சுட்டெரிக்கும் வெயிலிலும், சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டன்று மக்கள் பெறும் திரளாக வருகைத்தந்து, பலவிதமான பழ வகைகளை லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்து, தேவியின் அருள் பெற்றுச் சென்றனர்.

2

தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் காட்சிக்கு விருந்தாக மாலை, சூரியகுண்டத்தின் முன்னால், கலாஷேத்ரா மாணவி செல்வி.லூனி பங்ஸியாவின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

3

சத்குரு சன்னிதி பிரதிஷ்டை இந்த வாரம் சென்னையில் உள்ள 108 இல்லங்களில் சத்குருவின் அருளாசியுடன் இனிதே நடைப்பெற்றது.

6

பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி, அந்த ஊர்ப்பொது மக்கள், சுவாமி அபிஷேகத்திற்காக சூரியகுண்டத்தின் புனித தீர்த்தத்தை எடுத்துச் சென்றனர்.

4

தமிழகத்தில் பலர், தங்கள் திருமணத்திற்கு வருகை தரும் அனைவருக்கும், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி, அந்நாளை ஒரு பசுமையான நாளாக மாற்றுகிறார்கள். அந்த வரிசையில், கடந்த வாரம் நாமக்கலில் நடந்த ஒரு திருமணத்தில், தன்னார்வத் தொண்டர்கள் மரக்கன்றுகளை வழங்கினர்.

5

ஈஷா வித்யா பள்ளியின் நாள்காட்டியில் மேலும் ஒரு கொண்டாட்டத் திருநாள். நாகர்கோவில் ஈஷா வித்யா பள்ளி, மார்ச் 28ம் தேதியன்று UKG ல் பயிலும் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு நாளைக் கொண்டாடியது.