ஈஷாவில் நடந்தவை…

லிங்கபைரவியில் பெண்களுக்கான தேவி சேவா

பசுமைக் கரங்களின் செயல்பாடுகள், செஸ் கிராண்ட் மாஸ்டர்களுடன் விளையாடிய ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் என உங்கள் முன் விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை…

லிங்கபைரவியில் பெண்களுக்கான தேவி சேவா

தேவி சேவை தற்போது முதன்முதலாக பெண்களுக்காக வழங்கப்படுகிறது. தேவியின் அருள் இருப்பில் நனைந்து கொண்டே தொண்டு அல்லது சேவை புரிவதற்கான வாய்ப்பை, சத்குரு தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்குகிறார். இதில் மூன்று நாட்கள் சாதனாவாக மௌனம் கடைபிடிக்கப்படும். தன்னார்வத் தொண்டர்கள் தேவியின் அருள் இருப்பை இந்தப் புனித தலத்தில் உணர்வதற்கு இது ஒர் அரிய வாய்ப்பு. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறும். ஈஷா யோகா வகுப்பு செய்தவர்கள் பங்கேற்கலாம்.பெண்கள்: பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை
டிச 12 – டிச 31; ஜன 11 – ஜன 30
ஆண்கள்: அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை
டிச 27 – ஜன 15; ஜன 26 – பிப் 14

தொடர்புக்கு: 94864 94865

செஸ் கிராண்ட் மாஸ்டர்களுடன் ஈஷா வித்யா மாணவர்கள்

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற உலக செஸ் சேம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு, சென்னை செம்மொழிப் பூங்காவில் பள்ளி மாணவர்களுடன் 2 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் விளையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் RR லக்ஷ்மணன் (தமிழகம்) மற்றும் இமான்சு ஷர்மா (ஹரியானா) ஆகிய கிராண்ட் மாஸ்டர்களும் சென்னை டான் பாஸ்கோ, செயின்ட் பீட்ஸ் போன்ற பள்ளி மாணவர்களுடன் விழுப்புரம் மற்றும் கடலூர் ஈஷா வித்யா மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.கிராண்ட் மாஸ்டர்களை எதிர்த்து விளையாடியபோது, மற்ற பள்ளி மாணவர்கள் சீக்கிரம் போட்டியை விட்டு வெளியேற, நம் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் கடைசி வரை தாக்குபிடித்து விளையாடினர். இது அங்கிருந்த அனைவரையும் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

17 nov 13 nid 1

17 nov 13 mid 2

தஞ்சாவூரில் மரம் நடுவிழா

தஞ்சாவூர் ‘பைங்கள்’ கிராமத்தில் 7500 மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கான துவக்கவிழா நவம்பர் 13ம் தேதியன்று நடந்தது. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இவ்விழாவில், தஞ்சை மாவட்ட கலக்டர் திரு. டாக்டர். N. சுப்பையன் IAS அவர்கள் நிகழ்ச்சியை முதல் மரக்கன்றினை நட்டு துவக்கிவைத்தார். இவ்விழாவில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பைங்கள் கிராம பஞ்சாயத்திற்காக 3000 மரக்கன்றுகளை, ஈஷா பசுமைக் கரங்களிடமிருந்து அக்கிராம மக்கள் பெற்றுக்கொண்டனர்.

17 nov 13 mid 3
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert