ஈஷாவில் நடந்தவை…

29 sep 13

‘இந்த வார உலகம்’ என FMகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளின் தொகுப்பை வாரக் கடைசியில் தொகுத்து வழங்குவது வழக்கம். இங்கே ஈஷா எனும் உன்னத உலகத்தில் நடந்த ஒரு சில அற்புத நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!

சத்குரு ஞானோதயத் திருநாள்

சத்குருவின் ஞானோதயத் திருநாள், செப்டம்பர் 23ம் தேதியன்று, ஆதியோகி ஆலயத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சம்ஸ்கிருதி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சியும் ஆதியோகி ஆலயத்தை இன்னிசையால் அதிர்வுறச் செய்தன. முந்தைய நாள் அமெரிக்காவில் சத்குரு நிகழ்த்திய சத்சங்க உரையின் வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது, குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.

சத்குரு ஞானோதயத் திருநாள், Sadhguru nanothayath thirunaal

சத்குரு ஞானோதயத் திருநாள், Sadhguru nanothayath thirunaal

ஈஷா வித்யா நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்

ஈஷா வித்யா பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் துணை நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் மாவட்டம் வனவாசி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளியில், செப்டம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகத்தை மேலும் சிறப்புறச் செய்வது குறித்தும், புதிய அணுகுமுறைகளைக் கையாள்வது குறித்தும் இம்முகாமில் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்திலுள்ள 8 ஈஷா வித்யா பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் உள்ள அனைவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொள்ளவும் இம்முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இவற்றோடு, அங்கே நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிகளும், நிலாச் சோறு நிகழ்ச்சியும் முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் அமைந்தது.

சென்னை – ஆதம்பாக்கம் நர்சரியில்…

ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த 14 பணியாளர்கள், செப்டம்பர் 28ம் தேதி சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள ஈஷா பசுமைக் கரங்கள் நாற்றுப் பண்ணையில், தன்னார்வத் தொண்டு புரிந்தனர். மண்ணும் இயற்கை உரங்களும் கொண்ட கலவையைச் சரியான விகிதத்தில் கலப்பது, மற்றும் மரக்கன்றுகளை அடுக்கி வைப்பது என பல்வேறு பராமரிப்பு பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

சென்னை - ஆதம்பாக்கம் நர்சரியில், Chennai- Athambakkam nursureil

சென்னை - ஆதம்பாக்கம் நர்சரியில், Chennai- Athambakkam nursureil
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert