ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

1

புதுவருட உறுதிமொழிபுது வருடத்தில் பலரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம்தான். அவ்விதத்தில் காஞ்சிபுரம் புலிகுகை கிரமத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு “பசுமை கிராமமாக” மாற்ற உறுதிமொழி எடுத்துள்ளனர். அதே நாளில் 50 மரக்கன்றுகளை நட்டு, தாங்கள் ஒவ்வொருவரும் மரங்களைப் பேணிக் காப்போம் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

5
4

நெகிழ வைத்த சென்னை மாரத்தான்டிசம்பர் 1ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஈஷா வித்யாவிற்காக ஓடிய நம் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாட்டைக் கண்ட ஒரு சக ஓட்டக்காரரின் பகிர்தல் இங்கே…

அன்புள்ள ஈஷா யோகா மையத்தினருக்கு…

வணக்கம். நான் இதயம் நல்லெண்ணை நிர்வாகத்தில் பணியாற்றி வருகிறேன். நான் 2013 சென்னை மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு சீனியர் பிரிவில் ஏழாவது இடம் பெற்றுள்ளேன். தாங்கள் ஏழை மாணவர்களின் நல்வாழ்விற்காகப் போட்டியில் பங்கேற்றது, எனக்கு பெருமையாக உள்ளது. மேலும் அனைத்து மக்களும் நல்வழியில் நடக்க மூச்சுப்பயிற்சியும் தியானமும் கற்றுக் கொடுத்து வருகிறீர்கள். இவற்றை கற்றுக் கொடுத்து உலக மக்களை நல்வழிப்படுத்தும் தங்கள் இயக்கம் மேலும் மேலும் வளர வேண்டும். 75 வயதுடைய நானும், எங்கள் விருதுநகர் நடையாளர்கள் சங்கமும் உங்களை மனதார வாழ்த்துகிறோம்.

மனோகரன், விருதுநகர்

3

ஈஷா வித்யாவிலிருந்து ஒரு வாழ்த்து அட்டைபுது வருடத்தை வரவேற்கும் விதத்தில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து, தங்கள் மகிழ்ச்சியை பிறருக்குத் தெரிவித்தனர்.

களைகட்டும் சிவாங்காபெண்களுக்கான சிவாங்கா சாதனாவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீட்சை பெற்றுள்ளனர். 21 நாள் சாதனாவை செய்ய இயலாதவர்கள் ஜனவர் 11ம் தேதி நடைபெறவிருக்கும் 7 நாள் சிவாங்கா தீட்சையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாகர்கோவிலில் நடந்த 21 நாள் விரதத்திற்கான தீட்சை…
6

விரதத்தில் பங்குகொள்ள விரும்புவோர், தொடர்புக்கு 83000 30666

சிங்கப்பூரில் சந்திக்கலாம் சத்குருவை!
சத்குரு எங்கள் ஊருக்கு எப்போது வருவார் என்று ஏங்கிய சிங்கப்பூர் ஈஷா அன்பர்களின் கனவினை நினைவேற்றும் வகையில், ஜனவரி 12ம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 6.30 வரை சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சத்குருவின் “மிஸ்டிக் ஐ” (Mystic Eye) நிகழ்ச்சி சிங்கப்பூர் வாசிகளுக்கான ஒர் அரிய வாய்ப்பு.சத்குருவின் சிங்கப்பூர் வருகையை அனைவரிடமும் பகிர்ந்திடுங்கள்…

7

மேலும் தொடர்புக்கு: https://www.ishayoga.sg/mystic-eye-registration
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert