ஈஷாவில் நடந்தவை…

ஈஷாவில் நடந்தவை…

புதிதாக வரவிருக்கும் ஆதியோகி ஆலயம், சத்குருவுடனான சந்திப்புகள் போன்ற நிகழ்வுகளை இந்த வாரம் ஈஷாவில் நடந்தவையில் உங்களுக்காக இங்கே பதிவிக்கிறோம்…

ஹைதராபாத்தில் “Mystic Eye” நிகழ்ச்சி

மார்ச் 25ம் தேதி ஹைதராபாத்தில், சத்குருவுடன் 1 நாள் “Mystic Eye” நிகழ்ச்சி நடைபெற்றது. ஹைதராபாத் நகரின் ஜூபிலீ ஹில்ஸில் அமைந்துள்ள “JRC Convention Hall” ல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3500 பேர் கலந்துகொண்டு சத்குருவிடமிருந்து ஈஷா கிரியா தியானத்தைக் கற்றுக் கொண்டனர்.
3
4
5
6

அமெரிக்காவில் ஆதியோகி ஆலயம்

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி ஆலயம் டிசம்பர் 2011ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பாரம்பரிய யோகாவை மக்களுக்கு எடுத்துச் செல்ல, இதுபோன்று பல ஆதியோகி ஆலயங்கள் உலகின் பல பகுதிகளில் வருங்காலத்தில் அமைக்கப்படும்” என்று சத்குரு அறிவித்தார். அதன் பயனாக, அமெரிக்காவின் ஈஷா மையத்தில் புதிய ஆதியோகி ஆலயம் வரவிருக்கிறது. மார்ச் 22ம் தேதி அதற்கான பூமி பூஜை அமெரிக்கா ஈஷா மைய வளாகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்க்ள இதில் கலந்து கொண்டனர்.
9
10

சத்குருவுடன் திரு.பிரஷூன் ஜோஷி

இந்தியாவின் பிரபல கவிஞரும், பாடலாசிரியரும், விளம்பரப் பட உலகின் முன்னோடியாகக் கருதப்படுபவருமான திரு. பிரஷூன் ஜோஷி அவர்களுடனான சத்குருவின் சந்திப்பு மார்ச் 28ம் தேதி மும்பையில் நடைபெற்றது. “In Conversation with the Mystic” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒளியின் நகரம் என்று வர்ணிக்கப்படும் காசியின் ரகசியங்களைப் பற்றிய கேள்வி பதில்கள் அமைந்தன. இந்நிகழ்ச்சியில், காசி தொடரைப் பற்றிய புதிய DVDயும் வெளியிடப்பட்டது.
8
7

கன்னியாகுமரியில் “தேவி” நேத்ரம்

லிங்கபைரவியின் நேத்ரங்கள்(கண்கள்), கன்னியாகுமரியில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

இது அமைந்துள்ள இடம்:
பூபதி லாட்ஜ்,
மெயின் ரோடு,
கன்னியாகுமரி இரயில் நிலையம் அருகில்.
1
12
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert