எக்கணமும் நன்றியில் திளைத்திடும் மனிதனுக்கு ஈடு ஏது, அவனது வாழ்வின் சந்தோஷத்திற்கு இணை ஏது? 'நான்' என்ற அகந்தை மனிதநேயத்தை அழித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், இதோ நமது ஈஷாவில் இந்த வாரம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லிங்கபைரவியில் மஹாளய அமாவாசை

அக்டோபர் 4ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் மஹாளய அமாவாசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நமது பிறப்பிற்கும் நமது வாழ்க்கை முறைக்கும் பெருமளவு பங்களித்திருக்கும் நமது முன்னோர்களுக்கு நம் அளவிட முடியா நன்றியை, சிறு அர்ப்பணத்துடன் வெளிப்படுத்தும் விசேஷமான நாள் இது. மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை லிங்கபைரவியில் நடந்த "அக்னி அர்ப்பணத்தில்" பக்தர்கள் பங்கேற்றனர். அதன்பிறகு நடந்த "காலபைரவ சாந்தி"யில், தமிழகம் மற்றும் பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த 500 அன்பர்கள் கலந்துகொண்டனர். இதில் 2500 பேருக்கு காலபைரவ சாந்தி செய்தது குறிப்பிடத்தக்கது.

இது எங்கள் ஈஷா வித்யா

ஜூன் 2-8, 'கொடுப்பதின் சந்தோஷம்' வாரமாக (Joy Of Giving Week) கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கேட்டவுடன் ஆனந்தம் கொண்ட நமது கடலூர் ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகள், ஒன்றிணைந்து, தங்கள் பள்ளியின் ஆயம்மா, பள்ளி வாகன ஓட்டுனர், வாட்ச்மேன், காய்கறி சப்ளையர், எலக்ட்ரீசன் போன்றோருக்கு தங்களின் நன்றியை தெரிவிக்கும் வண்ணம் ஒரு சிறு பரிசு ஏற்பாடு செய்தனர். முடிந்த மாணவர்களிடம் ஆளுக்கு ரூ.5 வீதம் சேர்த்து, பரிசுப் பொருட்கள் வாங்கி, பள்ளிக் கூட்டத்தில் அதை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் சேவையை கவுரவித்தனர். இதோ நமது வருங்காலத் தலைமுறை, நமது பண்பாட்டுடன் வளர ஆரம்பித்துவிட்டது.

இது எங்கள் ஈஷா வித்யா, Ithu yengal isha vidhya

இது எங்கள் ஈஷா வித்யா, Ithu yengal isha vidhya