கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திலும், ஈஷா வித்யா பள்ளியிலும் நடந்த கொண்டாட்டங்கள் இங்கே உங்களுக்காக...

உலகுண்ட வாயனுக்கு உன்னத திருவிழா!

அகில உலகத்தையும் அண்ட சராசரத்தையும் தன் வாய்க்குள்ளே காட்சி தந்து, லீலை புரிந்த கிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி விழா ஈஷா யோகா மையத்திலும், கோவை ஈஷா வித்யா பள்ளியிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோக மையத்தில்...

ஜென்மாஷ்டமி விழாவையொட்டி ஈஷா ஆசிரமவாசிகளும், தன்னார்வத்தொண்டர்களும் பலவித விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டனர்.

கிருஷ்ணனின் வாழ்க்கையுடன் தொடர்புடைய மதுரா, துவாரகா, பிருந்தாவனம், கோகுலம், குருஷேத்ரம் மற்றும் கோவர்த்தனம் ஆகியவரலாற்று இடங்களின் பெயர்களில் குழுக்களாகப் பிரிந்திருந்த பங்கேற்பாளர்கள், ஒளித்து வைக்கப்படிருக்கும் வெண்ணெயினைக் கண்டறியும் போட்டியில் ஈடுபட்டனர். இப்போட்டியில், ஒவ்வொரு குழுவிலும் கிருஷ்ண வேடம் தரித்த ஒருவர் இருப்பார். அவருக்கு அக்குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வெண்ணெய் பானையை கண்டறிய உதவி செய்வர்.

இதையடுத்து வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், பனை மரக் கட்டையின் மேலே மணியை ஏந்திக்கொண்டு மணியோசை எழுப்பாதவாறு நடந்து செல்லுதல் என பலவித விளையாட்டுகள் நடந்தேறின. மாலையில் இந்த ஆறு குழுக்களும் குசேலா, உதவா, அர்ஜுனா என மூன்று குழுக்களாக இணைந்து நாட்டிய மற்றும் நாடக நிகழ்ச்சியை வழங்கினர். சிறப்பான கலைத்திறனை வெளிப்படுத்திய குழுவிற்கும் பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஈஷா வித்யாவில் கோகுலாஷ்டமி...

ஈஷா வித்யாவில் சுதந்திர தினம்...