சப்தமற்ற நிலைக்கு அடித்தளமாய் இருக்கும் சப்தம், நிச்சலனமான விழிப்புணர்வு. "படைப்புக்கும், படைத்தவனுக்கும் அடிப்படையாக இருக்கும் ஆதியில்லாத இந்த சப்தத்தை நீங்கள் கேட்க முடிந்தால், அத்தனையும் இங்கு இருக்கிறது. பிரம்மாண்டமாய் விரிந்த பரந்த வெளியாய் உங்கள் பார்வையில் அது இருக்காது" என்று சப்தத்தின் தன்மையினை சத்குரு அவர்கள் விவரிக்கின்றார்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சப்தத்தில், நான்கு விதங்கள் இருக்கின்றன. முதல் சப்தத்தின் பெயர் 'வைகாரி'. யாராவது பேசும்போது நாம் கேட்பது இதைத்தான். இரண்டாவது வகையான சப்தத்தின் பெயர் 'மத்யமா', அதாவது நடுநிலையானது. இப்போது நான் 'மிட்டாய்' என்று சொன்னாலோ, அல்லது மிட்டாயைப் போல ஒன்றைக் காண்பித்தாலோ, உங்கள் மனம், 'ஓ, மிட்டாய்!' என்று நினைக்கிறது அல்லவா? இது மனதின் கற்பனையோ அல்லது வெறும் அதிர்வோ அல்ல.

சிவன் தனது ஏழு சீடர்களுக்கு யோகாவைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, பல சிக்கலான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவர் பேசவே இல்லை.

'மிட்டாய்' என்பது ஒரு குரல், ஒரு சப்தம், உங்கள் மனதின் ஒரு பரிமாணத்திலிருந்து வெளிப்படுகிறது. இந்தச் சப்தத்தைத்தான் 'மத்யமம்' என்கிறோம். சப்தத்தின் மூன்றாவது பரிமாணத்தின் பெயர் 'பஷ்யந்தி'. இது மனதின் சிந்திக்கும் திறனை குறிக்கிறது. நான் உங்களிடம் மிட்டாயை காண்பிக்கவும் இல்லை, 'மிட்டாய்' என்று சப்தமிடவும் இல்லை, இப்படி வெளியிலிருந்து எந்த குறிப்பும் வராமல் உள்ளுக்குள்ளிருந்து தானாகவே 'மிட்டாய்!' என்று வெளிப்படுகிறது. அது நான் சொன்னதன் எதிரொலியோ, எதிர்வினையோ இல்லை; உங்கள் மனமே உள்ளிருந்து அதை உருவாக்கிக் கொள்கிறது. இதுதான் 'பஷ்யந்தி' எனும் சப்தத்தின் பரிமாணம்.

சப்தத்தின் நான்காவது பரிமாணத்தின் பெயர் 'பர வாக்'. 'வாக்' என்றால் குரல், 'பர' என்றால் தெய்வீகம் அல்லது படைப்பின் மூலம் என்று பொருள். 'பர வாக்' என்றால் படைப்பவனின் குரல். இது உங்கள் மதியை இழந்து, நீங்கள் கேட்க நினைக்கும் விஷயத்தை மட்டுமே கேட்பதைப் பற்றி அல்ல. உலகத்தில் பல தடுமாறும் மனங்கள் கடவுள் பேசுவதைக் கேட்கிறது தானே? அதுபோன்ற முட்டாள்தனங்களைப் பற்றி நான் தற்சமயம் குறிப்பிடவில்லை. நான் படைப்புக்கும், படைத்தவனுக்கும் அடிப்படையாக இருக்கும் அதிர்வைப் பற்றிக் கூறுகிறேன்.

சிவன் தனது ஏழு சீடர்களுக்கு யோகாவைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, பல சிக்கலான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவர் பேசவே இல்லை. ஏழு சீடர்களும், ஏழு விதமான முறைகளில், ஏழு வகையான யோகா முறைகளைக் கற்றுக் கொண்டனர். சிவனைப் பொறுத்தவரை அவர்கள் ஏழு பேரின் மீதும் எந்த ஈடுபாடும் காட்டாதவராக அங்கே அமர்ந்திருந்தார்.

பார்வதி இதைக் குறித்து, "அசாத்தியமான ஏழு ஞானிகள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு ஏதாவது சொல்வதுதானே முறையாக இருக்கும்?" என்றார். அதற்கு சிவன், "நான் சொல்வதைக் அவர்கள் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள்" என்றார். "என்னுடன் இருக்கும் நெருக்கத்தினால் நான் சொல்வது உனக்குக் கேட்கவில்லை. அதனால் நான் உன்னிடம் வாய்திறந்து பேசவேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள்" என்று பார்வதியிடம் சொன்னார். "அவர்கள் என் மனதிலிருப்பதைக் கேட்கிறார்கள்" என்று சொல்லவில்லை. "என் விழிப்புணர்வில் இருப்பதை அவர்கள் கேட்கிறார்கள். மற்ற எல்லாமே வெறும் தொடர்பு கொள்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. அவர்கள் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்," என்றார்.

எனவே சப்தமற்ற நிலைக்கு அடித்தளமாய் இருக்கும் சப்தம், நிச்சலனமான விழிப்புணர்வு, அதனை "பர வாக்" என்கிறோம். வாழ்க்கை, படைப்பு, பிரபஞ்சம், எண்ணங்கள், அனுபவங்கள், வெளிப்பாடுகள் இவற்றின் பிற பரிமாணங்களை மற்றவர்களுக்கு கற்பிக்க முயற்சித்தால், அது முடிவில்லா கதையாகிவிடும். ஏனென்றால் அது முடிவில்லா வான்வெளி மண்டலம் போன்றது. நான் சொல்ல வந்ததைக் கேட்டு இது ஏதோ அகல பிரம்மாண்டமான கதை என்று நினைத்துவிட வேண்டாம், கதை பெரிதல்ல, ஆனால் இந்தப் படைப்பு அத்தனை பெரியது. அதைக் குறிப்பிடவே அப்படிச் சொன்னேன். ஆதியில்லாத இந்த சப்தத்தை நீங்கள் கேட்க முடிந்தால், அத்தனையும் இங்கு இருக்கிறது. பிரம்மாண்டமாய் விரிந்த பரந்த வெளியாய் உங்கள் பார்வையில் அது இருக்காது.