"ஈஷாவுக்கு போயிருந்தேன் அப்போ தான் அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுது!," "அங்க புதுசா எவ்ளோ குழந்தைங்க இருக்காங்க தெரியுமா?," "அங்க நவராத்திரிக்கு எந்த ஆர்டிஸ்ட் வந்திருந்தாங்க தெரியுமா?" என்று யாரோ ஒருவர் சொன்னவுடன் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என அங்கலாய்க்கும் உங்களுக்காகவே இனி வாரம் ஒருமுறை ஈஷா நிகழ்வுகளை அள்ளிக் கொண்டு வந்து இப்பக்கத்தில் சேர்க்கவிருக்கிறோம். படித்திடுங்கள்! பகிர்ந்திடுங்கள்!


 
4

பிப்ரவரி 15 முதல் 17 வரை ஐதராபாத்தில் நடந்த இன்னர் எஞ்சினியரிங் வகுப்பில் 3000 திற்கும் மேற்பட்டோர் சத்குருவிடம் ஷாம்பவி மஹா முத்ரா தீட்சை பெற்றனர்.

3

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் ஜனவரி 31ஆம் தேதி திருவையாற்றில் நடந்த 166-வது தியாகராஜ ஆராதனையில் கலந்து கொண்டு பஞ்ச ரத்ன கிருத்திகளை பாடினார்கள்.

2

மலேசியத் தன்னார்வத் தொண்டர்கள் இந்த வருட தைப்பூச தினத்தன்று, அருள்மிகு பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் அடிவாரத்தில் முகாமிட்டனர். இதில் ஈஷா யோகா வகுப்புகளை பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

1

இங்கிலாந்தில் 'சத்குருவுடன் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு வார இறுதி' வகுப்பில் 600 திற்கும் மேற்பட்டோர் சத்குருவிடமிருந்து ஷாம்பவி மஹா முத்ரா தீட்சை பெற்றனர். மௌனி அமாவாசை தினத்தில் அவர்கள் தீட்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

5

6

லிங்கபைரவியில் தியாகராஜ ஆராதனை கொண்டாடப்பட்டது. சம்ஸ்கிரிதி குழந்தைகளும் ஹோம் ஸ்கூல் குழந்தைகளும் இணைந்து தியாகராஜரின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பொது மக்களுக்கு வழங்கினர்.