கடந்த வாரத்தில் நிகழ்ந்த ஈஷா நிகழ்வுகளின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே!

ஈஷாவில் இலவச உப-யோகா!

உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் தன்னார்வத் தொண்டர்கள், பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இலவசமாக உப-யோகா கற்றுத்தரப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழில் நிகழ்ந்த இந்த வகுப்பில் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு சத்குரு சந்நிதி பிரதிஷ்டை!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு சத்குரு சந்நிதி பிரதிஷ்டை!, Madurai sadhguru sannidhi

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு 120 சத்குரு சந்நிதிகள் வீடுகள் அலுவலகங்கள் என பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஏப்ரல் 3ஆம் தேதி மதுரையில் ஒரு தன்னார்வத் தொண்டரின் வீட்டில் நிகழ்ந்த சந்நிதி பிரதிஷ்டையில், சுமார் 75 பேர் கலந்துகொண்டு சத்குருவின் அருள்பெற்றுச் சென்றனர்.

சிங்கப்பூரில் சத்குருவுடன் ஒரு மாலை

ஏப்ரல் 8ஆம் தேதி சிங்கப்பூரில் மாலை 6 மணியளவில், சிங்கப்பூர் நீச்சல் கிளப்பில் சத்குருவுடன் ஒரு மாலைப்பொழுது (An Evening with Sadhguru) நிகழ்ச்சி நடந்தது. வாழ்வை மாற்றும் சத்குருவின் ஆழம்மிக்க கருத்துக்களை கேட்டு, சத்குருவின் அருள் பெற்றுச்செல்ல ஏராளமான சிங்கப்பூர் தன்னார்வத் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

ஈஷா வித்யாவில் Dell பணியாளர்கள்

ஈஷா வித்யாவில் Dell பணியாளர்கள், Isha vidhyavil dell paniyalargal

ஏப்ரல் 2ஆம் தேதியன்று கோவை ஈஷா வித்யா பள்ளியை பார்வையிட வருகைதந்த Dell நிறுவனத்தின் பணியாளர்கள் மாணவர்களின் திறமைகளைக் கண்டு வியந்தனர். கணித ஆய்வுக்கூடம், நூலகம், கணினி ஆய்வுக்கூடம், மின்னணு வகுப்பறை மற்றும் மாணவர்கள் மரங்கள் நட்டு வளர்க்கும் தோட்டங்கள் என பள்ளியின் பல அம்சங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

பார்வையிட்ட Dell பணியாளரின் பகிர்வு:

சரளமாக ஆங்கிலம் பேசும் மாணவர்களின் திறன் கண்டு நாங்கள் வியந்தோம்! அவர்களின் தன்னம்பிக்கை அபாரமானது! பள்ளியின் சிறப்புமிக்க நடவடிக்கைகளை நாங்கள் ஒளிப்பதிவு துணுக்குகளை பார்த்து அறிந்துகொண்டோம்.
-பிரபுகுமார், டெலிவரி மேலாளார், Dell

அமாவாசை-பௌர்ணமியில் இயற்கையோடு இருக்கும் நிகழ்வு!

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சத்குருவின் அறிவுறுத்தலின் படி ஈஷா யோக மையத்தில் இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. நிலா, வானம், நட்சத்திரம் என பலவற்றை மறக்கடித்த மின் விளக்குகளை சற்று தவிர்த்து, இயற்கையோடு ஒன்றியிருக்கும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரம தன்னார்வத்தொண்டர்கள் இந்த நேரத்தில் மைதானத்தில் ஒன்றுகூடி இயற்கையை இரசித்து மகிழ்கின்றனர்.