ஈஷாவில் நடந்தவை…

குப்பைக் கிடங்கில் மரம் நடுதல்

பசுமைக் கரங்கள் திட்டத்தின் அமைதியான விரிவாக்கங்களைப் பற்றியும், ஈஷா வித்யாவிற்காக நடந்த “என்றென்றும் ராஜா” பற்றியும் இந்த வார ஈஷாவில் நடந்தவையில்…

குப்பைக் கிடங்கில் மரம் நடுதல்

குப்பைக் கிடங்கில் மூங்கில் மரம் வளர்க்கும் திட்டம் மன்னார்குடி நகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்கு உள்ள பகுதிகளிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கி, அங்கிருந்து வெளியேறும் காற்றை தூய்மைப்படுத்தி அனுப்புவதற்காக குப்பைக் கிடங்கைச் சுற்றி மரம் வளர்க்கும் திட்டத்தை ஈஷா பசுமைக் கரங்களுடன் இணைந்து செயல்படுத்த மன்னார்குடி நகராட்சி முடிவு செய்துள்ளது. அதன் துவக்கமாக, நேற்று (நவம்பர் 9) நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச்செல்வன், முதல் மரக்கன்று நட்டு திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

திருச்சி பசுமைப் பள்ளி இயக்கம்அக்டோபர் 29ம் தேதியன்று, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்சி பசுமைப் பள்ளி இயக்கத்தின் பயிற்சி திட்டம் துவங்கப்பட்டது. மாவட்ட தேசிய பசுமைப் படையின் ஒருங்கிணைப்பாளர் திரு. சந்திரசேகரன் இந்நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெறும். இப்பயிற்சியில் இதுவரை, 280 பள்ளிகளிலிருந்து 280 ஆசிரியர்களும், 580 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

10 nov 13

10 nov 13 (2nd)

ஈஷா வித்யாவிற்காக ஒரு இசை நிகழ்ச்சி!

அக் 19ம் தேதி, அமெரிக்காவின் ஃபிராமிங்கேம் நகரில் உள்ள ‘கீஃபி டெக்’ ஆடிட்டோரியத்தில் நடந்த இசை கச்சேரியில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சிலர் ஒன்று கூடி இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களை பாடி, “ஈஷா வித்யா” பள்ளிகளுக்காக நிதி திரட்டினர். “என்றென்றும் ராஜா” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் 12,000 டாலர்கள் ஈஷா வித்யாவிற்கு நிதியாக திரட்டப்பட்டது.

10 nov 13 (3rd)
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert