ஈஷாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் நடக்கவிருக்கும் நவராத்திரி கொண்டாட்டங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே…

ஈஷா யோக மையத்தில், செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 30 வரையிலான தசரா கொண்டாட்டங்களில் எங்களுடன் கலந்து கொள்ளுங்கள். நவராத்திரியன்று ஒவ்வொரு நாளும் மாலை வேளையில், விளக்கு பூஜை மற்றும் இசை, நடனத்துடன் கூடிய விசேஷ அபிஷேகம் லிங்கபைரவி தேவிக்கு நடைபெறும். இதைச் செய்யும்போது உருவாகும் சக்திமிக்க சூழ்நிலை ஒருவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் நல்வாழ்வுக்கும், ஆரோக்கியத்துக்கும், வெற்றிக்கும், வளத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 29 வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருட நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்த ஒன்பது இரவுகளும் தெய்வீகப் பெண்தன்மையை கொண்டாடும் விழாவாக நம் நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 21, 24, 27 ஆகிய தேதிகளில் மஹா ஆரத்தி நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்:

நவராத்திரி: செப்டம்பர் 21 - செப்டம்பர் 29

செப்டம்பர் 21-23: துர்காவின் நாட்கள்-குங்கும அபிஷேகம்
செப்டம்பர் 24-26: லக்ஷ்மியின் நாட்கள்-மஞ்சள் அபிஷேகம்
செப்டம்பர் 27-29: சரஸ்வதியின் நாட்கள்-சந்தன அபிஷேகம்

காலை:

காலை 7:00 - 7:30 குங்குமம்/மஞ்சள்/சந்தன அர்ப்பணிப்பு (செப்டம்பர் 21, 24, 27 ஆகிய தேதிகளில்)

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலை 7:40 அபிஷேகம்

மாலை:

மதியம் 1:20 - மாலை 4:20 லிங்கபைரவி சாத்தப்படும் நேரம் (LingaBhairavi Closing Time)
மாலை 4:20 - 5:00 லிங்கபைரவி திறக்கப்படும் நேரம்
மாலை 5:40 - 6:10 லிங்கபைரவியில் நவராத்திரி பூஜை
மாலை 6:10 - 6:45 ​ சூரியகுண்ட மண்டபத்தில் தரிசன நேரம்
மாலை 6:45 - 7:45 சூரியகுண்ட மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகள்
மாலை 7:45 - 8:30 லிங்கபைரவி ஊர்வலம் மற்றும் மஹா ஆரத்தி (செப்டம்பர் 21, 24, 27 ஆகிய தேதிகளில்)
இரவு 8:45 - அன்னதானம்
இரவு 8:30 - 9:15
கர்பா நடனம்: ஆண்களுக்கு - சூரியகுண்டம்;
பெண்களுக்கு - கைவல்யகுடிர்
இரவு 8:40 - 9:45 லிங்கபைரவியில் நவராத்திரி சாதனா
இரவு 10:00 லிங்கபைரவி சாத்தப்படும்

விஜயதசமி - செப்டம்பர் 30 (சிறப்பு வித்யாரம்பம்)

நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று, குழந்தைகளுக்கு கல்வியைத் துவக்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. (2 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இதில் பங்குபெறலாம்)

நவராத்திரி 2017 கலை நிகழ்ச்சிகள்

லிங்கபைரவி தேவியின் அளப்பரிய அருளையும் சக்தியையும் உணர நவராத்திரி நாட்கள் மிகச் சிறந்த காலகட்டமாய் உள்ளது. சிறப்பு மந்திர உச்சாடனை, அர்ப்பணிப்புகள், நவராத்திரி பூஜை மற்றும் மஹா ஆரத்தி ஆகியவை ஒவ்வொரு இரவும் கோலாகலமாய் நடைபெற உள்ளன. பாரம்பரிய இசை, நடனம் மற்றும் கிராமியக் கலைகளும் தினசரி அரங்கேற உள்ளன.

21 செப்டம்பர், வியாழன்
திரு பர்ஷ்வநாத் உபாதியாய
பரதநாட்டியம்

22 செப்டம்பர், வெள்ளி
ஈஷா சம்ஸ்கிருதி மாணவ-மாணவியர் கதாகாலட்சேபம்

23 செப்டம்பர், சனி
நாட்டுப்புற கலைநிகழ்ச்சி
மண்ணுக்கேத்த ராகம்

24 செப்டம்பர், ஞாயிறு
திரு. அஸ்வந்த் நாராயணன்
கர்நாடக வாய்ப்பாட்டு

25 செப்டம்பர், திங்கள்
திருமதி. கீதா ராஜா
கர்நாடக வாய்ப்பாட்டு

26 செப்டம்பர், செவ்வாய்
திருமதி. ஜெயஸ்ரீ & திரு. ஜெயராஜ்
வீணை இசை

27 செப்டம்பர், புதன்
செல்வி. காயத்ரி
(பரதநாட்டியம்)

28 செப்டம்பர், வியாழன்
செல்வி. சுனிதா அமின்
த்ருபாத் இசை

29 செப்டம்பர், வெள்ளி
ஈஷா சம்ஸ்கிருதி
நடன நிகழ்ச்சி

தினமும் மாலை 6.45 மணி முதல் 7.45 வரை சூரியகுண்ட மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும். 6.30 மணிக்குள் அமரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு:

தொலைபேசி: 83000 83111
மின்னஞ்சல்: info@lingabhairavi.org