சத்குருவின் சந்திப்புகள், ஈஷா வித்யாவிற்காக மாரத்தான் ஓடிய ஈஷா வித்யா பள்ளி ஆயாக்கள் போன்ற நிகழ்வுகளை இங்கே உங்களுக்காக பதிகிறோம்...


20140208_BEL_0051-e1

சத்குருவுடன் திரு.மாலன் சந்திப்பு

சத்குரு அவர்களுடனான "புதிய தலைமுறை" இதழின் ஆசிரியர் திரு. மாலன் அவர்களின் சந்திப்பு "ஞானியின் பார்வையில்" என்ற தலைப்பில் நேற்று (பிப் 8) நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி - பவன் ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். அரசியலிலிருந்து, ஆன்மீகம், எதிர்கால இந்தியா போன்ற பல தலைப்புகளிலும் திரு. மாலன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த உரையாடலின் facebook பதிவுகளைக் காண, இங்கே கிளிக் செய்யவும்...

20140208_CHI_0095-e1

அப்போலோ கேன்சர் கான்க்ளேவ்

சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பாக பிப் 8ம் தேதி, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "அப்போலோ கேன்சர் கான்க்ளேவ்" என்ற நிகழ்ச்சியில் சத்குரு கலந்துகொண்டார். வெகுவாக பரவி வரும் புற்று நோயைப் பற்றியும், இதிலிருந்து விடுபட யோகா எப்படி உதவுகிறது என்பதைப் பற்றியும் சத்குரு விரிவாக பேசினார்.

பாண்டிச்சேரியில் ஆரோவில் மாரத்தான்

ஈஷா வித்யாவின் மேம்பாட்டிற்காக நிதி திரட்ட, சென்னையைத் தொடர்ந்து இன்று பாண்டிச்சேரியில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஈஷா வித்யா சார்பில் 113 பேர் கலந்துகொண்டு 21 கி.மீ தூரத்தை ஓடிக்கடந்தனர். இதன் முக்கிய அம்சமாக, கடலூர் மற்றும் விழுப்புரம் ஈஷா வித்யாவின் 8வது, 9வது படிக்கும் மாணவர்களும், பள்ளி குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆயாக்களும் கூட ஓடினர். அவர்களில் பலர் இந்த பந்தய தூரத்தை 2.30 மணி நேரத்தில் ஓடிக் கடந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.

1

ஈஷா ஹோம் ஸ்கூலில் குடியரசு தினம்

ஜனவரி 26ம் தேதியன்று, ஈஷா ஹோம் ஸ்கூலில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்களும் மரியாதை செலுத்த, தேசியக் கொடியை சத்குரு அவர்கள் ஏற்றி வைத்து, குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.