ஈஷா யோகா பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் தொட, இதோ இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மந்திரி சபை முழுவதுமே ஒன்றாக அமர்ந்து ஈஷா யோகாவினை சத்குருவிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளது. அது ஆந்திர மந்திரி சபை... கற்றுக்கொண்டது 3 நாட்களில். நிகழ்ச்சியில் என்ன நடந்தது? விவரம் அறிய மேலும் படியுங்கள்.

ஆந்திர முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் ஆந்திர மாநில மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு ஈஷா யோகா வகுப்பினை தொடர்ந்து 3 நாட்கள் நேரடியாக வழங்கினார்.

ஜனவரி 29ஆம் தேதி துவங்கிய இந்த யோகா வகுப்பு ஜனவரி 31 வரை நடைபெற்றது. இன்னர் இஞ்சினியரிங் (Inner Engineering) எனப்படும் இந்த யோகா வகுப்பில் 'ஷாம்பவி மஹாமுத்ரா' என்ற சக்திவாய்ந்த பயிற்சிக்கான தீட்சை சத்குருவால் வழங்கப்பட்டது. ஆந்திர மாநில முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில மந்திரிகள், IAS, IPS, IFS அதிகாரிகள், மேயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட, இந்த வகுப்பில் மொத்தம் 300 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சையின் மூலம், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒரு ஆழமான மாற்றத்தை அனுபவித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆந்திர பிரதேசத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் குழுவிடம் சத்குரு பேசியபோது...

"புதிய மாநிலத்தை வடிவமைக்கும் ஒரு தனித்துவமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, நிலப்பரப்பை பிரித்து துண்டாக்குவது பற்றியல்ல இது, 5 கோடி மக்களின் வாழ்வை தொட்டு, மாற்றி அமைக்கும் சாத்தியம் பற்றியது. அந்த சாத்தியம் உங்கள் கைகளில் உள்ளது. இத்தனை பேருடைய வாழ்க்கையை உங்களால் தொட முடிந்தால், தங்கள் வாழ்நாளில் பலரும் அறிந்திராத ஒரு முழுமையை உங்களால் அறிந்து கொள்ள முடியும். சரியான விஷயங்களை நீங்கள் செய்தால், உங்களால் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்" என்றார்.

திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் பேசும்போது...

"இந்த நிகழ்ச்சி அற்புதமாக நடந்தது. இது நடைபெற்ற விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புதிய மாநிலத்திற்காக நாம் அனைவரும் சிறப்பாக, மகிழ்ச்சியாக, விருப்பத்துடன் வேலை செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். ஈடுபாடு, விருப்பம் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்" என்று கூறினார்.

ஆந்திர அரசின் தகவல் தொடர்பு துறை ஆலோசகர் திரு. பரகல பிரபாகர் பேசும்போது,“2022, 2029 ஆண்டுகளில் நாம் திரும்பிப் பார்க்கும்போது, ஆந்திர மாநிலம் இவ்வாறு இருக்க வேண்டும் என இன்று நாம் கனவு காணும் சாதனைகளின் வெற்றிக்கு விதையாக இந்நிகழ்ச்சி பார்க்கப்படும்," என்றார்.

வகுப்பின் இரண்டாவது நாளில், கூடியிருந்தவர்கள் அனைவரும் மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்தனர். இந்தியாவை சுதந்திரம் நோக்கி நகர்த்திய மாமனிதருக்கு நெகிழ்வூட்டும் வகையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஈஷாவின் பசுமை கரங்கள் திட்டம் பற்றி ஒரு வீடியோ அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அதைக் கண்டு உற்சாகமடைந்த ஆந்திர முதல்வர், ஆந்திராவின் பசுமை பரப்பை 33% க்கு அதிகரிக்க ஈஷாவின் ஒத்துழைப்பை கோரினார். அதற்கு சம்மதித்த சத்குரு,"இது போன்ற இயக்கங்கள் வெற்றி பெற அவைமக்கள் இயக்கமாக மாற வேண்டும்" என்றார்.

இறுதி நாளில், ஒரு எழுச்சிமிக்க அமர்வில் பங்கேற்றவர்கள், ஆன்மீகம், வரலாறு, சமூகம், கலாச்சாரம் என்று பல தளங்களில் சத்குருவிடம் கேள்வி எழுப்பினார்கள். குண்டலினி, பாலின சமத்துவம், பாரம்பரிய மருத்துவ முறைகள், மதங்களின் தேவை போன்ற பல்வேறு தலைப்புகள் எழுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டன. இறுதியாக கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் இசை விருந்தும் இடம்பெற்றது.

இன்னர் இஞ்சினியரிங் பற்றி

ஈஷா யோகா எனும் உள்நிலை விஞ்ஞானம் ஒருவரை நிர்மாணிக்கும் கருவிகளை அவருக்கு வழங்குகிறது. ஆரோக்கியம், உள்நிலை வளர்ச்சி, வெற்றி ஆகிய அனைத்து அம்சங்களையும் ஒருவருக்கு அபரிமிதமாக வழங்குகிறது. தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் உயர்வு நாடுவோருக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். தொழில், குடும்பம், சமூகம் சார்ந்த உறவுகளில், குறிப்பாக தன்னுள்ளேயே முழுமை அடையும் வழிகளை இந்நிகழ்ச்சி வழங்குகிறது. யோக விஞ்ஞானத்தின் குறிப்பிடத்தக்க சாத்தியங்களை உணரும் வாய்ப்பை அரசாங்கத்தில் உள்ள தலைவர்களுக்கு இந்த நிகழ்ச்சி அளித்தது.

ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியின் பலன்கள்!

சத்குரு:

ஷாம்பவி மஹாமுத்ரா என்பது உயிரோடு இருக்கின்ற ஒரு தொழில்நுட்பம். இது வெறும் பயிற்சி அல்ல. இது உயிரோடு இருக்கின்ற ஒரு தன்மை. தினசரி பயிற்சி செய்து வந்தால் கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளேயிருந்து ஆனந்த நிலை பொங்கிப் பிரவாகிக்கும். அது மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான திறமை, புத்திசாலித்தனம், சக்தி என்று நமக்குத் தேவையான அனைத்தையும் பிரமாதமாக நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

எல்லாவற்றிற்கும் முக்கியமாக, நம்முடைய வாழ்க்கையை இலகுவாக நடத்திக் கொள்கின்ற அளவுக்குத் தேவையான சூழ்நிலை உங்களுக்குள்ளே வரும். சிறிது கவனம் செலுத்தி பயிற்சி செய்பவர்களுக்கு உயிர்த்தன்மை பிரமாதமாக செயல்படும். உங்களுக்குள்ளே இருப்பதை உணர்ந்துவிட்டால், பிறகு நீங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் கற்பனை செய்தேயிராத ஒரு மனிதராக வாழ முடியும்.