தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள், பெங்களூரூ மராத்தான் என்று விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...

தியானலிங்கத்தில் 15வது பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள்

தியானலிங்கத்தில் 15ஆவது ஆண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் ஜூன் 24ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். நாள் முழுவதும் பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்கள் தியானலிங்க கருவறையில் தங்கள் சமய உச்சாடனங்களை செய்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தியானலிங்கக் கருவறையில் சரியாக காலை 6 மணிக்கு மஹா மந்திர உச்சாடனை ஈஷா பிரம்மச்சாரிகளால் துவங்கப்பட்டது. நமசிவாய மந்திரத்தைத் தொடர்ந்து, சீக்கியர்கள் குர்பானி உச்சாடனங்களையும், கிருஸ்துவர்கள் கிருஸ்துவ உச்சாடனங்களையும், லெபனானைச் சேர்ந்த பாடகர்கள் இஸ்லாம் மற்றும் சூஃபி உச்சாடனங்களையும், ஹிந்து பண்டிதர்கள் மஹா மந்திரமான "ஓம் நமசிவாய" உச்சாடனையுடன் வேத மந்திரமும் உச்சாடனை செய்தனர்.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பதிக பாடல்களை பாராம்பரிய முறையில் இசைத்தனர். தியானலிங்கத்தில் நடைபெறவிருக்கும் நாத ஆராதனை என்னும் இசை அர்ப்பணிப்பை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இசைக் கலைஞர்கள் வழங்கினர். காலை 6 மணிக்குத் துவங்கிய இந்தக் கொண்டாட்டங்கள், மாலை 5.30 மணிக்கு குருபூஜையுடன் நிறைவு பெற்றது.

பெங்களூரூ மராத்தான்


ஜூன் 18ம் தேதி பெங்களூரூவில் நடந்த 10 கி.மீ TCS மராத்தான் ஓட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்காக நிதி திரட்டினர்.
மேலும் விவரங்களுக்கு: blore.run@ishavidhya.org

செம்மேடு மற்றும் வடிவேலாம் பாளையத்தில் மரம் நடுதல்...

செம்மேடு மற்றும் வடிவேலாம் பாளையத்தில் மரம் நடுதல்...

செம்மேடு மற்றும் வடிவேலாம் பாளையத்தில் மரம் நடுதல்...

கோவை ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வரும் ஈஷா கிராம வளர்ச்சித் துறை, அருகிலுள்ள செம்மேடு மற்றும் வடிவேலாம்பாளையம் ஆகிய கிராமங்களில் மரக் கன்றுகள் நட்டது. அந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களான திரு. சதீஷ் மற்றும் சங்கர் ஆகியோரின் பேரார்வத்தால் வடிவேலாம்பாளையத்தில் 150 மரக்கன்றுகளும், செம்மேட்டில் 20 மரக்கன்றுகளும் ஜூன் 22ம் தேதி நடபட்டன.

பீளமேடு நர்சரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெங்களூரூ மராத்தான்

ஜூன் 23, 24 தேதிகளில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற பசுமை விழிப்புணர்வு முகாமில், கோவை சிங்காநல்லூர் கலைமகள் மேல்நிலைப் பள்ளியின் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர்.