ஈஷாவில் 2014 – ஓர் பார்வை!

உத்தராயணம் துவங்கிவிட்டது. புது ஆண்டு பிறக்க உள்ளது. இந்நேரத்தில் கடந்த ஆண்டு ஈஷாவில் நிகழ்ந்தவை, அடுத்த ஆண்டின் எதிர்பார்ப்புகள் என விரிகிறது இந்த வார சத்குரு ஸ்பாட்…

குளிர்கால கதிர்திருப்பம் நிகழ்ந்து, உத்தராயணத்தில் கால்பதிக்கிறோம். மற்றுமொரு புதிய வருடத்தின் அத்தியாயம் துவங்குகிறது. இந்நேரத்தில் கடந்துபோன ஆண்டை அசைபோட்டுப் பார்ப்பது என்றும் மாறா வழக்கம். நினைத்துப் பார்த்தால், 2014ல் ஈஷாவிற்கு பல செயல்கள் ஈடேறி இருக்கிறது. ஓராயிரம் வார்த்தையில் சொல்ல முடியாததை ஒரே புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அதற்கு இணங்க, என் வார்த்தைகளைக் குறைத்து, 2014ல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

‘சர்வதேச யோகா தினம்’ நிர்ணயிக்கப்பட்டு, எல்லாம் சிறப்பாக கூடிவருகிறது. 2015ஐ அமோகமான வருடமாக மாற்ற ஈஷா தயாராகி வருகிறது. இதற்கு உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். துளிர்த்து எழுந்திடுங்கள்… பரபரப்பான வருடம் காத்திருக்கிறது!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert