வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கூட, நல்ல நேரம், காலம் பார்த்து செல்வதுதான் உகந்தது என்பதை மனதில் வைத்து, "இரவில் சென்றாலும், அரவில் செல்லாதே!" என்ற பழமொழியை கூறியுள்ளனர். இதற்கு சத்குரு தரும் விளக்கம் என்ன?

சத்குரு:

இங்கே அரவு என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது ராகுகாலத்தை என்று அறிந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒவ்வொரு நிமிடமும் நல்ல நிமிடமே.
பயன்படுத்தாமல் தவற விடும் நேரம்தான் கெட்ட நேரம்.

பகலில் போகாமல் இருப்பதற்கு ராகு காலம். இரவில் போகாமல் இருப்பதற்கு இருட்டு என்று காரணங்கள் சொல்ல, இது முழுச் சோம்பேறிகளின் மூளையில் விளைந்த வாக்கியம்.

ஒருநாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் என்று வகுத்ததே மனிதன்தான். வாரம் என்றும், ஏழு கிழமைகள் என்றும் கூட இயற்கை எந்த அளவுகோலும் அமைத்துத் தரவில்லை. எல்லாமே மனிதனின் திட்டமிடல்தான். இதில் ஒவ்வொரு கிழமைக்கும் இது நல்ல நேரம், இது கெட்ட நேரம் என்று எந்த நியதியும் அமைய வாய்ப்பேயில்லை.

ஒருநாளை இருபத்தி நான்கு மணி நேரமாகப் பிரிப்பதற்கு முன்பும் மனிதன் இவ்வுலகல் வாழ்ந்திருக்கிறான். அவனைப் பொறுத்தவரை பகல் - இரவு என்று இரண்டேவித நேரம்தான்.

கடிகாரம் கண்டுபிடிக்கப்படும் முன், நேரம் இவ்வளவு பகுதிகளாக அவனால் அறியப்பட வில்லை.

மனிதன் வேறு வசதிகளுக்காக நாளின் நேரத்தைப் பிரித்தான். மனிதன் பிரித்த நேரத்தை நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் இயற்கை ஏன் பார்க்கப்போகிறது?

வேலையைத் தள்ளிப்போட நினைப்பவர்களுக்கு இது சாதகமாகி விட்டது.

ஒவ்வொரு நிமிடமும் நல்ல நிமிடமே.

பயன்படுத்தாமல் தவற விடும் நேரம்தான் கெட்ட நேரம்.