ஈஷாவில் ஜூலை திருவிழா !

ஈஷாவில் ஜூலை திருவிழா !

“ஜூலை ஆடி மாதத்தில் வரும்; ஆடி மாதம் என்றால் அம்மன் கோயில்களில் விசேஷம், இது தெரிந்ததுதானே!” என்கிறீர்களா? ஆனால் இங்கே இவர்கள் பேசுவது ஜூலை 12ல் ஈஷாவில் களைகட்டப் போகும் திருவிழாவைப் பற்றியது. அது என்ன ஜூலை திருவிழா?! இந்த உரையாடல்கள் பதில் தருகின்றன…


தியானலிங்க கோயிலைச் சுற்றிலும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை, ஒரே ஒரு இடத்தைத் தவிர.

தியானலிங்கக் கோயிலின் நுழைவாயிலில் கம்பீரமாய் விழிப்புடன் அமர்ந்துள்ள நந்தியைச் சுற்றிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும். அந்த இடத்தைக் கடந்து செல்பவர்கள் கேமராக்களில் சிக்காமல் செல்வதென்பது அரிது.

“அண்ணா! அண்ணா! நமஸ்காரம். கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துத் தர முடியுமா” அவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் என்பது கோரசாக ஒரே தொனியில் கேட்டதிலிருந்தே தெரிந்தது.

அந்த டிஜிட்டல் கேமராவில் எப்படிக் கிளிக் செய்வது என்று எனக்குக் கற்றுத் தந்துவிட்டு, நந்திக்கு முன் நின்றனர். ஃபோட்டோ நன்றாக வந்த சந்தோஷத்தில் என்னோடும் நட்பாகி என்னைப் பற்றி விசாரிக்க, நானும் என் பங்கிற்கு அவர்கள் பற்றிக் கேட்டறிந்தேன்.

பாவ ஸ்பந்தனா’ வகுப்பிற்கு வாலண்டியரிங் செய்துவிட்டு ஊருக்குக் கிளம்புவதாகத் தெரிவித்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த சிவாவையும் கோவையைச் சேர்ந்த ராஜாவையும் நண்பர்களாக்கியது ஈஷா யோகா வகுப்புதான்.
“போன வருஷம் இதே ஜூன் மாசம் சத்குருவோட மூணு நாள் யோகா வகுப்பில கலந்துகிட்டேன்.” என்ற சிவாவின் கண்கள் ஒளிர்ந்தன.

“ஓ அப்படியா?! பாண்டிச்சேரி மெகா க்ளாஸ்ல கலந்துகிட்டீங்களா? எப்படி இருந்தது க்ளாஸ்?”

ஒருசில கணங்கள் மௌனமாகிவிட்டு, “யோகால்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, அது நமக்கு ரொம்ப தூரம்னு நெனச்சிட்டு இருந்த என்னை, அந்த மூணு நாள் க்ளாஸ் கம்ப்ளீட்டா மாத்திருச்சு. இப்ப யோகா இல்லாம என்னோட நாள் ஆரம்பிக்கிறதே இல்ல. அதுலயும் சத்குரு முன்னாடி மூணு நாள் இருந்த அனுபவத்த எப்படி சொல்றதுன்னே தெரியல,” என்று கூறிய சிவாவிடம் ஒரு புறம் ஆனந்தமும் இன்னொரு புறம் அந்த அனுபவம் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கமும் தெரிந்தது.

“சத்குருவோட மூணு நாள் ஈஷா யோகா மறுபடியும் வருது தெரியுமா அண்ணா?” என்று நான் கேட்டவுடன், கோவை ராஜா அண்ணா இடைமறித்து,“ ஜூலை 12ந் தேதியிலிருந்து 14 வரைக்கும் ஆதியோகி ஆலயத்துல வச்சு நடக்கப் போகுது. அதுக்காகத்தான நாங்க கோயமுத்தூர்லயும் சுத்தியுள்ள கோபி, ஈரோடு, பொள்ளாச்சி… இப்படிப் பல ஊர்ல போய் க்ளாஸ் பத்தி சொல்லிட்டு வர்றோம்.” என்றார்.

“சத்குரு க்ளாஸ் எடுக்குறாரு, அதுவும் தமிழ்ல, கூடவே ஆதியோகியும் இருக்குறாரு. எவ்வளவு பெரிய விஷயம்ல! இந்த யோகா க்ளாஸ்ல கோவை மக்கள் மட்டுமில்லாம மதுரை, திருச்சி, திருநெல்வேலின்னு தமிழ்நாட்டுல எல்லாப் பகுதி மக்களும் கலந்துக்கலாம். அதனால, ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் இந்த மெகா க்ளாஸ் பத்தி எல்லா ஊர்லயும் போய் சொல்லிட்டு வர்றாங்கண்ணா,” என்ற சிவாவிடம் “அடுத்து எப்போ ஈஷா வருவீங்க?” என்றேன்.

“ஜூலை 12ல் க்ளாஸ் நான் 10ந் தேதியே இங்க வந்திருவேன்”

“மறுபடியும் க்ளாஸ் பண்ணப் போறீங்களா?” என நான் வேடிக்கையாகக் கேட்க

“க்ளாஸ் வாலண்டியரிங் அண்ணா” என்று அவர் சொல்லி முடித்தபோது, ‘14D’ பஸ் வந்துவிட்டது.

“ஓ.கே. அண்ணா போய்ட்டு வர்றோம், ஜூலை திருவிழாவில் மீட் பண்ணுவோம்” என்று இருவரும் ஜன்னல் வழியே கையசைத்துச் சென்றனர்.

மூன்று நாட்கள் சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்வது என்பது திருவிழாவாக இல்லாமல் வேறு எப்படி இருக்கும்! மெகா க்ளாஸ் பற்றி இன்னும் பல சுவாரஸ்யத் தகவல்களை வரும் நாட்களில் இங்கே பதிய உள்ளோம். திருவிழாவிற்கு ரெடியாகுங்க…!

வகுப்பு பற்றிய விவரங்களுக்கு:

சத்குருவுடன் ஈஷா யோகா – கற்றுக் கொள்ள வாருங்கள்

சென்னை: 83000 11000/99401 74789/044 24333185
மதுரை: 83000 12000/83000 18000/83000 66000
திருச்சி: 83000 21000/83000 92000/83000 75000
கோவை: 83000 45000/83000 15000/94434 94434

முன்பதிவு அவசியம்

இடம்: ஆதியோகி ஆலயம், ஈஷா யோகா மையம், கோவை
நாள்: ஜுலை 12 முதல் 14 வரை

வாருங்கள்… உங்களில் மலருங்கள்…

Prem Anandh P @ flickrஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert