ஈஷா கிராமோத்சவம் 2016

நாள் முழுக்க கொண்டாட்டம்! வண்ணமிகு அலங்கரம்! நாட்டுப்புற கலைகளின் உற்சாக அணிவகுப்பு!

நேரடி இணைய வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள்!
வண்ண புகைப்படங்களுடன் கிராமோத்சவ நிகழ்வுகளை பார்த்து படித்து இரசிக்கலாம்!

நாள் & நேரம்: செப்டம்பர் 4, காலை 9 மணிமுதல்

4 Sep - 8.26pm

கிராமோத்சவ மேடையில் சத்குருவின் உரை…

அடுத்த கிராமோத்சவ திருவிழாவில் தமிழகத்தின் 53000 கிராமங்களும் பங்குபெற வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்திய சத்குரு, இதற்காக தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் வருடத்தில் 5 நாட்கள் செலவழித்து செயல்புரியவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கான பயிற்சிகள் ஈஷாவில் வழங்கப்படும் என்று அறிவித்த சத்குரு, அடுத்த ஆண்டு கிராமோத்சவ போட்டிகளின் முதற்பரிசு ரூ.5 லட்சம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனை வெல்வதற்கு உங்கள் ஊரிலேயே ஒரு அணியை தயார் செய்யுங்கள் அதோடு அனைத்து கிராம இளைஞர்களிடமும் தெரிவியுங்கள் என்று உற்சாகமாக அறிவித்தார்.

fin1

fin2

4 Sep - 7.34pm

வெற்றிபெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்தனர்!

ஆண்கள் வாலிபால் போட்டியில் வேலூர் லத்தேரி அணியினர், பெண்கள் எறிபந்து போட்டியில் கோவை தேவராயபுரம் அணியினர் முதல்பரிசை பெற்றனர்

ஆண்கள் வாலிபால் போட்டியில் கடலூர் கருங்குழி அணியினர், பெண்கள் எறிபந்து போட்டியில் கோபி முருகன்புதூர் அணியினர் இரண்டாம் பரிசைப் பெற்றனர்.

கபடி போட்டியில் கோவை தேவராயபுரம் அணியினர் முதற்பரிசை பெற்றனர்.

பாரா ஒலிம்பிக் கைப்பந்து போட்டியில் கலந்துகொண்ட மாற்று திறனாளிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

f1

f2

f3

f4

f5

f6

f7

4 Sep - 7.08pm

ஈஷா கிராமோத்சவம் பற்றி பிரபலங்கள்…

4 Sep - 7.00pm

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய களரிப்பயட்டு, பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது!

samskriti

4 Sep - 6.45pm

விறுவிறுப்பாக நடந்த ஆண்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியில் வேலூர் லத்தேரி அணி கடலூர் அணியை போராடி வீழ்த்தியது!

v1

v2

v3

v4

men volly

4 Sep - 5.30pm

பெண்கள் எறிபந்து போட்டியில் தேவராயபுரம் அணி வெற்றி வாகை சூடியது!

ஆண்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியை மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் மற்றும் சத்குரு, முதல் சர்வீஸ் செய்து துவங்கி வைத்தனர்

வாலிபால் இறுதிப்போட்டி கடலூர் கருங்குழி அணிக்கும் வேலூர் லத்தேரி அணிக்கும் இடையே நடைபெறுகிறது

1

3

2

4

5

4 Sep - 4.53pm

பெண்களுக்கான எறிபந்து இறுதி போட்டியை முதல் சர்வீஸ் செய்து மேதகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் துவங்கி வைத்தார்.

இறுதிப்போட்டியில் கோபி முருகன்புதூர் அணி மற்றும் கோவை தேவராயபுரம் அணியினர் மோதுகின்றனர்.

20160904_SUN_0765-e

20160904_SUN_0719-e

20160904_SUN_0721-e

20160904_SUN_0786-e

20160904_SUN_0728-e

4 Sep - 4.36pm

கலைஞர்கள் ஒன்றானால் ரசிகர்களுக்கு சந்தோஷம்!

ஆடிக்களைத்த மயிலாட்ட குழுவினருக்கு தாகம் தணிக்கும் ராஜா ராணி ஆட்டக் குழுவினர்

water

4 Sep - 4.17pm

9 முறை ஈஷா கிராமோத்சவம் வெற்றியாளர்களான கோபிச்செட்டிப்பாளையம் முருகன்புதூர் அணியும் 3 முறை கோப்பையை அடித்துச் சென்ற கோவை தேவராயபுரம் அணியினரும் ஆடுகளத்தில் களமிறங்க காத்திருக்கின்றனர். இரு அணியை சேர்ந்த பெண்களுக்கும் நமது வாழ்த்துகள். இம்முறை த்ரோபால் கோப்பையை வெல்லப் போவது யார் எனும் கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் ஆட்டம் பதில் சொல்லும்…

4 Sep - 4.12pm

நுழைவாயிலில் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க காத்திருக்கும் தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைக் குழுவினர்.

IMG-20160904-WA0121

4 Sep - 4.11pm

மேட்டூர் குஞ்சாண்டியூர் பெண்களும் விழுப்புரம் பத்தியாபேட்டை பெண்களும் கடுமையாய் போட்டி போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். த்ரோபால் போட்டியில் 3வது இடம் பிடிக்கப் போவது யார்?

மேட்டூர் குஞ்சாண்டியூர் பெண்கள் நேரடி செட்களில் வெற்றி பெற்று 3வது இடத்தை பெற்றனர்.

IMG-20160904-WA0109

IMG-20160904-WA0108

4 Sep - 4.02pm

ஒரு புறம் நாட்டுப்புற கலைகள் அரங்கேற, இன்னொருபுறம் உணவுத் திருவிழாவில் கிராமிய உணவுகளை ருசிப்பதில் லயித்துள்ளனர் பார்வையாளர்கள்.

WhatsApp Image 2016-09-04 at 1.04.00 PM

WhatsApp Image 2016-09-04 at 2.04.58 PM

4 Sep - 3.42pm

கலைமாமணி திரு.முத்துக்குமார் குழுவினர், சிவன்-பார்வதி, பத்திரகாளி ஆட்டங்களை ஆடி பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர்!

உற்சாகமாய் நடந்தேறிய உறியடி விளையாட்டு!

IMG-20160904-WA0088

IMG-20160904-WA0095

IMG-20160904-WA0097

4 Sep - 3.09pm

“ஈஷா கிராமிய கலைக் குழுவினருக்கு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். கிராமத்து இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிப்பதற்கு ஈஷா எங்களை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சியில் நானும் பங்களிப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்!”

– கடந்த 6 வருடங்களாக ஈஷா கிராமோத்சவத்தில் தங்களது நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை வழங்கி வரும்
அகஸ்டின்… (சகா கலைக்குழு தூத்துக்குடி )

IMG-20160904-WA0087

IMG-20160904-WA0086

4 Sep - 2.21pm

இரு அணிகளும் சமபலத்துடன் போட்டியிட்டு வருகின்றனர். முதல் செட் முடிவில் கோவை தீனம்பாளையம் வெற்றி பெற்றுள்ளது. மதுரை மக்களே உங்கள் மாவட்டத்தை சேர்ந்த சத்திரப்பட்டி வெற்றிபெற உங்கள் வாழ்த்துகளும் ஊக்கமும் அவசியம்.

IMG-20160904-WA0014

4 Sep - 2.04pm

“அரசு சாரா தனியார் அமைப்பான ஈஷா இத்தனை நாட்டுப்புற கலைகளையும் ஓரிடத்தில் அரங்கேற்றியது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது!

விளையாட்டையும் கலைகளையும் புத்துயிர்கொள்ளச் செய்யும் ஈஷாவின் இந்த முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!”

– பம்பையாட்டம் கலைக் குழு தலைவர் ஸ்ரீதரன், தர்மபுரி

IMG-20160904-WA0078 IMG-20160904-WA0079

4 Sep - 1.51pm

3ம் இடம் யாருக்கு?

பரபரப்பான வாலிபால் போட்டிக்கு மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அணியும் கோவை மாவட்டம் தீனம்பாளையம் அணியும் தயாராகிக் கொண்டிருக்கிறது!

IMG-20160904-WA0013

Save

4 Sep - 12.45pm

ஈஷா கிராமோத்சவம் நிகழ்வுகள் உடனுக்குடன்!

சிவனுக்கு பிரியமான பம்பை இசைக் கருவியுடன் பம்பையாட்டம்!

கயிலாய ஆட்டம் எனச் சொல்லப்படும் பம்பையாட்டம் பிரத்யேகமாக ஈஷா கிராமோத்சவத்தில்….
#Gramotsavam

IMG-20160904-WA0050

IMG-20160904-WA0052_1

4 Sep - 12.25pm

முகமூடி பொம்மையாட்டம்!

முகமூடி அணிந்தபடி நளினமாய் ஆடிய பொம்மையாட்ட கலைஞர்!

4 Sep - 12.15pm

கச்சிதமான காவடியாட்டம்!

காவடியாட்டம் ஆடி அனைவரையும் தன் வசப்படுத்திய 75 வயது கலைஞர், கண்களால் ஊசியை எடுத்தார்… தலையில் காவடியை வைத்தபடி!!

IMG-20160904-WA0034

4 Sep - 11.39am

வெள்ளிப் பிரம்பெடுத்து வாறாரய்யா கருப்பசாமி…

களைகட்டிய கருப்பசாமியாட்டம்!

4 Sep - 11.24am

IMG-20160904-WA0006

பெண்கள் த்ரோ பால் போட்டியுடன் கோலாகலமாக துவங்குகிறது ஈஷா கிராமோத்சவம்!

3வது 4வது இடங்களுக்கான போட்டியில் குஞ்சாண்டியூர் (மேட்டூர்) மற்றும் பாத்தியபேட்டை ( விழுப்புரம்) அணிகள் 10 மணியளவில் மோதுகின்றன.

தொடர்ந்து நிகழ்வுகளை உடனுக்குடன் பதிகிறோம் எங்களுடன் இணைந்திருங்கள்!
சாணம் மொழுகியாச்சு! கோலப் போட்டிக்கு நாங்க ரெடி!

உற்சாகத்தில் கிராமோத்சவ பெண்கள்!
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert