மலரும் நினைவுகளும் தொடரும் பேரலையும்!

கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற மஹாசிவராத்திரி பற்றி ஈஷா பிரம்மச்சாரிகளும் முழுநேர தன்னார்வத் தொண்டர்களும் தங்களின் பசுமை மாறா நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள். இடைஇடையே ஈஷா யோக மையத்தில் நமது தன்னார்வத் தொண்டர்கள் யோக வீரர்களின் கை வண்ணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த “மஹா மஹாசிவராத்திரியின்” ஏற்பாடுகள் குறித்தும் பகிரவிருக்கிறோம்!

பிப்ரவரி 19, 2017 9:50pm

உயிர் கொண்டு உருவாகி

சத்குரு யோகேஷ்வரரை பற்றிப் பேசும்போது, "கடந்த 2 மாதமாக லிங்கத்திற்குள் அபரிமிதமான உயிர்சக்தி விதைக்கப்பட்டிருக்கிறது," என்றார்.

மேலும்...

"நீங்கள் பார்வையாளர்கள் மட்டுமல்ல. இந்த பிரதிஷ்டையில் பங்கேற்கவும் செய்வீர்கள். இந்தப் பிரதிஷ்டையை மிகவும் நெருக்கமாக இருக்கும் வெகு சிலரை மட்டுமே கொண்டு செய்வது சிறந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தினை கொண்டு இப்படி ஒரு செயல்முறையில் இறங்குவது பைத்தியத்தியக்காரத்தனமான முயற்சி.

நான் இருக்கும்போது நீங்கள் இது போன்றதொரு பிரதிஷ்டையில் கலந்து கொள்ளாவிட்டால் எப்போது இந்த அனுபவத்தை உணரப் போகிறீர்கள். நீங்கள் எனக்கு மிக மிக நெருக்கமானவர்கள் என நான் யூகித்துக் கொள்ளும் அளவிற்கு நான் பைத்தியமாக இருக்கிறேன்.

இங்கே நீங்கள் அமரும்போது புதியவர் போல அமரக்கூடாது. எனக்கு நெருக்கமானவராக அமரவேண்டும். என்னுடைய திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் பைத்தியக்காரத்தனத்தால் நான் இந்தப் பிரதிஷ்டையை உங்கள் அனைவர் முன்னும் செய்கிறேன்," என்றார்.

பிப்ரவரி 19, 2017 9:00pm

ஆலயம் முழுக்க நிறைந்த தீவிரம்!

yogeshwar-linga-consecration-2

yogeshwar-linga-consecration-3

மேள தாளத்துடன் ஈஷா பிரம்மச்சாரிகள் சம்ஸ்கிருதி மாணவர்கள் புடைசூழ ஆதியோகி ஆலயத்தில் பிரவேசித்தார் யோகேஷ்வரர்.

பிரம்மச்சாரிகள் யோகேஷ்வரரை வண்டியிலிருந்து அவரது இருக்கையில் அமர்த்திக் கொண்டிருந்தனர். சவுண்ட்ஸ் ஆப் ஈஷா "குருபாதுகாப்யா" பாடிக் கொண்டிருந்தனர்.

சத்குரு முற்றிலும் வேறு ஒரு நிலையில் இருந்தார்.

அவர் முகத்தில் இருந்த தீவிரமும் கருணையும் ஆதியோகி ஆலயம் முழுக்க நிறைந்தது.

பிப்ரவரி 19, 2017 8:45pm

ஆதியோகி ஆலயத்தில் யோகேஷ்வர லிங்கம்:

yogeshwar-linga-2

ஆதியோகி ஆலயத்தில் வெறும் தலைகள் மட்டுமே தெரிந்தன. இவ்வளவு கூட்டம் இருப்பினும் எந்த குறிப்புகளும் கொடுக்கத் தேவைப்படவில்லை. அனைவரும் தீவிரத்தின் உச்சத்தில் இருந்தனர்.

"யோக யோக யோகேஷ்வராய!" மந்திர உச்சரிப்பில் சுமார் 13,000 தியான அன்பர்கள். ஆதியோகி ஆலயம் மந்திர உச்சாடனையில் அதிர்ந்தது.

காங்கேயம் காளை அசைந்து வர, சத்குரு அதில் அமர்ந்து வர, யோகேஷ்வர லிங்கம் பின்னால் அசைவின்றி வர அனைவரும் பலத்த கை தட்டல்களுடன் வரவேற்றனர்.

