இறுதிகட்ட முடிவு

இறுதிகட்ட முடிவு, iruthikatta mudivu

இந்த வார ஸ்பாட்டில் சத்குரு, தனக்கும், தன் கவிதைகளுக்கும், இப்படைப்பிற்கும் அடிப்படையில் இருக்கும் ஒற்றுமையை கவிதையாய் வெளிப்படுத்துகிறார். “கல்வி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றால் பண்பட்டவனல்ல நான்… இறுதிகட்ட முடிவின் சாரம் நான்” என்று இக்கவிதையை நிறைவு செய்கிறார்.

இறுதிகட்ட முடிவு

நான் எழுதநினைத்து வருவதல்ல என் கவிதைகள்…
நான் இருக்கும் நிலையின் இயல்பான வெளிப்பாடு அவை.
காய்ந்துபோன மரக்கிளை போன்று தர்க்கத்தின் உருவமான எனக்குள்…
இவை பூத்துக்குலுங்கும் மலர்களாய் மலர்கின்றன.

பசுமையான செடியில் மலரும் பூக்கள்
அச்செடியின் வளத்தில் மறைந்துபோகலாம்.
ஆனால் காய்ந்துபோன மரக்கிளையில் பூக்கும் பூக்களை
யாரும் புறக்கணிக்க இயலாது.

இப்படைப்பும் அதுபோன்றுதான்.
பரந்துவிரிந்த வெறுமையின் மடியில் பிறக்கிறது,
ஆயிரமாயிரம் உயிர்வகைகள்
கற்பனைக்கெட்டாத அழகோடு, புத்துயிரூட்டும் சக்தியோடு.
“படைக்க வேண்டும்” என்ற நோக்கத்தால் உருவானவை அல்ல இவை
மிகக்கவனமாய் செயல்படும்
பாதுகாப்பு முயற்சியின் இயல்பான வெளிப்பாடு இது!
எத்தனை எத்தனை உயிர்கள்…
எல்லாம் “உயிரற்ற” வெட்டவெளியாய் தோன்றும்
இப்பரந்த வெளியினின்று.

கல்வி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றால்
பண்பட்டவனல்ல நான்
இறுதிகட்ட முடிவின் சாரம் நான்!

அன்பும் அருளும்,

Sadhguruஇதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert