்' எனும் கைவினைக் கண்காட்சி துவங்க உள்ளது. இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவமும் சிறப்புகளும் என்னென்ன?! இங்கே சில வரிகள்!

நலிந்து வரும் நமது இந்திய பாரம்பரிய கலையான கைவினைக் கலைக்குப் புத்துயிரூட்டும் விதமாக, மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக 2014 பிப்ரவரி 19 முதல் 27 வரை, 'கலையின் கைவண்ணம்' (Hands of grace) என்ற கைவினைக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. இதில், இந்தியா முழுவதிலுமிருந்து 19 மாநிலங்களைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட கலைக் குழுவினர் தங்கள் கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்த உள்ளனர்.

காணாமல் போகும் நிலையில் உள்ள அற்புதக் கலையான கைவினைக் கலையை, அனைவருக்கும் பறைசாற்றச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஈஷா மேற்கொள்ளும் ஒரு முதற்கட்ட முயற்சி இது! கடந்த அக்டோபரில், நவராத்திரிக் கொண்டாட்டங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட இந்த கண்காட்சி நிகழ்ச்சி, வரவுள்ள மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கக் காத்திருக்கிறது.

இந்தியாவின் மிக சிறந்த கைத்தறி நெசவில் உருவான ஆடைகள் மற்றும், பாரம்பரிய அச்சுக்கலையான ப்ளாக் ப்ரிண்டிங்க் மற்றும் எம்பிராய்டரி வகைகள், மூங்கில் மற்றும் இயற்கை இழையால் உருவான வீட்டுத் தயாரிப்புகள், மண்பாண்டம் மற்றும் கிராமியக் கலைப் பொருட்கள், கல் மற்றும் உலோக கைவினை ரசாயனக் கலப்பற்ற இயற்கை உடல் உபயோகப் பொருட்கள், காதி ஜாம்டானி மற்றும் பகல்பூரி பட்டு கைத்தறி அம்சங்கள்; அஜ்ரக்(Ajrakh) ப்ளாக் ப்ரிண்ட்டிங்க்; சுஜானி (Sujani) எம்பிராய்டரி; கட்ச்சி தோல்வேலைப்பாடுகள் (leatherwork), Sanjhi காகித வெட்டுக்கலை (paper-cut), மணிப்புரி மட்பாண்டம் மற்றும் Mirzapuri durries.

மேலும், கைவினைப் பயிற்சி பட்டறைகள், பிராந்திய உணவுத் திடல், நாட்டுப்புற இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் யக்ஷா எனக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லாமல் வெகு சிறப்பாக அமையவுள்ளது.

கைத்தறி நெசவின் அருமைகள்!
1

“ஒரு துணி நெய்யப்பட்டாலும் உணவு சமைக்கப்பட்டாலும் அதனைக் கைகளால் செய்யும்போது அதற்கு ஒரு தனி குணம் உண்டு.” - சத்குரு

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்று பாடும் மகாகவி பாரதி இங்கே தொழில் என்று குறிப்பிடுவது நெசவுத் தொழிலையே! "உழவே தலை" என்று விவசாயத்தைப் போற்றும் வள்ளுவர் கூட, தன் வாழ்க்கையில் மேற்கொண்ட தொழில் நெசவுத் தொழிலே!

தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடப் பெருங்குடி மக்களும் கிரேக்க மற்றும் உரோமனிய நாகரிக மக்களும் நெசவு செய்து ஆடைகளை அணிந்து வந்துள்ளனர் என்பதற்கு தக்க சான்றுகள் உள்ளன.
4

'காஞ்சீபுரம் சென்றால் காலாட்டிக்கொண்டே சாப்பிடலாம்' காஞ்சிபுரத்தை பற்றி இந்தப் பழமொழி, காஞ்சிபுர நெசவுத் தொழிலின் வளமையைக் கூறுகிறது. கைத்தறியில் நெசவு நெய்யும் போது, கையையும் காலையும் பயன்படுத்த வேண்டும். அதாவது கையையும் காலையும் ஆட்டிக்கொண்டே செய்வது என்பது அர்த்தமாகும்.

காஞ்சிபுரம் பட்டினைப் போலவே தனிச் சிறப்புமிக்கப் பட்டு நெசவுகள் இந்தியாவெங்கும் நடைபெற்று வந்துள்ளன. அதில் ஒன்றுதான் 'டஸர் பட்டு' (Tussar silk). இந்தப் பட்டுகள் பகல்புரி பட்டுகள் என்ற பெயரில் நன்கு பிரசித்தி பெற்றவை. ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் இவ்வகைப் பட்டு நெசவுத் தொழிலே அப்பகுதி கிராமப்புறப் பெண்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இந்தப்பட்டு நூல்கள் சால், அர்ஜுன், சாஜா ஆகிய மரங்களிலிருந்து பெறப்படுகிறது. இது வன்முறையில்லா பட்டு சேகரிப்பு என்றே சொல்லலாம். ஏனென்றால் லார்வாக்கள் பட்டுப்பூச்சியாக மாறி கூட்டைவிட்டுப் பறந்த பின்னரே கூட்டிலிருந்து பட்டுநூல்கள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வகைப் பட்டு நூல்கள் விலையுயர்ந்த தரம்மிக்க தங்கச் சரிகையாக மாறுகின்றன.

இப்படிப்பட்ட கைத்தறி நெசவில் உருவான பல வண்ணமயமான ஆடைகள் மட்டுமல்லாது, இயற்கைப் பொருட்களைக் கொண்டு கைகளால் வரையப்பட்ட பல அழகிய ஓவியங்கள், மர வேலைப்பாடுகள், கைகளால் ஆன வீட்டு உபயோகப்பொருட்கள், பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் எனப் பலவகையான கைவினைப் பொருட்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அனைவரும் வாருங்கள்! கைகளின் அழகை, கண்களில் கண்டு மகிழுங்கள்!

ஈஷாவில் தொடங்குகிறது கலையின் கைவண்ணம்!

ஒரு வாரக் கண்காட்சி நடைபெறும் நாட்கள் பிப்ரவரி 19 முதல் 27 வரை

நேரம்: காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை
இடம்: ஈஷா யோகா மையம், வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோவை.

மேலும் விவரங்களுக்கு - 94437 09905


http://mahashivarathri.org/hands-of-grace/


"கலையின் கைவண்ணம்" கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும், இந்த அறிதான கலைகள் கற்றுக்கொடுக்கவும் படுகிறது. அதற்கான நேரம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: 9443709905

நாள்: பிப்ரவரி 20 - 22

1) சாஞ்சி காகித வெட்டுக்கலை
கற்றுத்தருபவர்: மோகன் குமார் வர்மா, உத்தர பிரதேசம்
நேரம் (9.30 -11.30 மணி)

2) கோண்ட் ஓவியம்,
கற்றுத்தருபவர்: சுரேஷ் குமார் டர்வெ, மத்திய பிரதேசம்
நேரம் (9.30 -11.30 மணி)

3) மதுபானி ஓவியங்கள்
கற்றுத்தருபவர்: ரெமண்ட் குமார் மிஸ்ரா, பீகார்
நேரம் (9.30 -11.30 மணி)

நாள்: பிப்ரவரி 24 - 26

4) காய்கறிச் சாயத்தை வைத்து கையால் செய்யப்படும் ப்ளாக் ப்ரிண்ட்டிங் (Hand Block Printing with Vegetable dyes)
கற்றுத்தருபவர்: நவல் கிஷோர் பட்டேல், ராஜஸ்தான்
நேரம் (3.00 -5.00 மணி)

5) களிமண் வடிவங்கள் / மட்பாண்ட பொருட்கள்
கற்றுத்தருபவர்: விரக்னா கனித்லா, பாண்டிச்சேரி
நேரம் (3.00 -5.00 மணி)

6) பாரம்பரிய மலர் மாலை தயாரித்தல்:
கற்றுத் தருவபர்கள் : பாரம்பரிய மாலை தயாரிக்கும் குழுவினர் கோயம்புத்தூர்.
நேரம் (3.00 -5.00 மணி)

பிப்ரவரி 20 - 22 மற்றும் 24 - 26
7) சங்கனேரி அச்சுக்கலை
நேரம் (3.00 -5.00 மணி)