பிப்ரவரி 20, 2017 8:25am

பூமிப் பந்து முழுவதும் வலம் வருவோம்!

நாகர் கோயில் பெங்களூரு, தேனி தாராபுரம் சிலர் சென்னையிலிருந்து பாத யாத்திரையாக ஈஷா யோக மையம் வந்தடைந்தப் பின்னர் தியானலிங்க தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

மிகுந்த உற்சாகத்துடன் நம்மிடையே அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

"எங்களுக்கு கால் வலியெல்லாம் இல்லை. எங்களுடன் சத்குரு கூடவே இருந்தார்."

"சத்குருவின் சந்நிதியை பொது மக்கள் தொட்டு வணங்குவது ஆச்சர்யமாக இருந்தது."

"ஈஷா பற்றி தெரியாதவர்கள் எல்லாம் எங்களுக்கு உதவினர்."

"இது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மகத்தான வாய்ப்பு. பிறவிப் பயன் அடைந்ததை போல இருக்கிறது."

"மற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகள், எங்களைப் பார்த்தவுடன் மரியாதையுடன் வழிவிட்டனர்."

"நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தது. தண்ணீர் வேண்டும் என நினைத்தால் யாரோ ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். பூவே இல்லாத கருவேலங்காடுகள் நிறைந்த பகுதியில் வந்து கொண்டிருந்தோம். பூஜைக்கு பூக்கள் வேண்டும் என நினைத்தபோது அந்த காட்டிற்குள் ஒரே ஒரு பூச்செடி கண்ணில்பட்டது"

"பொது மக்கள் எங்கள் பாதங்களை வணங்குகின்றனர். எங்கள் கால்களில் தண்ணீர் ஊற்றி பாதாபிஷேகம் செய்தனர்"

"இந்த யாத்திரை எங்களுக்கு கொண்டாட்டமாய் இருக்கிறது. இப்படி ஒரு சந்தோஷத்தை நாங்கள் அனுபவித்ததே இல்லை."

"பாதயாத்திரை முடிந்து விட்டதே என்றிருக்கிறது. இந்த பூமி முழுக்க வலம் வர உடம்பில் தெம்பு இருக்கிறது."

சத்குரு சென்ற பிறவியில் உணவின்றி பல சிரமங்களை அனுபவித்தார். ஆனால், எங்களுக்கு ஒரு நாளும் உணவிற்கு குறையின்றி சத்குரு பார்த்துக் கொண்டார்," என கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர் சிவாங்காக்கள்.

பிப்ரவரி 20, 2017 8:10am

இதோ வந்துவிட்டார்கள்!

மேள தாளங்கள் இசைத்திட துவங்கியது. உள்ளே நுழையாமல் வாசலிலேயே பரவச ஆட்டத்தில் சிவாங்காக்கள்! முகத்தில் களைப்போ சோர்வோ இல்லை! கண்களில் கண்ணீர்!

அவர்கள் முகத்தை பார்த்தாலே பக்தியின் தீவிரம் தொற்றிக் கொள்ளும் விதமாய் இருந்தது.

வேடிக்கை பார்க்கவந்தவரெல்லாம் இவர் முகம் பார்த்து கண்ணீரில் நின்றிருந்த அந்தக் காட்சி இதோ உங்களுக்காக!

பிப்ரவரி 20, 2017 8:00am

பக்தி எனும் தீ

மாலை 5 மணி இருக்கும். நம் ஈஷா யோக மையத்தில் பிரம்மச்சாரிகள் வரவேற்க காத்திருந்தனர்.

மேள தாள வாத்தியமும் தயாராக இருந்தது. மாலைகள் கட்டப்பட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள். பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்கிய அந்த பாதயாத்திரை சுமார் 360 கிமீ பயணத்திற்குப் பிறகு இன்று (19.02.2017) ஈஷா யோக மையத்தில் நிறைவடையவிருக்கிறது.

இவ்வளவு தூரம் கால் கடுக்க நடந்து வந்த இவர்கள் இங்கு வந்தவுடன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்து விடுவார்களோ? சோர்வடைந்து அமர்ந்து விடுவார்களோ? மனதிற்குள் பல கேள்விகள்! அங்கே நம் தன்னார்வத் தொண்டர்கள் கூட்டமாய் அவர்களை வரவேற்க காத்திருந்தனர்.

பிப்ரவரி 19, 2017 10:00pm

என் கேள்விகளுக்கு இவரே பதில்!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

19 வயது துடிப்பு மிக்க அந்த இளைஞர் டெல்லியில் design engineering படித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிறுவயதிலிருந்தே இசைதான் அவரது ஆர்வம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அந்த கோர விபத்தில் தன் இரு கண்களையும் இழந்தார். திடீரென இருண்டது வாழ்க்கை.

"விரக்தியும் கோபமும் என்னை வெறித்தனமான மனிதனாக மாற்றியது," என்கிறார் ஈஷான். "ஏன்" இது அவர் எப்போதும் கேட்கும் கேள்வி. நான்கு சுவருக்குள் கழிந்த அந்த 2 வருடங்களில் அவரது ஒரே துணை தாய். அவரது ஒரே நம்பிக்கை சத்குருவின் குரல்.

ஈஷானின் தாய் பேசத் துவங்கினார்...

"என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான், வாழ்வு பற்றிய அவனது கேள்விகளுக்கு சத்குரு மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறிவிட்டேன். தொடர்ந்து சத்குருவின் பேச்சை Youtubeல் கேட்டுக் கொண்டே இருப்பான்," என்றார்.

ஈஷான் தனது அனுபவத்தை கூறும்போது...

ஷாம்பவி என்னை wildlife லிருந்து how life என்ற mode ற்கு மாற்றிவிட்டது. பின்னர் பாவஸ்பந்தனா வந்தேன். பாவஸ்பந்தனாவை உலகிலேயே மிகப் பெரிய ஒன்றாக நினைக்கிறேன்.

சத்குரு இந்த பிரதிஷ்டை பற்றிச் சொன்னபோது வாழ்நாளில் ஒரு வாய்ப்பு என்று கூறியதால் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். என் மனதிற்கு மிகவும் பிடித்த இசையைப் பயில நொய்டா இசைக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்," என்று கூறும் ஈஷானின் முகத்தில் ஆனந்தமே தெரிகிறது.

பிப்ரவரி 19, 2017 6:40pm

கடல் தாண்டிய தேடல்!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

மாரிக்கோ ஹோவார்ட் கிஷி:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜப்பானிய பெண்மணி - தற்போது லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியல் விரிவுரையாளர். தன் பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரம் விடுப்பு எடுத்து இந்தியாவை நோக்கி பயணம் செய்தார்.

"நான் ஈஷா யோகா வகுப்பு செய்த பின்னர் எனக்குள் பெரும் மாற்றம் ஏற்பட்டது. எனது தோழிகள் நிக்கோலாவும் க்ளாரியும் என்னைப் போலவே ஈஷாவின் ஷாம்பவி பயிற்சியை உணர்ந்தனர். நாங்கள் மூவரும் சேர்ந்து இந்தியா செல்ல முடிவெடுத்தோம்.

இந்தப் பயிற்சி என்னை தூய்மை செய்கிறது. எனது அகங்காரத்தை அழிக்கிறது. இங்கிருக்கும் "புதுவித சக்தி!" இதை எப்படிச் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. இதைத் தேடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்," என்கிறார்.

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

நகுயென் பௌ லௌன்:

நகுயென் பௌ லௌன்- பால்மனம் மாறா வியட்நாமிய பெண். சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் இன்னர் இன்ஞ்சினியரிங் வகுப்பு செய்த பின்னர் ஈஷாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்.

"சிங்கப்பூரில் சத்சங்கம், தன்னார்வத் தொண்டர்கள் சந்திப்பு என ஈஷாவுடன் தொடர்பில் இருப்பதற்கு பல வழிகள் உள்ளன. தியானலிங்கத்தைப் பற்றி பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். தியானலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் ஆசை!

சத்குரு யோகீஷ்வராய லிங்கம் பிரதிஷ்டை பற்றி பேசும்போது அதனை பார்க்க நான் இந்தியா செல்ல வேண்டும் என்று என் பெற்றோர்களிடம் கூறினேன். முதலில் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. 'சிங்கப்பூரிலிருந்து 20 பேர் இந்தியா போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து போகிறேன்,' என்று கூறி என் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து நான் வந்து விட்டேன்," என்கிறார்

பிப்ரவரி 19, 2017 6:00pm

யோகேஷ்வராய லிங்க பிரதிஷ்டை

தியானலிங்க பிரதிஷ்டையை தவறவிட்டவர்கள் இன்றும் அதைப் பற்றி குறைபட்டுக் கொண்டிருக்க, "இது தியானலிங்கப் பிரதிஷ்டையைப் போலவே இருக்கும். இது அந்த அளவு இல்லையென்றாலும் அதே விதமாய் அதன் சுவை இருக்கும்," என்கிறார் சத்குரு. இந்த லிங்கத்தின் தன்மை முக்தி நோக்கியதாக இருக்கும். இதனால் பலரும் இந்த பிரதிஷ்டைக்கு இன்று வருகை தந்திருக்கிறார்கள்.

72 நாடுகளிலிருந்து இதனைக் காண மக்கள் வந்துள்ளனர். "முக்தி" என்ற சொல் பற்றி நம் கலாச்சாரத்தில் கேள்விப்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிற தேசத்திலிருந்து மக்கள் முக்தி தேடி நம் தேசம் நோக்கி வந்தவண்ணம் இருப்பது மிக வியப்பாக இருக்கிறது.

இனி யோகேஷ்வராய லிங்கப் பிரத்ஷ்டையில் பிரத்யேகத் தொகுப்புகளை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். தொடர்பில் இருங்கள்!

பிப்ரவரி 19, 2017 5:00pm

நம் வாழ்நாளில் ஒரே ஒரு வாய்ப்பு - ஆதியோகி!

ஈஷா யோக மையத்திற்குள் நுழையும்போது அண்ணார்ந்து பார்த்தால் தெரிவது இரண்டு காட்சிகள். ஒன்று பிரம்மாண்ட நீலவானம். இன்னொன்று வானத்தை முட்டிக் கொண்டு நிற்கும் பிரம்மாண்ட ஆதியோகி.

வானமே கூரையாய் இனி இந்த பூமி உள்ள நாள் வரை, "யோக அறிவியலை உலகிற்கு அளித்தவன் இவனே," என்பதற்கு சாட்சியாய் நிற்கின்றான் ஆதியோகி! ஆதியோகிக்கு முன்பாக யோகேஷ்வராய லிங்கம் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்த பிரதிஷ்டை நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கவிருக்கிறது.

பிப்ரவரி 19, 2017 12:30pm

புல்வெளியின் பின்புலம்

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

இது மஹாசிவராத்திரி விழாவில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்த வருடம். கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதால் நளந்தா மைதானத்திற்கு மஹாசிவராத்திரிக் கொண்டாட்டம் மாற்றப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் மேடை அலங்காரத்திலும் பெரும் புரட்சி ஏற்பட்ட வருடம் அது. மரப் பலகையில் மெல்லிய புல் வளர்த்து அதற்கிடையே மலர் அலங்காரம் செய்து ஆங்காங்கே விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

மஹாசிவராத்திரிக்கு பல நாட்கள் முன்பே இதற்காக புல்வளர்க்கும் பணி துவங்கியது. காற்றிலிருந்தும் பறவைகளிடமிருந்தும் சில மனிதர்களிடமிருந்தும் இதைக் காப்பாற்றி மஹாசிவராத்திரி மேடைக்காக தயார்செய்தனர். மேடையில் அதை ஏற்றியபின் சத்குருவிற்கு பின்னால் ஒரு இயற்கையான புல்வெளி இருப்பது போலத் தெரிந்தது.

அவ்வருடம் மஹாசிவராத்திரி அன்று பலரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

பிப்ரவரி 19, 2017 11:10am

2004

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

2004 ஆம் ஆண்டில்தான் தியானலிங்கத்தை சுற்றியிருக்கும் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

மஹாசிவராத்திரி வேலைகளுக்கு இடையே இந்த மண்டபம் கட்டும் பணியும் சேர்ந்து பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்தது. சரியாக மஹாசிவராத்திரி அன்று தியானலிங்க மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.

பிப்ரவரி 19, 2017 11:00am

2004: உயர்ந்த மேடை!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

சிவக்குமார் ஷர்மா வந்தபோது நான் இதுவரை இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு வாசித்ததே இல்லை என்று வியந்து கூறினார்.

அவரை மேடைக்கு அழைத்துச் செல்வது சிரமமான செயலாக இருந்தது. பத்து பேர் அவரைச் சுற்றி நின்று அவரை மேடைக்கு அழைத்துச் சென்றோம். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் வீடியோ குழு வைத்திருந்த சிறிய மேடையை எடுத்து அவருக்குக் கொடுத்துவிட்டோம். அப்போது வீடியோ குழுவின் கோபத்திற்கு ஆளானாலும் மக்கள் ஷர்மா அவர்களை நன்றாக காண்பதற்கு அது உதவியாக இருந்தது.

பின்னர் சிவகுமார் ஷர்மா இதைப்பற்றிக் கூறும்போது "இவ்வளவு பெரியக் கூட்டம் அமைதியாகவும் அசையாமலும் அமர்ந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது," என்றார்.

பிப்ரவரி 19, 2017 10:00am

பிரம்மம் ஒகட்டே! பரப் பிரம்மம் ஒகட்டே!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

இது சத்குருவின் கண்களில் கண்ணீர் வரவைத்த இசை! பத்மபூஷன் சுதா ரகுநாதனின் குரலில். தியானலிங்கப் பிரதிஷ்டையின்போது அன்னமாச்சாரி அவர்களால் இயற்றப்பட்ட, "பிரம்மம் ஒகட்டே பரப்பிரம்மம் ஒகட்டே" என்றப் பாடலை அவர் பாடிய விதமும் தீவிரமும் சத்குருவின் கண்களில் கண்ணீரை வரவைத்தது.

அதே பாடலை மஹாசிவராத்திரி அன்று பாடி அன்றிரவு அனைவரையும் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தினார் சுதா ரகுநாதன்!

பிப்ரவரி 18, 2017 6:00pm

தானிக்கண்டியில் நம் தன்னார்வத் தொண்டர்கள்

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

நம் யோக வீரர்கள் தானிக்கண்டி கிராமத்தில் வீடு வீடாக சென்று மஹாசிவராத்திரி அழைப்பு விடுத்தனர். எங்களுக்கு சத்குரு எவ்வளவோ செய்கிறார். இருப்பினும் நீங்கள் எங்களை இப்படி நேரில் வந்து அழைப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

நாடாள்பவரும் சரி! நம் கிராமத்து விவசாயியும் சரி! எவரும் இந்த நிகழ்வை தவறவிடக்கூடாது என்ற முனைப்பில் நம் யோக வீரர்கள்!

பிப்ரவரி 18, 2017 5:00pm

2002: பாடகரைக் காணவில்லை!​

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

"இம்முறை சத்குரு வெளி மாநிலங்களிலும் வகுப்பு எடுத்திருக்கிறார். இதனால் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்ப்பார்த்தோம். முதல் முறையாக 50,000 பேர்! நம் சாதனையை மீண்டும் நாமே முறியடித்தோம். மிகப் பிரபலமான கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ அவர்களை அழைத்திருந்தோம்.

அலைமோதும் கூட்டத்தை தடுத்து ஜெயஸ்ரீ அவர்களை மேடை நோக்கி அழைத்துச் சென்றேன். திடீரென பின்னால் திரும்பிப் பார்க்கும்போது அவர் காணவில்லை! அவ்விடம் முழுக்கத் தேடினேன். எங்கு பார்த்தாலும் வெறும் தலைகள் மட்டுமே தெரிந்தன. ஒரு பங்கேற்பாளரைப் போல ஈஷா கிராஃப்ட்ஸ் அங்காடியில் பை வாங்கிக் கொண்டிருந்தார். பிரபலமான இவரின் எளிமை மிகவும் அதிசயமாக இருந்தது," எனத் தன் மறக்க இயலாத மஹாசிவராத்திரி அனுபவத்தைப் பகிர்கிறார் ஒரு பிரம்மச்சாரி!

பிப்ரவரி 17, 2017 12:00pm

1997

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

உள்ளூரைச் சேர்ந்த கலைஞர் பிரசன்னா & சாமலேஸ்வரியின் இசையில் அன்றைய மஹாசிவராத்திரி களைகட்டியது.

சாமலேஸ்வரி ஒரிசாவைச் சேர்ந்தவர். இவரது பாடலை சத்குரு முதல் முதலாக கர்ம யாத்திரையின் போது கேட்டார். இவர் பாடிய பாடலோ இந்தியில். மொழி புரியவில்லை. பக்தியும் ஈடுபாடும் கலந்தால் குரலில் தெய்வீகம் மட்டுமே வெளிப்படும். இதில் அன்று தொடப்படாதவர் எவரும் இல்லை. அதன்பிறகு பலமுறை அவர் சிவராத்திரி விழாவில் பாட அழைக்கப்பட்டார்.

பிப்ரவரி 17, 2017 11:10am

1997-2017: எங்கள் சாதனையை நாங்களே முறியடித்தோம்!

சென்ற முறை சிவராத்திரிக்கு 5000 பேர் வந்ததையே நாங்கள் பெரும் சாதனையாக நினைத்தோம். இந்த முறை 11000 பேர்! இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க அன்று ஈஷாவிற்கு அனுபவம் இல்லை!

ஒரு வாரம் முன்னதாக இதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு இரவு பகலாக தன்னார்வத் தொண்டர்கள் தன்னை அர்ப்பணித்தனர்.

இப்படி ஒவ்வொரு முறையும் எங்கள் சாதனையை நாங்களே முறியடித்துக் கொண்டே இருந்தோம், இருக்கிறோம்.

20 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றோ லட்சக்கணக்கானவர்களை வரவேற்றுக் காத்திருக்கிறது ஈஷா யோக மையம்.

பிப்ரவரி 17, 2017 9:00am

தீவிர சாதனை!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

வீடு குடும்பம் வேலை தொழில் என பல்வேறு சூழ்நிலைகளில் பிணைக்கப்பட்ட மனிதன் இவை எல்லாவற்றிலிருந்தும் சிலகாலம் விடுப்பு எடுத்து சாதனையில் ஈடுபட முடியுமா?

40 நாட்கள், 21 நாட்கள் என ஒரு குறிப்பிட்ட காலம் உலகவாழ்வில் இருந்து விடுபட்டு ஆன்மீக சாதனையில் ஈடுபட...

உறுதி வேண்டும்!
குருவின் அருள் வேண்டும்!
தீவிரம் வேண்டும்!

அதிகாலை ஆதியோகியின் முன் யோகப் பயிற்சி!

காலை ஏழு மணிக்கு தியானலிங்கத்தின் முன் சுமார் 500 யோக வீரர்கள் அரை மணிநேரம் தீவிர தியானம்!

பிப்ரவரி 17, 2017 8:00am

1996: ஆகாயக் கூரை!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

இந்த வருடம் கைவல்ய குடிர் அறை போதாது. நிறைய மக்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம்! வெட்டவெளியில் இருண்ட வானத்தின் கீழ் எங்கள் சிவராத்திரி துவங்கியது. அன்றிலிருந்து இன்று வரை மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முதல் முதலாக 5000 பேர் கூடியது மிகவும் வியப்பாக இருந்தது. எந்த விளம்பரமும் இல்லை. எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி ஆன்மீகத் தேடுதலில் முதல் முறையாக இந்தப் பெரியக் கூட்டம் ஈஷாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையே! கடந்த வருடத்தைவிட சுமார் 5 மடங்கு பெரிது!

சிவா என்ற ஷெனாய் வாசிக்கும் ஒரு அன்பர் இரவு முழுக்க எங்களுக்கு பாம்பு இசை இசைக்க, எங்களில் பலர் பாம்பு நடனம் புரிந்திட, வித்தியாசமாய் கழிந்தது அன்றைய இரவு! சிவனைப் பற்றி ஒரு திரைப்படத்தையும் கண்டு களித்தோம். அன்றிலிருந்து 2004 வரை அந்த இடம்தான் சிவராத்திரி நடைபெறும் இடமாக இருந்தது.

பிப்ரவரி 16, 2017 11:00pm

சீனாவிலிருந்து யோக வீரர்கள்

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

கோவை ஈஷா யோக மையத்தில் இன்னர் இன்ஞ்சினியரிங் வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. 120 பங்கேற்பாளர்களில் 109 பேர் சீன தேசத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்பாளர்களுக்கு சமையலறையில் காலை உணவு தயார்செய்துவிட்டு ஆதியோகியின் முன் சாதனாவில் ஆழ்ந்த சீனத்து யோக வீரர்கள்!

பிப்ரவரி 16, 2017 10:00pm

1995: பாட்டியும் பாடலும்!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

இப்ப இருக்கிற மாதிரி ஆடியோ வசதி எல்லாம் அப்ப இல்லை. இரவெல்லாம் விழித்திருக்க நாங்கள் ஒவ்வொருவராக பாட்டு பாடிக் கொண்டிருந்தோம்.

அப்போ சரியா பேசக்கூட இயலாத அந்த 80 வயதுப் பாட்டி சத்குருவின் அருகில் வந்து அமர்ந்ததும் அழகாகப் பாடத் துவங்கினார். "ஷங்கர குருவே" எனத் துவங்கிய அவரது பாடலில் அந்த அறையை ஒரு கலக்கு கலக்கினார்.

ஒவ்வொரு பாடல் பாடி முடித்தபின்னும் அடுத்தப் பாடல் பாட சத்குருவிடம் அனுமதி கேட்பதுபோல அவரைப் பார்க்க சத்குருவும் புன்னகையுடன் அனுமதி கொடுக்க அன்று அவரது கச்சேரி களைக்கட்டியது.

அவரது பக்தியும் அவரது மௌன மொழியும் எங்களை கண்ணீரில் நனைத்தது. காலை 3 மணிக்கு எங்கள் கலை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சிவன் பற்றியதொரு திரைப்படத்தைப் பார்த்தோம்!

பிப்ரவரி 16, 2017 8:00pm

இவர்கள் வீரர்கள்

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

பிறரை வீழ்த்தி வெற்றி கொள்பவரே வீரர். ஆம், ஈஷா யோக மையத்தில், இவர்களெல்லாம் யோக வீரர்கள். யாரையும் வீழ்த்தவில்லை, தன்னை வீழ்த்தி ஆதியோகியின் அருளினில் கரைந்து போக வந்துள்ள இவர்கள் எல்லாம் யோக வீரர்கள்.

தினமும் காலையில் ஆதியோகியின் திருவுருவத்தின் முன் தன் சாதனாவில் கரைந்துபோகும் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

"ஆதியோகியின் முன் தினமும் யோகப் பயிற்சி செய்யும்போது, கண்களில் நீர் பெருக்கெடுக்காத நாளே இல்லை," என்கிறார் காயத்திரி.

"அன்பிற்கும் ஆனந்தத்திற்கும் நான் பிறரைச் சார்ந்திருந்தேன். ஈஷா யோக மையத்திற்கு நான் வந்தபோது கனத்த இதயத்துடன் வந்தேன். கிட்டத்தட்ட 40 நாட்கள் முடியவிருக்கும் இந்த தருணத்தில், ஆதியோகியின் பாதங்களில், எனது பயணம் அன்பை நிறைத்தது. நான் இதனை கற்பனைக்கூட செய்து பார்க்கவில்லை. இப்போது எனது அன்பிற்காக நான் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை," என்கிறார் பெங்களூருவிலிருந்து வந்திருக்கும் நியூராலஜிஸ்ட், பத்மா ஐயர்.

"நம் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வினை நான் தவறவிட விரும்பவில்லை. இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. இங்கிருக்கும் அனைத்தையும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இதனை நிகழச் செய்வதில் பரபரப்பாக நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பது மிகவும் ஆனந்தமான அனுபவமாக இருக்கிறது," என்கிறார் மும்பையை சேர்ந்த சுமித்.

விடியலில் ஆதியோகியின் முன் பயிற்சி செய்யும்போது, எனக்குள் தினமும் ஏதோ ஒரு விடியல் நிகழ்வது போல இருக்கிறது. என் இதயம் ஆனந்தத்தில் இருக்கிறது. ஒரு புனிதமான மண்ணில் நிற்பதை உணர்கிறேன்," என்கிறார் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் யோக வீரர் ஆனி ஹேட்டிங்.

பிப்ரவரி 16, 2017 3:30pm

1995: குடிசையில் மஹாசிவராத்திரி!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

மண்தரை தென்னை ஓலையில் கட்டப்பட்ட அந்த இடத்திற்கு அடிக்கடி அழைக்காமல் வந்து விடுவார்கள் நம் அழையா விருந்தாளிகள்! இவர்கள் வேறு யாரும் அல்ல! அன்பாக தலையைக் காட்டிவிட்டுச் செல்லும் அழகிய மயில்கள்தான்!

கூரையில் ஏறி நமது பாட்டிற்கு தாளம்போட்ட அந்த மயில்கள் பல வருடங்கள் ஆகியும் இன்றும் நம்முடனான தங்கள் நட்பைத் தொடர்கின்றன. எந்த பயமும் இல்லாமல் நம்மை இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றன.

அந்த இடம்தான் இன்று கைவல்ய குடிலாக இருக்கிறது. சத்குரு முதல் முதலாக 90 நாட்கள் ஹோல்னெஸ் வகுப்பு நடத்திய இடம் இது!

Isha Live Blog: மஹாசிவராத்திரி - கதை பேசலாம் வாங்க!, Isha live blog mahashivarathri kathai pesalam vanga

மலர்களிலே எங்கள் அன்பு

எப்போதும் சத்குரு அமரும் மேடையில் வெள்ளைத் துணியால் போர்த்தி வைப்பது வழக்கம். முதல்முறையாக, அங்கே சில மலர்களை வைத்து அலங்காரம் செய்தோம்!

முதல் முதலாக நம் அன்பு அந்த மலர்களில் வெளிப்பட்டபோது, அங்கிருந்த 900 தியான அன்பர்களும் அதன் அழகை ரசித்தனர்.

அன்னதானம்

அன்று சிவனைத்தேடி வரும் உயிர்க்கெல்லாம் வயிறு நிறைந்திட வேண்டும் எனத் துவங்கிய அன்னதானம், இன்றும் ஒரு குறையும் இன்றி அதே உணவு வகை அதே சுவையுடன், அன்பும் கலந்து அளித்து வருகிறோம்.

பிப்ரவரி 16, 2017 2.10pm

கடந்து வந்தப் பாதையில் கற்களும் முற்களும் இருந்திருக்கலாம், ஆனால், குருவின் அருளில் என்றும் வலி ஏற்பட்டதில்லை. இன்று ஈஷாவின் பூக்கள் உலகெங்கும் மணம் வீசிட... விதைத்தவரையும் வளர்த்தவரையும் திரும்பிப் பார்க்கிறோம்!

1995

1-msr-gossip-1995-an-iconic-spot

நீங்கள் இங்கே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடத்தில்தான் 1995 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி நடைபெற்றது. அன்று குருபூஜை நடந்தது. அன்று குருபூஜை நடந்த அதே இடத்தில்தான் இன்று தியானலிங்கம் நின்று கொண்டிருக்கிறது.

அன்றுதான் ஒரு குழுவுக்கு முதல்முதலாக பிரம்மச்சரிய தீட்சை அளிக்கப்பட்டது. மனித வரலாற்றின் பல முக்கிய அம்சங்கள் இந்த இடத்தில் இருந்துதான் மிக பிரம்மாண்டமாய் எழப்போகிறது என அன்று சத்குருவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பிப்ரவரி 16, 2017 1.00pm

ஈஷா விழா என்றாலே அதில் நேர்த்தியும் தெய்வீகமும் இருக்கும்! ஆனால், இது ஈஷாவில் இதுவரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளில்,

பிரம்மாண்டத்திற்கெல்லாம் பிரம்மாண்டம்!
இங்கே எதிர்ப்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் பிரம்மாண்டம்!
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டம்! அதற்காக ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் அரங்கம் பிரம்மாண்டம்!

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, மண்ணு தரையில ஒரு சின்ன குடிசைக்குள்ள நம்ம சென்னையிலேர்ந்து வந்த 80 வயது பாட்டி, ஒரு பாட்டு பாட நம்மள்ல கொஞ்சம் பேர் உட்கார்ந்து அந்த மஹாசிவராத்திரியை கொண்டாடினோம். இன்று நம்முடன் கைலாஷ் கேர் இசையைக் கேட்க 73 நாடுகளிலிருந்து மக்கள் வரவிருக்கிறார்கள்!

இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் அற்புதத் தருணங்களை உங்களிடம் பகிரவிருக்கிறோம். இங்கே ஈஷா யோக மையத்தில் தன்னார்வத் தொண்டர்களின் கைவண்ணத்தையும் சத்குருவின் அருளில் நிகழவிருக்கும் பிரம்மாண்டத்தையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கவிருக்கிறோம்.

மேலும், நாம் கடந்து வந்த பாதையை; முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள், பிரம்மச்சாரிகளின் அனுபவத்தில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற மஹாசிவராத்திரியின் சுவாரஸ்ய நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்!

இணைந்திருங்கள்!