1

ஈஷா ஹோம் ஸ்கூலில் நடுநிலை பயிலும் மாணவர்கள் ஜனவரி 17 முதல் 23 வரை, மைசூர், பேலூர், மற்றும் ஹலேபிட்டுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மைசூர் மிருகக்காட்சி சாலை, மைசூர் அரண்மனை, திப்பு சுல்தான் கோட்டை, சாமுண்டி மலை, கோமட்டகிரி, குக்கரஹல்லி நீர்த்தேக்கம் ஆகிய இடங்களுக்கு சென்றார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2

ஜனவரி 20ஆம் தேதி நடந்த மும்பாய் மாரத்தான் ஓட்டத்தில் பல தன்னார்வத் தொண்டர்கள் கலந்துகொண்டு, ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நிதி திரட்டினார்கள். மும்பாய் மாரத்தான் மூலம் கடந்த ஐந்து வருடங்களாக ஈஷா வித்யாவிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

3

உலகெங்கிலும் இருந்து வந்திருந்த எழு நூற்றிற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆங்கில சம்யமா வகுப்பு கடந்த 24 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெற்றது. அடுத்த சம்யமா வகுப்பு, தமிழில் ஜூன் 9 முதல் 16 வரை நடக்கவிருக்கிறது.

4

யக்ஷா, ஈஷாவின் தெய்வீக இசை மற்றும் நாட்டியத் திருவிழா, இன்று மாலை டி.என்.கிருஷ்ணன் அவர்களின் கர்நாடக வயலினிசையுடன் துவங்கியது. ஒரு பக்கம் சம்யமாவிற்கு வந்திருக்கும் மக்கள், மறுபக்கம் மஹாசிவராத்திரி ஏற்பாடுகள், யக்ஷாவிற்கு வந்திருக்கும் கலைஞர்கள், பங்கேற்பாளர்கள் என துவக்க நாளன்றே களை கட்டியுள்ளது ஈஷா யோகா மையம்.