கடந்த வாரம் ஈஷாவின் சார்பில் நடத்தப்பட்ட உலக சுகாதாரப் பேரணி, "உயிர் நோக்கம்" ஆசிரியர் பயிற்சி என விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...

உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் ஈஷா யோகா மையத்தில் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாக சந்தைப் படுத்துவதைக் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், தொண்டாமுத்தூர், மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 தென்னை, காய்கறி உற்பத்தியாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

1
2
3

"உயிர்நோக்கம்" ஆசிரியர் பயிற்சி

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் தொடங்கவிருக்கும் ஈஷாவின் "உயிர்நோக்கம்" வகுப்புகளுக்கான ஆசிரியர் பயிற்சி சில நாட்களாக ஈஷா மையத்தில் நடந்துவந்தது. இதன் நிறைவு நாளான ஏப்ரல் 8ம் தேதியன்று, இதில் கலந்துகொண்ட 159 பேர் ஆசிரியர் பயிற்சி முடித்தனர்.

4
5

உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி கோவையில் இலவச ஈஷா கிரியா நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 7ம் தேதியன்று, நூற்றுக்கணக்கான பொதுமக்களும், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியின் போது நிலவேம்பு குடிநீர் கஷாயம் விநியோகிக்கப்பட்டது.

விழிப்புணர்வு பேரணி
6
7
8


இலவச நில வேம்பு குடிநீர் கஷாய விநியோகம்

9
10


ஈஷா கிரியா தியான வகுப்புகள்

11
12