ஐக்கிய நாடுகளின் UNICEF அமைப்புடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை ஆந்திர மாநிலத்தில் நிகழ்த்திய ‘ஈஷா கிராமோத்சவம்’ நிகழ்ச்சி பற்றி தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக!

அநேகமாக இதுவே முதல்முறை, லங்கா நாகமணி தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து வெளிவந்து, பயத்தை வென்று, எறிபந்தாட்டாத்தின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு விளையாடுவது. திங்கட்கிழமைன்று விசாகப்பட்டினம் ராஜீவ் காந்தி போர்ட் உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற பதிமூன்றாவது ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணியில் அவரும் அங்கம் வகித்திருந்தார்.

"ஒரு நாள் வீட்டை விட்டு வெளியில் வந்து எறிபந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இது திரைப்படத்தில் வருவதுபோல் உள்ளது, உண்மையாகவே நம்ப முடியவில்லை" என்று பெருமையுடன் கூறினார் நாகமணி.

சோன்டயாம் கிராமவாசியான இவர் தனது கணவரை இழந்து மகனுடன் தன் தாயார் வீட்டில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஈஷா அறக்கட்டளையின் கிராமப்புத்துணர்வு இயக்கம் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட ஒன்பது மாத கால பயிற்சி, அவர் தன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தன்மையையே மாற்றியது. "ஒரு நாள் வீட்டை விட்டு வெளியில் வந்து எறிபந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இது திரைப்படத்தில் வருவதுபோல் உள்ளது, உண்மையாகவே நம்ப முடியவில்லை" என்று பெருமையுடன் கூறினார் நாகமணி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்புடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்திருந்த ஈஷா கிராமோத்சவம் நிகழ்ச்சியில் நாகமணியைப் போல கலந்து கொண்ட பல ஆண்களும் பெண்களும் எப்படி தங்களது துயரங்களை மறந்து ஒரு அணியாக இணைந்து கிராமங்களுக்கிடையேயான போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டோம் என்பதைப் பகிர்ந்து கொண்டனர்.

நெலடூருவைச் சேர்ந்த பி.ரமா, இந்த விளையாட்டு நட்பை வளர்ப்பதற்கான ஒரு கருவியாக அமைந்ததாக மனநிறைவுடன் கூறினார். அவர் கேப்டனாக இருந்த பெண்கள் எறிபந்து அணியில் அவரது மாமியாரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இறுதி கைபந்தாட்டப் போட்டியில் வேமகோட்டிபாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அணியினர் வெற்றி பெற்றனர், பெண்கள் எறிபந்து போட்டியில் சோன்ட்யம் கிராம அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆகியோர் கிராமோத்சவம் நிகழ்ச்சியின் இறுதி நாள் ஆட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நன்றி: The Hindu