ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

தன் விரிவாக்கத்தையும், மிகுந்த வரவேற்பையும் பெற்று வரும் ஈஷா ஆரோக்யாவின் மற்றொரு காட்சியப்படுத்தும் நிகழ்ச்சி, ஈஷாவின் பசுமைக் கரங்களுடன் இணையும் கார்ப்பரேட் நிறுவனம் என்று விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை…

கோவையில் “ஆரோக்கியம் எக்ஸ்போ”

`தி நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ்` குழுமம், கோவையில், `ஆரோக்கியம் எக்ஸ்போ – 2014`, எனும் பெயரில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸ் குறித்த மாபெரும் கண்காட்சியை கடந்த இரு நாட்களாக (மார்ச் 15, 16) நடத்தி வருகின்றனர். இதில் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளுடன் கோவையின் முன்னணி மருத்துவ குழுமங்கள் பங்கேற்கின்றனர். இக்கண்காட்சியில், ஈஷாவின் மருத்துவத் துறையான, ஈஷாஆரோக்யாவும் பங்கேற்கிறது.

ஈஷா ஆரோக்யாவின் இயற்கையான மூலிகை மருந்துகள், ஊட்டச்சத்துப் பொருட்கள், சிறுதானியங்கள், கேசம், கூந்தல் பராமரிக்கும் அழகுப் பொருட்கள் இவையாவும் விற்பனைக்கு உள்ளன.

மேலும், கோவை பீளமேட்டில் அமைந்திருக்கும் ஈஷா ஆரோக்யா மருத்துவமனையின் சித்த மருத்துவர்கள், இலவசமாக `நாடிபரிசோதனை` மூலம் மருத்துவ ஆலோசனையும் வழங்குகின்றனர்.

இடம்: சுகுனா திருமண மண்டபம், அவினாசி ரோடு, கோவை.

தொடர்பு: 94425 90088; 83000 55555

20140315_RVK__0160-e
20140315_RVK__0009-e
20140315_RVK__0152-e

பசுமைக் கரங்களுடன் ஸ்கோப் இன்டர்நேஷனல்

சென்னைச் சேர்ந்த ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனம், ஈஷா பசுமைக் கரங்களுடன் சேர்ந்து பசுமை விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் வழியில், அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், சென்னை ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள பசுமைக் கரங்கள் நர்சரியில் தங்கள் கரங்களால் விதை விதைத்தும், பராமரித்தும் தங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தினர்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert