கடந்த வாரம் பாண்டிச்சேரி, இந்த வாரம் மும்பை என்று களைகட்டிய ஈஷா வித்யா மாரத்தான் ஓட்டங்கள்; போலீஸ் அதிகாரிகளுக்கு நடந்த ஈஷா கிரியா தியான வகுப்பு என்று விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை.

மும்பை மாரத்தான்

ஒவ்வொரு வருடமும் மும்பையில் நடைபெற்று வரும் மாரத்தான் போட்டி, அம்மாநகரில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகிவிட்டது. இவ்வருடம் ஜனவரி 19ம் தேதி நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டு ஈஷா வித்யா பள்ளிக்காக நிதி திரட்டினர். முன்னதாக தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் கூடி குருபூஜையுடன் இந்த மாரத்தானை துவக்கினர். 42 கி.மீ, 21 கி.மீ, மற்றும் 6 கி.மீ போன்ற மாரத்தானின் அனைத்து பிரிவுகளிலும் அவர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அரசுப்பள்ளி ஆசிரியர் பயிற்சி முகாம்

ஈஷா அறக்கட்டளையின் அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 3 நாட்கள் கொண்ட அரசு ஆசிரியர்கள் பயிற்சி முகாம் கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் 99 துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், மற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

ஜனவரி 20ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்முகாமில் இளம் மாணவர்களிடம் இணைந்து செயலாற்றுவதைப்பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குனர் திருமதி.N. லதா அவர்கள் இம்முகாமிற்கு வந்திருந்தார். இம்முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்கு யோகா வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

10

கோவை காவல் துறையினருக்கு ஈஷா கிரியா தியானம்

கடந்த பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், கோவை PRS மைதானத்தில் காவல் துறையைச் சேர்ந்த சுமார் 170 பேருக்கு சக்திமிக்க ஈஷா கிரியா தியானம் கற்றுக் கொடுக்கப்பட்டது.