ஈஷாவில் நடந்தவை…

tsunami, kadaloor, isha vidhya, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi
tsunami, kadaloor, isha vidhya, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi tsunami, kadaloor, isha vidhya, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi
tsunami, kadaloor, isha vidhya, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi tsunami, kadaloor, isha vidhya, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi
சுனாமி மக்களுடன் ஈஷா வித்யா

கடந்த 26.12.2004 – அந்த ஞாயிறை ஒரு கறுப்பு தினம் என்றே சொல்ல வேண்டும். சுனாமியின் கோரப்பிடியில் பல நாடுகள் சிக்கிய பெரும் துயரம், அந்நாள். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் இதில் பெரும் சேதத்திற்கு உள்ளானது. டிசம்பர் 26ம் தேதியை, ஒவ்வொரு வருடமும் அப்பகுதியில் வாழும் மீனவ மக்கள் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

சுனாமி பாதிக்கப்பட்ட ஒரு கடலூர் கிராமத்தில்தான் ஈஷா வித்யாவின் கடலூர் பள்ளியும் அமைந்துள்ளது. இவ்வருடம் மீனவர்களுடன் சேர்ந்து ஈஷா வித்யா பள்ளியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியது. இறந்தவர்களுக்காக மெழுகுவத்தி ஏற்றி, சில நிமிட மௌனம் அனுசரித்த பின், கடல் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக பாலும், பூக்களும் அர்ப்பணிக்கப்பட்டன.

bhramacharies meet, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi

சத்குருவுடன் பிரம்மச்சாரிகள் சந்திப்பு

டிசம்பர் 26, 27 தேதிகளில் சத்குருவுடன் பிரம்மச்சாரிகள் சந்திப்பு நடந்தது. இதில் ஈஷா பிரம்மச்சாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். சத்குருவுடன் நடந்த இந்தச் சந்திப்பில் சக்தி வாய்ந்த தியானங்களும், சத்குருவுடனான சத்சங்கமும் நடைபெற்றது. வருடத்திற்கு இருமுறை நிகழும் இந்த நிகழ்வு, உள்ளங்களை அதிரச் செய்யும் சக்தி சங்கமமாகவே நிகழ்ந்தேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாங்கா பெண்கள் சாதனா

டிசம்பர் 27ம் தேதியன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடந்த சிவாங்கா பெண்களுக்கான தீட்சை நிகழ்ச்சிகளில், ஏறத்தாழ 3100 பெண்கள் கலந்துகொண்டு தீட்சை பெற்றனர். இவர்கள் 21 நாள் லிங்கபைரவி விரதத்தைக் கடைபிடிக்கவுள்ளனர்.

இந்தத் தீட்சையில் பங்கு பெற இயலாதவர்கள், 7 நாள் சாதனாவை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜனவரி 11ம் தேதி நடக்கும் இந்தத் தீட்சை நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.

விவரங்களுக்கு: 83000 30666
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert