ஈஷா தேசிய கல்வி மாநாடு

ஈஷா தேசிய கல்வி மாநாடு, Isha desiya kalvi manadu

5 Nov - 6.50pm

புதுமையான முயற்சி! மாபெரும் வெற்றி!

இது ஈஷா வித்யா பள்ளிகளின் 10 ஆம் ஆண்டு விழா மட்டுமல்ல, ஒரு புதிய கல்விக் கலாச்சாரத்தின் விதை! ஒரு ஆசிரியரால் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் மாற்றத்தினை ஏற்படுத்த இயலும். இங்கே 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் தலைவர்கள் என அனைத்து விதமான மக்களும் புதிய சிந்தனைகளை, புதிய எண்ணங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த சங்கமத்தின் மூலம் கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த இயலும். இந்த விதை மென்மேலும் வளர்ந்து, உயர்ந்த மனிதர்களை உருவாக்கிடும். மனிதர்கள் உயர்ந்த நிலையில் இருந்தால் தேசம் உயர்ந்திடும்.

அதற்குண்டான அத்தனை அம்சங்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றத்திற்கு காத்திருப்போம்!

#InnovateSchooling

20161105_sun_0855-e1

5 Nov - 6.45pm

கல்வி மாநாட்டிலும் காவிரி பிரச்சனை!

கேள்வி
சத்குரு நீங்கள் தமிழகத்திற்கு கர்நாடகா அளித்த பரிசு! ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் தமிழகம் கர்நாடகத்திற்கு அளித்த பரிசு. நீங்கள் இருவரும் முயற்சி செய்து அன்பினால் மாநிலங்களை ஒற்றுமைபடுத்தி காவிரி பிரச்சனையை தீர்க்க இயலாதா?

சத்குரு:

இது அன்பினால் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. அன்பினால் மக்கள்தொகை பெருகும். பள்ளிகள் பெருகும். நீர் மேலாண்மையின் மூலமே இதற்கு தீர்வுகாண முடியும்.

நாம் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த தேசத்தின் ஒவ்வொரு நதியின் நீர்வரத்தும் 8 சதவிகிதம் குறைந்து வருகிறது. நதி பாய்ந்திடும் வழிநெடுகிலும், ஒரு கிலோமீட்டருக்கு இரு பக்கமும் மரங்களை வளர்ப்பது அவசியம். இப்படி செய்வதனால் தற்போது இருப்பதைவிட காவிரியின் நீரினை பலமடங்கு அதிகரிக்க இயலும். இதேபோல், அனைத்து நதிகளுக்கும் செய்ய இயலும். இதற்கான திட்டவரைவினை ஆந்திரபிரதேசத்திற்கும் மத்திய பிரதேசத்திற்கும் அளித்திருக்கிறோம்.

நீர் மேலாண்மை திட்டம் நீரைக் கொண்டு வரும். அன்பு நீரைக் கொண்டு வராது.

#InnovateSchooling

20161105_sun_0810-e1

5 Nov - 6.30pm

ஆசிரியருக்கு யோகா தேவையா?

சத்குரு:

மாணவர்கள் புத்தம் புது உயிர். உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் அவர்களை பலநேரங்களில் பெற்றவர்களாலேயே கையாள முடியவில்லை. ஒரு குழந்தையை கையாள குறைந்தது 10 பேருடைய சக்தி தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சக்திநிலை இல்லாததால், பெரும்பாலான பெற்றோர் செய்வது அந்தக் குழந்தையை அடக்குவது மட்டும்தான். ஒரு குழந்தையை அதன் உயிர்ப்பு மாறாமல் வளர்க்க பெற்றோர் உயிர்ப்புடன் இருப்பது அவசியம்.

ஒரு குழந்தையை பராமரிக்கும் பெற்றோருக்கே இப்படி என்றால், 100 குழந்தைகளை வகுப்பில் கொண்ட ஆசிரியர்கள்?? நிச்சயம் உங்களுக்கு யோகா தேவை. உங்களை சக்தியாய் வைத்துக்கொள்ள யோகா உதவும்.

#InnovateSchooling

sadhguru-conference-2

5 Nov - 6.14pm

நிகழ்ச்சியின் நிறைவு நேரத்தில் மேடையில் சத்குரு…

சத்குரு:

உங்கள் திறமையை 100 சதவிகிதம் அதிகரியுங்கள்!
நீங்கள் ஒரே ஒரு 24 மணிநேரம் தொடர்ந்து ஆனந்தமாக இருந்தால் உங்கள் மூளை செயல்படும் திறன் 100 சதவிகிதம் அதிகரிக்கும். என் அனுபவத்தில் இது உண்மை. முதலில் ஆசிரியர்கள் ஆனந்தமாக இருந்தால்தான் அவர்களது மாணவர்களை ஊக்கப்படுத்த இயலும். ஆசிரியர்கள் உங்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ளவிட்டால் உங்களால் யாரையும் ஊக்குவிக்க இயலாது.

மேற்கத்திய வழியில் நாம் கல்வியை கொண்டு சென்றுவிட்டோம். இது மிகப் பெரிய குற்றம்! வேலைவாய்ப்பினை மையமாகக் கொண்ட கல்வித் திட்டம் இப்போது இருக்கிறது. இவர்கள் மாம்பழத்திலேயே கவனம் செலுத்துகிறார்கள். மரத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. கவனம் செலுத்த வேண்டியது மரத்தின் மீது, அப்போது கனி காய்த்து கொழிக்கும்.

பங்கேற்பாளர்கள், சத்குருவிடம் வரிசையாய் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்… தொடர்ந்து பதிவோம்.

#InnovateSchooling

sadhguru-conference-1

5 Nov - 6.04pm

ஈஷா வித்யா மாணவர்களின் நடன நிகழ்ச்சி!

பரதத்தை நளினத்துடனும் ஈடுபாட்டுடனும் மேடையேற்றினர் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள். மாலை நேர வகுப்பு மாணவர்களின் நடனத்திற்கு எழுந்த கரகோஷத்துடன் துவங்கியது. அவர்களது ஒருங்கிணைப்பும் நடனத்தின் அழகும் பார்வையாளர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது.

கிராமியக் கலைகளையும் மாணவர்கள் ஒரு கை பார்த்தனர். தலையில் கரகம் எடுத்து, நளினமாய் ஆடினர். நெருப்புப் பந்தை தலையில் வைத்து சுழற்றினர். கைகளில் வைத்து வித்தைகள் காட்டினர். சிலம்பத்தையும் லாவகமாய் வீசினர். மாணவர்கள் மேடையேறி இறங்கும்வரை அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. காரணம் – அத்தனையையும் செய்துகாட்டியது, நடுநிலைப் பள்ளி மாணவ-மாணவியர்.

#InnovateSchooling

20161105_sun_0575-e1

20161105_sun_0592-e1

20161105_sun_0596-e1

20161105_sun_0605-e1

20161105_sun_0799-e1

20161105_sun_0803-e1

folk2

folk1

5 Nov - 5.17pm

ஹெலிக்ஸ் டிஸ்லெக்சியா பள்ளியிலிருந்து வரும் திரு. செல்வம் அவர்கள் ஈஷா யோக மையத்தில் இருப்பது ஒரு முழுமை உணர்வை எனக்குள் ஏற்படுத்துகிறது. இங்கேயே தங்கிவிடலாம் போல் இருக்கிறது. இங்கிருக்கும் சூழல் மிக அருமையாக இருக்கிறது,” என்கிறார். இவர் இன்னும் ஈஷா யோகா பயிற்சிகூட கற்கவில்லை என்பது கூடுதல் செய்தி.

5 Nov - 4.58pm

NCERT யின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர் ஜே. எஸ். ராஜ்புத் அவர்கள் பேசியபோது…

கல்வியாளர், எழுத்தாளர், NCERT யின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ பேராசிரியர் ஜே. எஸ். ராஜ்புத் அவர்கள் பேசும்போது, “நான் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு சென்று வந்தேன். அங்கே இருக்கும் மாணவர்களைச் சந்தித்தேன். நான் அந்த மாணவர்களின் கண்களை கவனித்திருந்தேன்.

அந்தக் குழந்தைகள் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். தாம் சரியாக பேசுகிறோமா இல்லையா என எந்தக் கவலையும் இல்லை. தாங்கள் உருவாக்கிய வரைபடத்தையும் கைவினைப் பொருட்களையும் மிகுந்த பெருமையுடன் எனக்குக் காட்டினார்கள். அவர்களிடம் எனக்கு மிகப் பிடித்தது, பளிச்சிட்ட அவர்களது கண்கள். அவர்களது தன்னம்பிக்கை என்னை வியப்பில் ஆழ்த்தியது,” என்றார்.

#InnovateSchooling

rajput

5 Nov - 4.53pm

ஈஷாவால் கிடைத்த விருது!

“நான் 1994ல் இருந்து தொடர்ந்து ஈஷா யோகா பயிற்சிகளை செய்து வருகிறேன். அது என்னை பலவிதத்தில் மாற்றியது. இதனால், என் கல்விப் பணியில் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனக்கு ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு ஆசிரியர் விருது கிடைத்தது,” என்கிறார் ஈரோடு கங்காபுரம் பப்ளிக் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. மோகனா.

#InnovateSchooling

5 Nov - 4.19pm

நிரந்தர மாணவர்!

ஆசிரியர் என்பவர் ஒரு நிரந்தர மாணவர். ஒரு தாய் குழந்தையை பெற்றெடுக்கிறாள். அவனை மனிதனாக உருவாக்குவது ஒரு ஆசிரியரே. கல்வி ஒரு தொழில் அல்ல. ஒரு சிறந்த ஆசிரியர் அடுத்து வரும் 30 தலைமுறைகளுக்கு பொறுப்பாகிறார் என்றார் UGCன் முன்னாள் தலைவர் பேராசிரியர் திரு. தேவராஜ் அவர்கள்.

#InnovateSchooling

devraj

5 Nov - 4.16pm

தொழில்நுட்பமே தீர்வு!

“எல்லா சவால்களுக்கும் ஒரே ஒரு தீர்வுதொழில்நுட்பமே தீர்வு!

“எல்லா சவால்களுக்கும் ஒரே ஒரு தீர்வு தொழில்நுட்பம்தான். டெக்னோ எனேபில்ட் வகுப்பறைகள் (techno enabled classrooms) இது கல்வியாளருக்கு பதிலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் அல்ல. என்றுமே தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு மாற்றாகாது.

கல்வியாளருக்கும் மாணவர்களுக்கும் இடையே இருக்கும் அனைத்து பரிமாற்றங்களும் தொழில்நுட்பத்தின் மூலம் பரிமாறப்பட வேண்டும்.

ஒவ்வொரு வகுப்பறையும் 4ஜி இணையதள இணைப்பு இருக்க வேண்டும்,” என புரட்சிகரமான மாற்றத்திற்கான வழியினை கூறினார் TERI பிரகிருதி பள்ளியின் இயக்குநர் திருமதி. லதா வைத்தியநாதன்.

#InnovateSchooling

20161105_sun_0658-e1

20161105_sun_0664-e1

20161105_sun_0671-e1

20161105_sun_0680-e1

20161105_sun_0692-e1

20161105_sun_0646-e1

5 Nov - 3.36pm

மதிய உணவு இடைவெளியில் இங்கிருக்கும் பங்கேற்பாளர்கள் சிலரிடம் ஈஷா வித்யா தேசிய கல்வி மாநாடு பற்றிக் கேட்டோம்…

“ஈஷா யோக மையத்தில் நிலவும் அமைதி என்னை வியக்க வைக்கிறது. இவ்வளவு கூட்டம் இருக்கும் போதும் இங்கே இவ்வளவு செயல்கள் நடக்கும் போதும் இங்கே ஒருவித அமைதி நிலவுகிறது,” என்று கூறுகிறார் பெங்களூர் IITல் 17 வருடங்கள் பணிபுரிந்து தற்போது கல்விப் பணியில் இருக்கும் புஷ்பா கூறுகிறார்.

pushpa

“இங்கிருந்த அரை நாளிலேயே எனக்குள் பல மாற்றங்கள் நிகழ்வதை காண முடிகிறது,” எனக் கூறுகிறார் குற்றாலம் பாரத் மாண்டசோரியின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் காந்திமதி.

gandimathi

நான் மிகுந்த உத்வேகத்துடன் இருக்கிறேன். எங்கள் பள்ளிக்கு திரும்பும்போது பாடத்திட்டத்தை மறுபரிசீலினை செய்யவிருக்கிறேன் என APSWR ஜூனியர் காலேஜின் தலைமை ஆசிரியர் திருமதி. பிரேமா ராவ் கூறினார்.

prema-rao

நன்னையா லிங்கம்மாள் பாலிடெக்னிக்கைச் சேர்ந்த முத்துசுவாமி மற்றும் பாஸ்கர் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறும்போது, “ஆசிரமத்தின் கட்டிட அமைப்பு என்னை வியக்க வைக்கிறது. புதுமையாகவும் படைப்புத்திறனுடன் இவ்விடம் உருவாக்கப்பட்டிருக்கிறது,” என்றனர்.

#InnovateSchooling

5 Nov - 3.19pm

இந்த தேசம் உலகிற்கு முன்னோடி!

நம் பாடத்திட்டத்தில் நவீன அறிவியல் மட்டுமல்லாமல் நமது பாரம்பரியத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.

இந்தியா மனித இனங்களின் தொட்டில். மனிதன் முதலில் பேசத் துவங்கிய இடம். வரலாற்றின் தாய். புராணங்களின் கொள்ளுப்பாட்டி. பாரம்பரியங்களில் இந்த தேசம் நம் கொள்ளுப்பாட்டியின் தாய் ஆகும் என நம் இந்தியாவைப் பார்த்து மார்க் ட்வைன் அதிசயத்துக் கூறினார்.

ஆனால், அந்தப் பாரம்பரியம் முழுமையாக இன்றையக் கல்வி முறையில் இல்லை. என TERI Prakriti பள்ளியின் இயக்குநர் திருமதி. லதா வைத்தியநாதன் தன் உரையில் கூறினார்.

#InnovateSchooling

latha-v

5 Nov - 3.18pm

திருமதி ரேகா பூரி பேசுகையில் கதை கூறுங்கள் என்றார்…

கதை ஒருவருக்குள் ஆழமான தாக்குதலை உருவாக்குகிறது. சிவன் கணேசனுக்கு யானைத் தலையினை வைத்த கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த மண்ணில் சொல்லப் பட்டு வருகிறது. இந்தக் கதையில் நாம் ஏன் கேள்வி கேட்கவில்லை?

“மண்ணில் எப்படி பார்வதி ஒரு குழந்தைதை உருவாக்கினாள்? யானையின் தலை எப்படி மனிதனுக்குள் சிவன் பொருத்தினார்?

சிவன் ஒரு நரம்பியல் நிபுணர் என்பதால் அவர் கணேசனின் தலையை பொருத்தினாரா?

இப்படி கேள்விக் கேட்க நாம் குழந்தைகளை அனுமதிக்கிறோமா?”

இயற்பியல் மேதை ஜார்ஜ் கேமோ, அணு, அணுவின் அமைப்பு, மூலக்கூறுகள், மூலக்கூறுகளின் அமைப்பினை புரிந்துகொள்ள பல கதைகளை உருவாக்கினார். கதை மூலமாகக் கூறும்போது அது சுவாரஸ்யமாகவும் ஆழமாகவும் குழந்தைகளின் மனதில் பதிகிறது.

இதை ஆமோதித்த திரு. ராகேஷ் கௌல், “இந்தியர்கள் கதை சொல்வதில் மிகத் தேர்ந்தவர்கள். அவர்களின் கதை சொல்லும் திறனை மேம்படுத்தினால், அனுமதித்தால் கற்பதிலும் அதை செயல்படுத்துவதிலும் ஆகச் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது,” என்றார்.

#InnovateSchooling

rekha-puri

5 Nov - 3.17pm

பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டிய 5 பேர் கொண்ட குழு

சத்குரு மற்றும் மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவ்தேக்கர் அவர்களை தொடர்ந்து TERI Prakriti பள்ளியின் இயக்குநர் திருமதி. லதா வைத்தியநாதன் சிறப்புரை ஆற்றினார்கள்.

அவரைத் தொடர்ந்து 5 பேர் ஒரு கல்வியாளர்கள் குழு பங்கேற்பாளர்களுக்கு தமது அனுபவங்களையும் கல்வி குறித்து தங்களுடைய ஆழமான கண்ணோட்டத்தையும் பகிர்ந்துக் கொண்டது. இந்த விவாதத்தில் பங்கு பெற்றவர்கள்…

திரு. ராகேஷ் கௌல் – அமெரிக்காவிலுள்ள பெரு வணிக நிறுவனங்களின் தலைவராய் இருந்த அனுபவசாலி. எழுத்தாளராகவும் வரலாற்றிலும் தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர்.

திருமதி. கீதா நாராயணன் – 4 தலைமுறைகளாய் கல்விப் பணியில் ஈடுபட்டு வருபவர்.

திருமதி. ரேகா பூரி – இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர்களில் ஒருவராய் இருப்பவர். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருபவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகளை நிறுவியிருப்பவர்.

டாக்டர். பிந்து ராணா – இந்தியாவில், கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி & மேம்பாட்டு துறையில் ஈடுபட முன்னோடியாய் இருந்தவர்.

இந்த கலாந்தாய்வினை ஒருங்கிணைத்தவர் திரு. சிபி. விஷ்வநாத். திரு. விஷ்வநாத் அவர்கள் ஒரு கல்வியாளர், பாடகர், சர்வதேச வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்த கலாந்தாய்வில், இன்றைய கல்விசார் பிரச்சனைகள், அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டது.

#InnovateSchooling

20161105_sun_0470-e1

20161105_sun_0499-e1

20161105_sun_0506-e1

20161105_sun_0519-e1

5 Nov - 2.37pm

விவசாயம்:

சத்குரு:

12,000 வருடங்களாக நம் தேசத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தது. நம் மரபணுவிலேயே நமக்கு விவசாயத்தின் அனுபவம் இருக்கிறது. விவசாயத்தினை பள்ளிகளில் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும். தனிமனிதன் மலர்ந்திட உதவிட வேண்டும். உயர்ந்த மனிதர்களை உருவாக்காமல் உயர்ந்த நாட்டினை உருவாக்க இயலாது.

#InnovateSchooling

5 Nov - 1.21pm

கேள்வியை அனுமதியுங்கள்

சத்குரு:

அரசாங்கம் கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும். திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தக் கூடாது.
அரசாங்கம் பலவிதமான கல்விமுறைகளை உருவாக்க வேண்டும். சமுதாயத்தின் பல மட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்றார்போல பலவிதமாக கல்விமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், 3 வருடங்கள் மட்டுமே ஒரு நிறுவனத்தில் வாழும் போக்கு அதிகரித்து வருகிறது. திருமணங்கள்கூட நிலைத்திருப்பதில்லை. ஆனால், அவர்கள் தன் வாழ்நாளில் சுமார் 20 வருடங்களை கல்வியில் செலவழிக்கிறார்கள். அங்கே நாம் அவர்களை செதுக்கிட வேண்டும். தற்போது, நமக்கிருக்கும் கல்விமுறை நம்மை காலணி ஆதிக்கத்தின்போது உருவாக்கிய கல்விமுறை. அவர்கள் நம்மை கேள்வி கேட்காமல் இருக்க வைப்பதற்காக அப்படி உருவாக்கினார்கள்.

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் தேசத்தில் தேடுதல் கலாச்சாரம் இருந்தது. கடவுளே இங்கே வந்தாலும் நாம் அவரை கேள்வி கேட்கும் வழக்கம் இங்கு இருந்தது. எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு புத்திசாலித்தனம் மேம்பட்டு வளரும். கல்வியாளர்கள் மாணவர்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்.

#InnovateSchooling

20161105_sun_0338-e1

5 Nov - 1.08pm

மாண்புமிகு அமைச்சரை தொடர்ந்து சத்குரு அவர்கள் தன்னுடைய விழா துவக்க உரையை நிகழ்த்தினார்.

சத்குரு:

ஆசிரியர் தேவையில்லை:

தற்போது மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. கூகுள் பெண் நாம் எதைக் கேட்டாலும் உடனே சொல்கிறாள். எதைக் கேட்டாலும் அந்த நொடியிலேயே அளிக்கிறாள். அதனால், யார் அதிகமான தகவலை சேகரித்து வைத்திருக்கிறார்களோ அவர்தான் உயர்ந்த கல்வியாளர் என கூற இயலாது. அதனால், ஒரு ஆசிரியராக நமது பங்கு மாணவர்களை உற்சாகப்படுத்துவதில் இருக்கவேண்டும்.

பெற்றோரின் பங்கு:

பெற்றவர்கள் தன் குழந்தை படிக்கும் பள்ளிக்கு சென்று அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள், வருடத்தில் ஒரு நாள் ஆண்டு விழாவிற்கு மட்டும செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அதுவும், தன் குழந்தை மேடையில் நிற்கும் அந்த 23 விநாடிகள் செல்போனில் வீடியோ எடுக்க மட்டுமே செல்கிறார்கள். பெற்றவர்களுக்கு ஈடுபாடு இல்லாதபோது கல்வியாளர்களிடம் ஈடுபாட்டை எப்படி எதிர்ப்பார்க்க இயலும்.

நாம் மாணவராக இருக்கும்போது எந்த ஆசிரியர் ஈடுபாட்டுடன் பாடத்தை அளித்தாரோ அந்த பாடம் மட்டுமே நமக்கு பிடிக்கும். இது ஆசிரியரின் கையில்தான் இருக்கிறது. எந்த பாடமும் சிறந்த பாடம் இல்லை.

#InnovateSchooling

20161105_sun_0326-e1

20161105_sun_0339-e1

5 Nov - 12.16pm

தரத்தினை உயர்த்திடும் நேரம் வந்துவிட்டது

மாண்புமிகு மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவ்தேக்கரின் உரை…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வியாளர்களும் இங்கே குழுமியிருக்க அமைச்சர் திரு. பிரகாஷ் மிகவும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.

“கல்வி ஒரு தேசிய கொள்கை இது அரசியல் கொள்கை அல்ல! இது வருங்கால தலைமுறையை உருவாக்கிடும் ஒரு செயல். நான் திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறேன். யாரும் எந்த யோசனையையும் அளித்தால் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். ஒரு வகுப்பறை உரையாடலை அனுமதிப்பதாக இருக்க வேண்டும். கேள்வி கேட்கும் குழந்தையை ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும்.

நாம் கல்வியில் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். தற்போது, 270 மில்லியன் மாணவர்கள் நம் தேசத்தில் கல்வி கற்கிறார்கள். ஆனால், ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை. தற்போது தரத்தினை உயர்த்திடும் கல்விமுறையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

#InnovateSchooling

20161105_sun_0257-e1

20161105_sun_0270-e1

20161105_sun_0289-e1

20161105_sun_0307-e1

5 Nov - 10.38am

எனது ஆசீர்வாதம்

சத்குரு அவர்களும் மாண்புமிகு மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜாவ்தேக்கர் அவர்களும் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.

ஈஷா யோக மையத்தினையும் ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தையும் சுற்றி பார்த்துவிட்டு வந்து அமைச்சர், “நான் இங்கே இருப்பது என் வாழ்வின் ஆசீர்வாதம்,” என்று மகிழ்வுடன் கூறினார்.

#InnovateSchooling

20161105_sun_0222-e1

20161105_sun_0046-e

20161105_sun_0017-e

5 Nov - 10.03am

எங்கள் தளிர்கள்

ஒவ்வொரு ஆசிரியரையும் நமஸ்காரம் செய்திட
பங்கேற்பாளர்களை வருகைப் பதிவு செய்திட
உணவு பரிமாறிட
ஆசிரியர்களை வரிசையில் அமர்த்திட
விழா மேடைக்குப் பின்னால் நின்று குத்துவிளக்கிலிருந்து
மலர்மாலை வரை ஒருங்கிணைத்திட எங்கெங்கும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள்!
பத்தாண்டுகளாய் நாங்கள் உருவாக்கிய தளிர்கள்!
இதோ இந்த உலகிற்கு மணம் வீசும் மலர்களாய்

#Innovateschooling

20161105_sun_0069-e1

20161105_sun_0060-e1

isha-vidhya-volunteering

5 Nov - 10.02am

ஆதியோகி ஆலயம் ஆசிரியர்களால் நிறைகிறது!

ஈஷாவில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி – இது எப்படி இருக்கப் போகிறது?

ஈஷாவைப் பற்றி அறிந்தவர்கள் அறியாதவர்கள் அனைவரும் குழுமியிருக்க ஆதியோகி ஆலயம் ஆசிரியர்களால் நிறைகிறது!

#Innovateschooling

20161105_sun_0056-e1

20161105_sun_0059-e1

isha-vidhya-teacher

5 Nov - 9.59am

நாளைய பாரதம்

அறிவியல் துறையில் புதுமை
பொறியியல் துறையில் புரட்சி
மருத்துவத் துறையில் மனிதநேயம்
அரசியல் ஆள்பவர் மனதில் முதிர்ச்சி
என தேசத்தின் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி நிகழ்த்திட
கல்வித்துறையில் தேவை மறுமலர்ச்சி!
– இது வெறும் கருத்தரங்கல்ல!
நாளைய பாரதத்தினை உருவாக்கிடும் ஒரு தனித்துவமான முயற்சி!

#Innovateschooling

“Innovating India’s Schooling” எனும் இந்த கலந்துரையாடல் சந்திப்பு கூட்டம் ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சில தனிநபர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த சந்திப்புக் கூட்டம் நிகழவுள்ளது. சிறந்த கல்விமுறையை வகுப்பதில் புதிய சிந்தனைகளை வழங்குவது, தங்களுக்குள் இருக்கும் பார்வைகளை முன்வைத்து வழிகாட்டுவது மற்றும் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது போன்றவற்றிற்கு ஒரு தளமாக இது அமையும்.

நாள்: நவம்பர் 5, 2016
இடம்: ஈஷா யோக மையம், கோவை

Live Blogல் எங்களுடன் இணைந்திருங்கள்!

#Innovateschooling




இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert