ஈஷா யோகா கற்க இந்தியா வந்த ரஷ்யர்கள்!

உலக நாடுகளின் வரலாற்றில் ரஷ்யா தனக்கென தனி இடம் பிடித்திருப்பது உண்மைதான்! தற்போது ஆன்மீகத்தின் தலைநகராம் இந்தியாவிற்கு ரஷ்யர்கள் வருகை தருவது நல்லதொரு ஆரம்பமே! ஈஷா யோக மையத்திற்கு ரஷ்யர்கள் வருகை தந்து கற்றுக்கொண்ட யோகா வகுப்புகள் பற்றியும் அவர்களின் அனுபவ பகிர்வுகளும் உங்களுக்காக!

ஈஷா யோகா கற்றுக்கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தருவதைப் பார்க்கிறோம். தற்போது ரஷ்யாவிலிருந்து யோகா கற்கும் ஆர்வத்துடன் 40 ரஷ்யர்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்துள்ளனர். வாரந்தோறும் நடைபெறும் அடிப்படை யோகா வகுப்பான இன்னர் இஞ்ஜினியரிங்கில் அவர்கள் முதற்கட்டமாக கலந்துகொண்டனர்.

ஈஷா யோகா கற்றுக்கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தருவதைப் பார்க்கிறோம். தற்போது ரஷ்யாவிலிருந்து யோகா கற்கும் ஆர்வத்துடன் 40 ரஷ்யர்கள் ஈஷா யோக மையத்திற்கு வந்துள்ளனர்.
ஜனவரி 4ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் உபயோகா பயிற்சி மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் ஆகியவற்றையும் கற்றுக்கொண்டனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் ஈஷா யோக மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி நடைபெற்ற சூரிய க்ரியா பயிற்சியை கற்றுக்கொண்டனர். இவர்களில் பலர் ஆங்கில மொழி புலமை இல்லாதவர்கள். மேலும் சிலர் இதுவே முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள். யோகா கற்றுகொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2017ல் சத்குரு அவர்கள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்திய தூதரக வளாகத்தில் சத்சங்கம் ஒன்றை நிகழ்த்தினார். இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தற்போது, 4 நாட்கள் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்ட நடாஷா என்பவர் இப்பயிற்சி பற்றி கூறுகையில், “நான் ஒரு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன். நான் உலகின் பல இடங்களுக்கு பயணித்திருக்கிறேன்; பல ஆசிரமங்களுக்குச் சென்றுள்ளேன்; யோகா பயிற்சிகள் கற்றுள்ளேன். ஆனால், ஈஷாவில் கற்றுகொண்ட பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாகவும் மிகுந்த பலனளிப்பதாகவும் உள்ளது”, என்றார்.

யோகா ஆசிரியர்களில் ஒருவரான யூரி குஸ்மின் அவர்கள் கூறுகையில், “ஈஷாவில் ரஷ்ய மொழியில் யோகா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்று அறிவித்தவுடனேயே நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யத் துவங்கிவிட்டனர். ரஷ்யா, கசக்ஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷ்ய மொழி பேசுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர்; மேல்நிலை பயிற்சிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்”, என்றும் குறிப்பிட்டார்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert